மீண்டும் ஒரு ஷாக்.. கசந்து போன லிவ் இன்! பிரஷாந்தை துரத்திய சுனிதா! என்ன ஒரு நாடகம்..பதறிய பெங்களூரு
பெங்களூர் : இந்தியாவின் தலைநகரான டெல்லியில் லிவ் இன் முறையில் வசித்து வந்த ஷ்ரத்தா - அப்தாப் கொலை வழக்கின் அதிர்ச்சி அடங்குவதற்குள் கர்நாடக மாநிலத்தில் மீண்டும் அதே போன்ற ஒரு கொலை சம்பவம் நடந்திருப்பது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது
மும்பையைச் சேர்ந்த இளைஞர் அஃப்தப் அமீன் பூனாவாலா, இவர் மும்பையில் மல்டிலெவல் கால் சென்டரில் பணியாற்றிய ஷ்ரத்தா என்பவரை மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இவர்களது காதலுக்கு ஷ்ரத்தாவின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி டெல்லியின் மெஹ்ரவல்லியில் உள்ள சத்தர்பூர் பஹாடி பகுதியில் குடியேறி லிவ் - இன் முறையில் வசித்து வந்திருக்கின்றனர்.

லிவ் இன் கொலை
இந்நிலையில் அப்தப்பிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, ஷ்ரத்தா தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த மே 18-ம் தேதி ஷ்ரத்தாவை, அஃப்தப் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசியுள்ளார். இறுதியில் நீண்ட நாட்களாக ஷ்ரத்தாவை தொடர்புகொள்ள முடியாததால் எழுந்த சந்தேகத்தால் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் அஃப்தப் வசமாக சிக்கிக் கொண்டார்.

கர்நாடகாவில் அதிர்ச்சி
இந்த கொலை வழக்கின் அதிர்ச்சி அடங்குவதற்குள் கர்நாடக மாநிலத்தில் மீண்டும் அதே போன்ற ஒரு கொலை சம்பவம் நடந்திருப்பது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வரும் பிரசாந்த் என்பவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார். அவருக்கும் அந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுனிதா என்பவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

சுனிதா - பிரசாந்த்
பெங்களூருவில் வசித்து வந்த சுனிதாவும் பிரசாந்தும் வேலை நிமித்தமாக அடிக்கடி சந்தித்துள்ளனர். பிரசாந்தை விட சுனிதா மூன்று வயது அதிகம் என சொல்லப்படுகிறது. தொடர்ந்து நட்பு ரீதியாக பழகிய இருவரும் அதன் பின்னர் காதலிக்க தொடங்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் காதல் எல்லை மீறி திருமணம் செய்து கொள்ளாமல் லீவ் இன் முறையில் வசிக்க முடிவு செய்து இருக்கிறார்கள். இதை அடுத்து இருவரும் வீட்டை தனியே வாடகைக்கு எடுத்து வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது. நாட்கள் செல்லச் செல்ல பிரசாந்த் தன்னை விட்டு சென்று விடுவாரோ என்று சுனிதாவுக்கு அச்சம் வர ஆரம்பித்திருக்கிறது.

திருமண தகராறு
இதை தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அவர் வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் தனக்கு திருமணத்தில் இஷ்டமில்லை இப்படியே நாம் வாழ்ந்து விடலாம் எனக் கூறியிருக்கிறார். ஆனாலும் சுனிதா விடவில்லை. இதையடுத்து தனது தங்கைக்கு திருமணம் நடந்த உடன் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசாந்தின் தங்கைக்கு திருமணம் முடிந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சுனிதா மீண்டும் பிரசாந்திடம் வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.

கொடூர கொலை
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கடந்த ஏழாம் தேதி சுனிதாவை பிரசாந்த் தாக்கியதோடு அவரது கழுத்தை காலால் மிதித்து கொலை செய்திருக்கிறார். பின்னர் எங்கே தன்னை போலீசார் கைது செய்து சிறைக்கு அனுப்பி விடுவார்களோ என பயந்து சுனிதாவை தூக்கில் தொங்க விட்டிருக்கிறார் .மேலும் இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதிரடி கைது
மருத்துவமனையில் நடத்தப்பட்ட சுனிதாவின் உடற்கூறு ஆய்வில் அவர் தூக்கு போட்டதால் சாகவில்லை அவரது உடலில் பல காயங்கள் இருக்கிறது. கழுத்தும் உடைபட்டு இருக்கிறது என விசாரணை அறிக்கை வந்த நிலையில் பிரசாந்தை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர் அதில் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் சுனிதாவை கொலை செய்ததை பிரசாந்த் ஒப்புக் கொண்டிருக்கிறார். இது தொடர்ந்து தற்போது பிரசாந்த் சிறையில் கம்பி எண்ணி வருகிறார். தொடர்ந்து அதிகரித்து வரும் லிவவ் இன் கொலைகள் இந்தியா முழுவதும் பலத்த அதிர்வலைகள் ஏற்படுத்தியிருக்கிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications