பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடிகை கொடுத்த பாலியல் புகார்.. பல பிரிவுகளில் பெங்களூர் போலீஸ் வழக்குப்பதிவு.. கைதாகிறார் அர்ஜுன்?

Google Oneindia Tamil News

Recommended Video

    நடிகை சுருதி கொடுத்த புகாரில் நடிகர் அர்ஜுன் மீது வழக்கு பதிவு- வீடியோ

    பெங்களூர்: நடிகை ஸ்ருதி ஹரிஹரன், நடிகர் அர்ஜுன் மீது அளித்த பாலியல் புகாரை அடுத்து பெங்களூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அர்ஜுன் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    'விஸ்மயா' என்ற கன்னட திரைப்படத்தில் நடித்தபோது, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிகரன் சமீபத்தில் 'மீடு' இயக்கத்தின் மூலமாக தெரிவித்தார்.

    விஸ்மயா திரைப்படத்தின் தயாரிப்பாளரும் அர்ஜுன் தான். அவர் தன்னை நெருங்கி பின்னால் இருந்து கட்டி பிடித்ததாகவும், தனியாகத்தான் இருக்கிறேன் வீட்டுக்கு வா என்று இரட்டை அர்த்தத்தில் கூறியதாகவும் சுருதி குற்றம்சாட்டி வந்தார்.

    [நடிகையுடன் சமரசமாக போகமாட்டேன்.. தப்பு செய்தவர்களுக்கு சட்டப்படி தண்டனை உறுதி.. அர்ஜுன் ஆவேச பேட்டி]

    வழக்கு தொடர்ந்தார்

    வழக்கு தொடர்ந்தார்

    இந்தக் குற்றச்சாட்டை அர்ஜுன் மருத்துவந்தார். இது தொடர்பாக சமீபத்தில் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டது. ஆனால் அதில் பங்கேற்ற அர்ஜுன், தான் சமரசமாக போகத் தயாரில்லை, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவிக்கவேண்டும் என்று பேட்டியளித்தார். முன்னதாக ஸ்ருதி மீது 5 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் அர்ஜுன்.

    கைது அச்சம்

    கைது அச்சம்

    இந்த நிலையில், ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகாரின் பேரில், அர்ஜுன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354, 354-ஏ, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் கப்பன் பார்க் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். எனவே அர்ஜுன் கைது செய்யப்படுவாரா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து அவர் தரப்பு வழக்கறிஞரான சியாம் சுந்தரிடம் கேட்டபோது, இந்த புகாரின் பேரில் அர்ஜுனை கைது செய்வதற்கான வாய்ப்பு கிடையாது என்று நம்மிடம் தெரிவித்தார். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தனது வழக்கறிஞர்களுடன் அர்ஜுன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இரண்டரை வருடங்கள்

    இரண்டரை வருடங்கள்

    விஸ்மயா திரைப்பட ஷூட்டிங் நடைபெற்ற காலகட்டங்களில் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆகியவற்றில் அத்துமீறல் நடைபெற்றதாக ஸ்ருதி ஹரிகரன் தெரிவித்துள்ளார். அந்த காலகட்டத்தில் திரைப்பட சூட்டிங் நடைபெற்ற ஹெப்பால், யூ.பி.சிட்டி உள்ளிட்ட பெங்களூரின் பல பகுதியில் அத்துமீறல் நடந்துள்ளதாக புகாரில் ஸ்ருதி கூறியுள்ளார்.

    சாட்சிகள்

    சாட்சிகள்

    ஆனால் அப்பகுதிகளில் பதிவான சிசிடிவி காட்சிகள் இப்போது கிடைப்பது சிரமம் என்பதால் அர்ஜுனுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் எதையும் இதுவரை ஸ்ருதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம், நடந்த சம்பவத்திற்கு சாட்சிகள் இருப்பதாக ஸ்ருதி கூறியுள்ளார்..

    English summary
    Cubbon Park police registers FIR against actor Arjun Sarja. The case has been filed against Arjun under IPC Section 354, 354-A and 509. Investigation officer to take decision on arresting the actor.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X