என்ன மசூதி மாதிரி இருக்கு.. மைசூர் பஸ் நிறுத்தத்தை இடித்து தள்ளுங்க..தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆர்டர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: மைசூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் நிறுத்தம் மசூதியின் மேல் இருக்கும் குவிமாடம் (டோம்) வடிவத்தில் உள்ள நிலையில் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்நிலையில் தான் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் பஸ் நிறுத்தத்தை இடிக்க உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாகவில் இந்த ஆண்டு துவக்கம் முதல் மதம் சார்ந்த அடையாளங்கள் தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வருகின்றன. சமீபத்தில் கல்லூரிகளில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு கிளம்பி பெரும் போராட்டங்கள் நடைபெற்றது.

இது மிகப்பெரும் சர்ச்சையான நிலையில் உச்ச நீதிமன்றம் வரை சென்றது. நீதிமன்ற உத்தரவின்பேரில் தற்போதும் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை உள்ளது.

தொடரும் சர்ச்சைகள்

தொடரும் சர்ச்சைகள்

இது ஒருபுறம் இருக்க மாநிலத்தின் பல இடங்களில் சிலர் மதம்சார்ந்த பிரிவினையை ஏற்படுத்தி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மேலும் கர்நாடக புத்தகங்களில் இடம்பெற்றுள்ள மறைந்த மைசூர் மன்னர் திப்பு சுல்தான் தொடர்பான பாடக்குறிப்புகளை நீக்கவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. இது விவாதத்துக்கு உள்ளான நிலையில் பெங்களூர்-மைசூர் இடையே இயங்கி வரும் திப்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயர் உடையார் எக்ஸ்பிரஸ் என மாற்றம் செய்யப்பட்டது. இதில் உடையார் என்பவர் மைசூர் மன்னராவார். மத்திய பாஜக அரசின் இந்த செயலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.

மைசூர் பஸ் நிறுத்த கட்டுமானம்

மைசூர் பஸ் நிறுத்த கட்டுமானம்

இந்நிலையில் தான் தற்போது மைசூரில் இன்னொரு பிரச்சனை எழுந்துள்ளது. அதாவது மைசூரில் இருந்து தமிழ்நாட்டின் ஊட்டி செல்லும் ரோட்டில் பல்வேறு சாலை தொடர்பான பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியை மைசூர் மாநகராட்சி மற்றும் கர்நாடக கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் மைசூர்-ஊட்டி சாலையில் புதிதாக பஸ் நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது.

கிளம்பிய சர்ச்சை

கிளம்பிய சர்ச்சை

இந்த கட்டடத்தின் மேல்புறம் 3 டோம்(குவிமாடம்) அமைக்கப்பட்டுள்ளது. இது மசூதியில் உள்ள டோம் போன்று இருப்பதாக சிலர் கூறினார். இது தான் பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டது. அதாவது இந்த பஸ் நிறுத்தம் மசூதி போன்று உள்ளது. இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் கூறினர். ஆனால் இதனை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இடிக்கப்படும் என எச்சரிக்கை

இடிக்கப்படும் என எச்சரிக்கை

இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு மைசூர் -குடகு நாடாளுமன்ற எம்பி பிரதாப் சிம்ஹா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். இன்னும் சில நாட்களில் பஸ் நிறுத்தம் மாற்றம் செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் பஸ் நிறுத்தம் புல்டோசர் மூலம் இடிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும் இந்த விஷயம் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இடிக்க உத்தரவு

இடிக்க உத்தரவு


இந்நிலையில் தான் தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில் மைசூர் மாநகராட்சி மற்றும கர்நாடக கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளது. அதில், மைசூரில் பஸ் நிறுத்தத்தில் சர்ச்சைக்குரிய அமைப்பை (குவிமாடம்) இடித்து அகற்ற வேண்டும். இதனை ஒரு வாரத்துக்குள் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நெடுஞ்சாலை நிர்வாக சட்டம் 2003ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்'' என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+