கல்புர்கி தூர்தர்ஷன் அலுவலகத்தில் நிகழ்ச்சி தயாரிப்பு தொடரும்- பிரசார் பாரதி சிஇஓ சசி விளக்கம்
பெங்களூர்: கர்நாடக மாநிலம் கல்புர்கி தூர்தர்ஷன் அலுவலகத்தில் இருந்து தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகள் வழக்கம்போல தூர்தர்ஷன் சந்தனா சேனலில் ஒளிபரப்பப்படும் என்று தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோவின் தலைமை செயல் அதிகாரி சசி சேகர் வெம்பாடி தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்து ட்விட்டரில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆங்கில செய்தித் தாளில் கல்புர்கியில் செயல்பட்டு வரும் அலுவலகம் அக்டோபர் 31ஆம் தேதியுடன் நிகழ்ச்சி ஒளிபரப்பை முடிவுக்கு கொண்டுவர உள்ளது என்றும் இங்கு வருங்காலங்களில் நிகழ்ச்சியை தொடர்ந்து தயாரிக்கப்படுமா என்பது குறித்து விளக்கம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் தூர்தர்ஷன் கேந்திரா இதுபோன்ற ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டதாகவும் அந்த செய்தித்தாளில் தெரிவிக்கப்பட்டது.
இதை ட்விட்டரில் மறுத்துள்ளார் சசி சேகர் வெம்பாடி. அவர் கூறுகையில், அனைத்து வகை உண்மைகளையும் பரிசீலனை செய்து ஊடகம் செய்தி வெளியிட வேண்டும். கல்புர்கி தூர்தர்ஷன் மையத்தில் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது. கல்புர்கி தூர்தர்ஷன் மையத்தில் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகள் வழக்கம்போல தூர்தர்ஷன் சந்தான தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் .
டிஜிட்டல் பிளாட்பாரம் மற்றும் சமூக வலைதளங்களிலும் ஒளிபரப்பு செய்யப்படும். டிரான்ஸ்மீட்டர் அகற்றப்படும் பணிகளை சில மீடியாக்கள் தவறாக புரிந்து கொண்டு இருக்கின்றன. ஒவ்வொரு வீட்டு மீதும் ஆண்டனா பொருத்தி அதன் வழியாக தொலைக்காட்சி பார்க்கும் காலம் போய்விட்டது. எனவே அனலாக் முறையை தவிர்த்துவிட்டு டிஜிட்டல் முறைக்கு மாற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தூர்தர்ஷன் சந்தனா என்பது தமிழ்நாட்டில் பொதிகை தொலைக்காட்சியை போன்றதாகும். கர்நாடகாவில் கன்னட நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது சந்தனா டிவி.
கல்புர்கி மையம் இதற்கான நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒளிபரப்புவதில் உதவி செய்துவருகிறது . நீண்டகாலமாக அந்த மையம் செயல்பட்டு வருகிறது. 1995ம் ஆண்டு இங்கு ஸ்டுடியோ ஏற்படுத்தப்பட்டது. உள்ளூர் நிகழ்ச்சிகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அரை மணி நேரம் இங்கு ஒளிபரப்பு செய்யப்படும்.
It is irresponsible of sections of media to misrepresent the phase out of obsolete transmitters in this manner. Television viewing is no longer happening through Roof top Antennas in India. Phasing out of analog transmitters which were setup decades ago is a necessary reform.
— Shashi S शशि शेखर (@shashidigital) October 9, 2021
1999 ஆம் ஆண்டு முதல் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினந்தோறும் ஒரு மணி நேரம் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. கல்புர்கி தூர்தர்ஷன் சேனலின் டின்ஸ்மீட்டர் எல்லை 25 கிலோ மீட்டரிலிருந்து 75 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டது.
Media should conduct itself in a responsible manner verifying all facts. Theres no change in content creation by Doordarshan Kalaburagi. Content from DD Kalaburagi will continue to be aired on @ddchandanabng in it its designated slot apart from digital platforms and social media. https://t.co/BKB07tk6pu
— Shashi S शशि शेखर (@shashidigital) October 9, 2021
ஆனால் கடந்த நான்கு வருடங்களாக கல்புர்கி தூர்தர்ஷன் மையத்தில் இருந்து நேரடியாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படவில்லை என்பது அந்த செய்தித்தாளில் இருந்த அம்சமாகும். ஆனால் சீர்திருத்தம் செய்கிறோமே தவிர மூடவில்லை என்று தூர்தர்ஷன் சிஇஓ விளக்கம் அளித்துள்ளார்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications