தமிழ்நாடு பாணியில் புதிய கல்வி கொள்கையை நிராகரித்த கர்நாடகா அரசு! மாநில கல்வி கொள்கை இனி அமல்!
பெங்களூர்: கர்நாடகாவில் மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார் அறிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. தமிழ்நாட்டில் ஆளும் திமுக, மாநில கல்வி கொள்கையை அமல்படுத்துவது என முடிவு செய்து குழுவையும் அமைத்துள்ளது.

இதே பாணியில் தற்போது கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசும் களமிறங்கி உள்ளது. பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் கூறியதாவது: மாநில பல்கலைக் கழக துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்கப்பட்டது. பாஜக ஆளும் மாநிலங்கள் கூட புதிய கல்விக் கொள்கையில் ஆர்வம் காட்டாத நிலைதான் இருந்து வருகிறது.
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் இந்த புதிய கல்வி கொள்கையை நிராகரிப்பதாகவும் அறிவித்திருக்கின்றன. தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கையை நிராகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் மாநில அரசின் கல்வி கொள்கை நடைமுறைப்படுத்தப்படும். இதற்கான ஒரு குழுவையும் அமைக்க மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த குழு புதிய மாநில கல்வி கொள்கை குழு குறித்து பரிந்துரைகள் வழங்கும் என்றார்.

முன்னதாக மாநில அரசி இத்தகைய முடிவு எடுப்பதற்கு முன்னாள் முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான பசவராஜ் பொம்மை கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். கர்நாடகா அரசின் இத்தகைய போக்கு முட்டாள்தனமானது என விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்த மாநில அமைச்சர் தினேஷ் குண்டுராவ், மாநிலங்களின் பட்டியலில்தான் கல்வி இருந்து வந்தது. மாநிலங்களின் கல்வி கொள்கையை மத்திய அரசு தீர்மானிக்க முடியாது. நாங்கள் யாரும் யாருக்கும் அடிமை இல்லை. பாஜக தலைவர்கள் இதில் அமைதி காக்க வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications