புனித் ராஜ்குமாரின் மரணத்தில் மர்மமா?.. சிகிச்சை அளித்த மருத்துவருக்கு போலீஸ் பாதுகாப்பு!
பெங்களூர்: மறைந்த கன்னட பவர்ஸ்டார் புனித் ராஜ்குமாரின் குடும்ப மருத்துவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கன்னட பவர்ஸ்டார், அப்பு என அழைக்கப்பட்டு வந்த புனித் ராஜ்குமார் (46) கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி பெங்களூருவில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் எடை தூக்கும் பயிற்சியை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்தார். அவரை பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ரசிகர்கள் அதிர்ச்சி
இவரது மறைவு ரசிகர்கள், தென்னிந்திய திரைத் துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. எப்போதும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டி வந்த புனித் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்த போது ஏன் மாரடைப்பு ஏற்பட்டது என ரசிகர்கள் மனதுக்குள் கேள்வி எழுப்பினர்.

உதவிகள்
இவரது இறப்பு குறித்து அறிவித்த விக்ரம் மருத்துவமனை குழு, மருத்துவமனைக்கு கொண்டு வரும் போதே புனித் ராஜ்குமார் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும் அவரை காப்பாற்ற தேவையான அத்தனை சிகிச்சைகளையும் கொடுத்தும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை என்றும் தெரிவித்திருந்தது. இவர் வெறும் நடிகர் மட்டுமல்லாமல் ஏழைகளுக்கு நிறைய உதவிகளையும் செய்திருந்தார்.
Recommended Video

இனிமை
தன்னை ஒரு ஸ்டார் என காட்டிக் கொள்ளாமல் இனிமையாக பழகுவார். இதுதான் இவரது மறைவுக்கு 10 லட்சம் பேர் அஞ்சலி செலுத்த வந்ததற்கு ஒரு காரணமாகும். புனித் இறப்பு செய்தி கேட்டு 10 ரசிகர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்த சம்பவமும் நடந்துள்ளது. இந்த நிலையில் புனித்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சமூகவலைதளங்களில் சிலர் கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.

புனித் ராஜ்குமார் மரணம்
மருத்துவரின் கவனக்குறைவால்தான் புனித் ராஜ்குமார் மரணமடைந்ததாகவும் சிலர் ஆதாரமில்லாத தகவலை பதிவிட்டிருந்தனர். இதனால் ரசிகர்களின் கோபம் புனித்துக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மீது திரும்பலாம் என்பதால் மருத்துவமனைகளின் கூட்டமைப்பு அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்தது. புனித்தின் குடும்ப மருத்துவர் டாக்டர் ரமணா ராவ் உள்ளிட்ட பிற மருத்துவர்களுக்கு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க உரிய பாதுகாப்பு கோரி கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் அனுப்பினர். தையடுத்து மருத்துவர் ரமணா ராவின் மருத்துவமனைக்கு போலீஸார் பாதுகாப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications