சீக்ரெட் தெரியுமா?.. பூராவும் விஷத்தேள்.. மனித உடம்பெல்லாம் ஊர்ந்து.. மலைக்க வைக்கும் "செலினாபேட்டை"

செலினாபேட்டையில் தேள் கடவுளுக்கு பக்தர்கள் வழிபாடு செய்து வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: ஆயிரக்கணக்கான விஷத்தேள்கள் ஒரே நேரத்தில் ஒன்றுகூடுவதுடன், யாரையுமே அவை கடிப்பதில்லை என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? அப்படி ஒரு விநோதம் தான் கர்நாடகாவில் நடந்து மலைப்பை தந்து வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள 'செலினா பேட்டை' என்ற மலையின் மீதுள்ள கொண்டம்மை கோவிலில் நாக பஞ்சமி அன்று தேளை வழிபடுவதற்காக வருகிறார்கள்.

கர்நாடக மாநிலம், யத்கீர் பகுதியில் உள்ள கிராமம் பெயர் கண்டகூர்.. இங்கு "செலினா பேட்டை" என்ற மலையின் மீது கொண்டம்மை கோவில் அமைந்துள்ளது.

நாக பஞ்சமி தினத்தன்று இந்த கோயிலை தேடி ஏராளமான பக்தர்கள் திரண்டு வருவார்கள்.. நாக பஞ்சமி என்பதால், பாம்பு வழிபாடு செய்வதற்காக வருகிறார்கள் என்று அர்த்தமல்ல.. தேளை வழிபடுவதற்காக வருகிறார்கள்.. அப்படி என்ன சிறப்பு இந்த கோயிலில்?!

நாகபஞ்சமி

நாகபஞ்சமி

இந்த கோயிலில் தேள் வடிவம் பொறிக்கப்பட்ட சிலை இருக்கிறது.. இந்த சிலைக்குத் தான் வழிபாடு செய்வார்கள்.. காரணம், இதே மலைப்பகுதியில் ஆயிரக்கணக்கான தேள்கள் இருக்கிறதாம்.. இந்த தேள்களை இந்த நாக பஞ்சமி தினத்தில்தான் பார்க்க முடியும்... மற்ற நாட்களில் அவைகள் பாறைகளுக்குள்ளேயே பதுங்கி கொள்ளுமாம்.. எப்போவாவது ஒன்றிரண்டு வெளியே வந்துவிட்டு மறுபடியும் உள்ளே போய் பதுங்கி கொள்ளுமாம்..

முத்தம்

முத்தம்

வருடத்துக்கு ஒருமுறை மட்டும், அதுவும் கோயிலில் வழிபாடு நடக்கும்போது மட்டும் இந்த தேள்கள் வெளியே கிளம்பி வருமாம்.. அதேசமயம், தேள்களை பார்த்ததும் பக்தர்கள் பதறி, பயந்து ஓட மாட்டார்கள்.. மாறாக, தேள்களுடன் விளையாடுவார்கள்.. அதற்கு தேள் விளையாட்டு என்றே பெயர்.. கோயிலுக்கு தங்களை வழிபட வரும் பெரியவர்கள், குழந்தைகள் என அவர்களது உடம்பெல்லாம் ஊர்ந்து விளையாடுமாம்.. சில குழந்தைகள் அந்த தேள்களை கைகளில் எடுத்து முத்தம் தருவார்களாம்..

 செலினா பேட்டா

செலினா பேட்டா

இத்தனைக்கும் எல்லா தேள்களுமே கொடிய விஷத் தன்மை கொண்டவை.. ஆனால், நாக பஞ்சமி தினத்தில் மட்டும் செல்லப் பிராணியாக மாறி, யாரையுமே தீண்டாது என்கிறார்கள். இப்படி பல வருடங்களாகவே, தேள்கள் விளையாடி வருகிறதாம்.. ஒருமுறைகூட யாரையுமே கொட்டியது இல்லை என்கிறார்கள். நாக பஞ்சமி அன்று, விடிகாலை முதலே பக்தர்கள் மலையேற ஆரம்பித்துவிடுவார்கள்.. அவர்களுடன் சேர்ந்து தேள்களும் மலையேறுமாம்.. மலையேறி "செலினா பேட்டா" மலை உச்சியை அடையும் வரை, தேள் கடவுளை பக்தர்கள் புகழ்ந்து பாடிக் கொண்டே செல்வார்களாம்..

 ரெட் கலர்

ரெட் கலர்

அதற்கு பிறகு பாலை ஊற்றி தேள் கடவுளுக்கு அபிஷேகம் செய்து பூஜையும் செய்து முடிப்பார்கள்.. வழிபாடு முடிந்ததுமே, தேள் விளையாட்டு ஆரம்பமாகும்.. இந்த மலை ஈரமான சிவப்பு மற்றும் மணல் மண்ணால் மூடப்பட்டிருக்கும்.. இது தேள்களின் இனப்பெருக்கத்திற்கு சாதகமான காலநிலையாக இருந்து வருகிறதாம்.. நாக பஞ்சமியின்போது, மழை பெய்து பூமி குளிர்ச்சியாக இருக்கும் என்பதால், தேள்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன... பஞ்சமிக்குப் பிறகு சரியாக ஐந்தாம் நாள் மலையில் விதவிதமான தேள்களை பார்க்கலாம்..

விஷத்தன்மை

விஷத்தன்மை

ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் வரும் நாகபஞ்சமி அன்று மலை முழுவதும் சிவந்த தேள்களால் நிரம்பி வழியும். அப்படித்தான் இப்போதும் பூஜைகள் நடந்துள்ளன.. இது தொடர்பான போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றன.. நூற்றுக்கணக்கான தேள்கள் வருடத்தில் ஒருநாள் மட்டும் ஏன் ஒன்றுகூடுகின்றன.. ஒரு தேள்கூட மனிதர்களை கொட்டுவதில்லையே ஏன்? என்பதெல்லாம் கூடுதல் ஆச்சரியத்தை தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+