பெங்களுருவில் ஷாக்: இந்த மாதத்தில் மட்டும் 10 வயதுக்கு உட்பட்ட 472 குழந்தைகளுக்கு கொரோனா!
பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களுருவில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மாதம் மட்டும் 10 வயதிற்கு உட்பட்ட 472 குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் இந்த எண்ணிக்கை 500 ஐ தாண்டும் அபாயம் உள்ளது.

அதிகரிக்கும் கொரோனா
நாடு முழுவதும் கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 60,000-க்கும் மேற்பட்டோருக்கு சில வாரங்களுக்கு முன்பு 15,000-க்குள் அடங்கி இருந்த இப்போது 60,000-ஐ கடந்துள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் 80% சதவீத பாதிப்புகள் உள்ளன.

தடுப்பு வழிமுறைகள் தீவிரம்
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மக்களிடம் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. கர்நாடக மாநிலத்திலும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,886 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பாதிப்பு
கர்நாடக தலைநகர் பெங்களுருவில் தாக்கம் அதிகரித்து வருகிறது. அங்கு 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாதம் மட்டும் 10 வயதிற்கு உட்பட்ட 472 குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் இந்த எண்ணிக்கை 500 ஐ தாண்டும் அபாயம் உள்ளது. மொத்த நோயாளிகளில் 244 சிறுவர்கள், 228 பெண்கள் இருப்பது கூடுதல் அதிர்ச்சியை தருகிறது. மார்ச் முதல் வாரத்தில் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடையே 8-11 வழக்குகள் இருந்தபோதிலும், கடந்த வாரத்தில் ஒரு நாளைக்கு 32-46 ஆக உயர்ந்துள்ளது.

பெற்றோர்கள் பாதுகாப்பு முக்கியம்
இது குறித்து கர்நாடகாவின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு உறுப்பினர் கூறியதாவது:- ஒரு வருடத்திற்கு முன்பு, குழந்தைகள் மத்தியில் வைரஸ் பாதிப்பு ஏற்படாததால் பாதிப்புகள் அதிகமாக இல்லை. மேலும் லாக்டவுன் மூலமாக அவர்கள் வீடுகளில் இருந்தனர் ஆனால் தற்போது அவர்கள் பூங்காக்களில் விளையாடுகிறார்கள். அடுக்குமாடி வளாகத்தின் பொதுவான பகுதிகளில் விளையாடுகிறார்கள். அது போக குழந்தைகளிடம் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பித்தல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல. எனினும் பெற்றோர்கள் இது குறித்து விழிப்புடன் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்.