'அரை கி.மீ தான் நடந்தார்'.. எந்த தாக்கமும் இருக்காது.. சோனியாவை விமர்சித்த பசவராஜ் பொம்மை
பெங்களூர்: கர்நாடகாவில் ராகுல் காந்தியுடன் சோனியா காந்தி நடைபயணம் மேற்கொண்ட நிலையில், 'சோனியா காந்தி வெறும் அரை கிலோமீட்டர் தான் நடந்தார் என்றும் பாரத் ஜோடா யாத்திரை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
வயநாடு தொகுதி எம்.பியும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்.
தொடர் தோல்விகளால் காங்கிரஸ் கட்சி துவண்டு போயிருக்கும் நிலையில், அக்கட்சிக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் வகையில் பாரத் ஜோடோ யாத்திரை பயணம் இருக்கும் என்று காங்கிரஸ் நம்புகிறது.

கர்நாடக சட்டமன்ற தேர்தல்
தற்போது ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் நடைபயணம் சென்று கொண்டிருக்கிறார். தசரா, விஜயதசமி பண்டிகை காரணமாக 2 நாட்கள் ஓய்வு எடுத்த ராகுல் காந்தி இன்று மீண்டும் தனது நடைபயணத்தை தொடங்கினார். பாஜக ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு ராகுல் காந்தியின் இந்த பாத யாத்திரை அரசியல் ரீதியாக மிகுந்த கவனம் பெற்றுள்ளது.

ராகுலுடன் சோனியா நடைபயணம்
இதனிடையே, ராகுல் காந்தியின் இந்த பாத யாத்திரையில் கட்சியின் தலைவரும் ராகுலின் தாயாருமான சோனியா காந்தி கலந்து கொண்டார். அவர் ராகுல் காந்தியுடன் சேர்ந்து சிறிது தூரம் நடந்து வந்தார். அப்போது சோனியா காந்தியை காரில் வாருங்கள் என கனிவுடன் ராகுல் காந்தி அறிவுறுத்தினார். ராகுல் காந்தி தனது தாயாரின் கையை பிடித்து அறிவுறுத்திய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவின.

பசவராஜ் பொம்மை விமர்சிப்பு
சோனியா காந்தி பாத யாத்திரையில் கலந்து கொண்டது காங்கிரஸ் கட்சியினரையும் உற்சாகப்படுத்தியது. பாரத் ஜோடோ யாத்திரயில் பங்கேற்ற தொண்டர்கள் சோனியா காந்தி நடைபயணம் செல்லும் போது கோஷங்கள் எழுப்பி உற்சாகம் அடைந்தனர். இந்த நிலையில், சோனியா காந்தி அரை கிலோ மீட்டர் மட்டுமே பாத யாத்திரை சென்றதாகவும் பாரத் ஜோடோ யாத்திரை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விமர்சித்துள்ளார்.

அரை கிலோமீட்டர் தான் நடந்தார்
இது குறித்து பசவராஜ் பொம்மை கூறியதாவது:- அவர் (சோனியா காந்தி) அரை கிலோ மீட்டர் மட்டுமே நடந்து விட்டு சென்று விட்டார். பாரத் ஜோடோ யாத்திரை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பாரத் ஜோடோ யாத்திரைக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த யாத்திரை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பாரத் ஜோடோ யாத்திரையை போல பாஜகவும் மாநிலம் முழுக்க யாத்திரை செல்லப்போவதாக கூறப்படுவது உண்மையில்லை. நான் ஏற்கனவே கூறியது போல 6 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது'' என்றார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட்












Click it and Unblock the Notifications