Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனா.. பயணிகளுக்கான ரூல்சை திடீரென மாற்றிய கர்நாடகா.. ஒசூர் எல்லையில் காத்துகிடக்கும் வாகனங்கள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா வரும் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அந்த மாநில அரசு திடீரென கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான உத்தரவை மாற்றிக் கொண்டதன் விளைவாக வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்து இருக்கிறார்கள்.

நாடு முழுக்க, அதிலும் குறிப்பாக, கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்தான் கர்நாடக பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தனது பழைய உத்தரவை மாற்றிக் கொண்டுள்ளது.

ஏற்கனவே இருந்த நடைமுறையின்படி, 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் அந்த சான்றிதழை காட்டிக்கொண்டு கர்நாடகாவிற்குள் வரமுடியும். ஆனால், கொரோனா நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசியால் நோய் பரவல் தடுக்கப்படுமா என்ற சந்தேகத்தின் பெயரில் கர்நாடக அரசு புதிய உத்தரவை கொண்டுள்ளது.

72 மணி நேரத்திற்குள் ஆர்டிபிசிஆர்

72 மணி நேரத்திற்குள் ஆர்டிபிசிஆர்

இதன் படி , இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் சரி, கர்நாடக மாநில எல்லைக்குள் வரும் வாகனங்களில் பயணிப்பவர்கள் 72 மணி நேரத்திற்கு உள்ளே ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு அந்த சர்டிபிகேட் காட்டப்பட வேண்டும் என்று விதிமுறை மாற்றப்பட்டுள்ளது. கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரு மாநில பயணிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்ற போதிலும் கூட தமிழக எல்லையிலும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா எல்லை

மகாராஷ்டிரா எல்லை

கர்நாடகா மகாராஷ்டிரா எல்லையை பொறுத்த அளவில் பெல்காம் மாவட்டத்தில் உள்ள சோதனைச்சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன. கர்நாடக அரசு தனது புதிய உத்தரவை ஜூலை 30ஆம் தேதி இரவு பிறப்பித்தது. எனவே இதுபற்றி பல வாகன ஓட்டிகளுக்கும் தகவல் சென்று சேரவில்லை. இதனால் அவர்கள் சான்றிதழ் இல்லாமல் வந்த நிலையில் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

பிற பயணிகளுக்கும் பாதிப்பு

பிற பயணிகளுக்கும் பாதிப்பு

சான்றிதழ்கள் வைத்திருந்தாலும் கூட பிற வாகன ஓட்டிகளுக்கு பரிசோதனை செய்ய காலதாமதம் ஆவதால், சான்றிதழ் வைத்திருக்கும் பயணிகளும் அந்த வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருப்பதால் பெரும் அவதி நிலவுகிறது. சம்பவ இடத்துக்கு சென்று நிலைமையை பார்வையிட்ட பெல்காம் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் எஸ்பி ஆகியோர், இன்னும் ஒரு சில நாட்களில் இந்த நிலைமையை மாற்றி வேகமாக பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

கேரள எல்லை

கேரள எல்லை

கேரள மாநில எல்லையில் கர்நாடகா தீவிர பரிசோதனைகளை நடத்தி வருகிறது. குடகு மாவட்டம் எல்லையை பொறுத்தளவில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யாமல் வரக்கூடியவர்களுக்கு ரேபிட் பரிசோதனை செய்வதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திங்கள்கிழமை முதல் கூடுதல் அதிகாரிகள் மற்றும் பரிசோதனை கருவிகள் அங்கு நிலைநிறுத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு-பெங்களூர்

தமிழ்நாடு-பெங்களூர்

கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்குதானே, இந்த விதிமுறை போடப்பட்டது. ஏன், தமிழக எல்லையான, ஓசூர், பெங்களூர் இடையேயான அத்திபெலே சோதனை சாவடியில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று கேட்கிறீர்களா? கேரளா மற்றும் மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட வாகனங்கள் என்றால் அதில் பயணிப்பவர்களிடம் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றிதழ்களை அதிகாரிகள் கேட்கிறார்கள்.

அவசர தேவை

அவசர தேவை

ஒருவேளை அவர்களிடம் சான்றிதழ் இல்லாவிட்டால், அவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். மிகவும் அவசர தேவை என்று சொல்பவர்களுக்கு ரேப்பிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சோதனைகள் காரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் நீண்ட வரிசையில் வாகனங்களில், காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நடந்தே வரும் பயணிகள்

நடந்தே வரும் பயணிகள்

இதனிடையே, கர்நாடகாவிற்கும் தமிழகத்திற்கும் இடையில் பேருந்து சேவைகள் இல்லாததால் தினசரி ஒசூர் பக்கம் இருந்து பெங்களூர் செல்வோர் பாதிக்கப்படுகிறார்கள். தமிழகம்-கர்நாடகா எல்லையான அத்திபெலே பகுதி வரை டவுன் பஸ்களில் வந்து அங்கே குழந்தைகள் மற்றும் சாமான்களுடன் கூட மக்கள் இறங்கி நடந்தே கர்நாடகா எல்லைக்குள் சென்று கர்நாடக பஸ்களில் ஏறி பெங்களூர். இந்த விதிமுறையில் ஒரு லாஜிக்கும் இல்லை என பயணிகள் குமுறுகிறார்கள்

தமிழக ரூல்ஸ்

தமிழக ரூல்ஸ்

இதுகுறித்து, கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழக (KSRTC) அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, ​​மாநிலங்களுக்கு இடையேயான சேவைகளை அனுமதிப்பதில்லை என்று தமிழக அரசு விதிமுறையை வகித்துள்ளது. அதுதான் இந்த அவதிக்கு காரணம். இரண்டாவது அலையின் உச்சத்திற்குப் பிறகு, நாங்கள் மற்ற மாநிலங்களுக்கான பஸ் சேவைகளை மீண்டும் தொடங்கினோம், ஆனால் தமிழக அரசு இன்னும் தடையை நீக்கவில்லை. கடந்த ஆண்டும் இதே போன்ற நிலையை நாங்கள் சந்தித்தோம். தமிழக அரசு அனுமதித்தால், நாங்கள் பேருந்து சேவைகளை வழங்கத் தயாராக உள்ளோம், என்று தெரிவித்தனர்.

ரயில்கள் ஓடுகிறது

ரயில்கள் ஓடுகிறது

ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் வேலைக்காக பெங்களூரு மற்றும் ஓசூர் இடையே பயணம் செய்கிறார்கள், மாநிலங்களுக்கு இடையேயான பஸ் சேவைகளுக்குத் தொடர்ந்து தடை விதிக்கப்படுவதால் அவர்கள் அவதிப்படுகிறார்கள். மக்கள் சுதந்திரமாக எல்லையை தாண்டி செல்ல முடிகிறது. அப்படியிருக்கும்போது, மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளை தடை செய்வதில் எந்த லாஜிக்கும் இல்லை. இரு மாநிலங்களுக்கிடையேயான ரயில் சேவைகள் இயங்குகின்றன. பேருந்து சேவைகளை மட்டும் அனுமதிப்பது சரியல்ல." என்று ஒரு பயணி கூறினார்.

Recommended Video

    மீண்டும் அதிகரிக்கும் Corona பாதிப்பு.. Chennai Corporation எடுத்த அதிரடி நடவடிக்கை
    பஸ்கள் எண்ணிக்கை

    பஸ்கள் எண்ணிக்கை

    பெங்களூருவில் இருந்து கேரளாவிற்கு KSRTC பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், ஆர்டி-பிசிஆர் அறிக்கைகளை மாநில அரசு கட்டாயமாக்கிய பிறகு கேரளாவிலிருந்து பெங்களூருக்கு பயணிக்கும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்தது. "கொரோனாவிற்கு முன்பு, நாங்கள் பெங்களூரில் இருந்து 25 பேருந்துகளை கேரளாவுக்கு இயக்கினோம். இப்போது, அது இரண்டு அல்லது மூன்றாக குறைந்துள்ளது, அதுவும் குறைவான பயணிகளுடன்தான், " என்று ஒரு அதிகாரி கூறினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+