பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓவர் ஆட்டம்.. ஒருத்தரும் மாஸ்க் போடல.. ஊரே திரண்ட கோயில் விழா.. இப்போ மொத்த கிராமத்துக்கும் சீல்

கர்நாடகாவில் உள்ள கிராமத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

பெங்களூரு: ஒரு திருவிழாவை நடத்தியதின் விளைவு, ஒட்டுமொத்த கிராமத்தையும் இழுத்து சீல் வைக்கும் நிலைமை வந்துவிட்டது..!

இப்போதைக்கு தமிழ்நாட்டை விட மோசமாக உள்ளது கர்நாடகத்தின் நிலைமை.. தினந்தோறும் தொற்று எண்ணிக்கையும் அதிகமாகி உள்ளது.. பலி எண்ணிக்கையும் அதிகமாகி உள்ளது.. அதனால், அங்கும் லாக்டவுன் போட்டுள்ளனர்.

துன்பம் தீர்க்கும் அன்னை வாசவி கன்னிகா பரமேஸ்வரி - இன்று வணங்கினால் இத்தனை நன்மைகளா? துன்பம் தீர்க்கும் அன்னை வாசவி கன்னிகா பரமேஸ்வரி - இன்று வணங்கினால் இத்தனை நன்மைகளா?

எனினும், பொதுமக்கள் சில நேரங்களில், கட்டுப்பாடு இல்லாமல் நடமாடுகிறார்கள்.. அந்த வகையில், ஒரு கிராமத்தில் கொரோனாவை பற்றி கவலையேப்படாமல் ஒரு திருவிழாவை நடத்தி உள்ளனர்.. அந்த திருவிழாதான் இப்போது விஸ்வரூபமெடுத்துள்ளது..!

 சிலை

சிலை

கதக் மாவட்டம் நற்குண்ட் அருகே உள்ளது பனஹட்டி என்ற கிராமம்.. இந்த கிராமத்தில் ஒரு ஆஞ்சநேயர் சிலையை நிறுவ முயன்றனர்.. இதற்காக ஒருவிழாவே எடுத்து, அந்த பகுதி மக்கள் சிறப்பாக கொண்டாடினர்.. எல்லாருமே வீதிகளில் திரண்டனர்.. ஒருத்தரும் மாஸ்க் போடவில்லை.. தெருக்களில் திரண்ட, பொதுமக்கள், ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை ஊற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

 திருவிழா

திருவிழா

திருவிழா என்பதால், யாரும் காலில் செருப்பு இன்றியே கிராமம் முழுவதும் நடமாடி கொண்டிருந்தனர்.. ஒருவரையொருவர் முண்டியத்து கொண்டு, தண்ணீர் பானைகளை தலையில் வைத்து, ஆட்களின் மீது இறைத்து கொண்டிருந்தனர்..

 விளையாட்டு

விளையாட்டு

இதைதவிர, ஊர் எல்லையில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகளையும் நடத்தினர்.. லாக்டவுன் அமலில் இருக்கிறதே என்ற நினைப்பு கொஞ்சமும் இல்லாமல், ஒரே இடத்தில் எல்லாருமே திரண்டனர்.. சமூக இடைவெளியும் இல்லை.. அத்தனை நாளும் வீடுகளிலேயே முடங்கி இருந்த மக்கள், கோயில் திருவிழா என்றதும், இப்படி திரண்டதால், தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.

சீல்

சீல்

இதனால், விதிகளை மீறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து, ஒட்டுமொத்த கிராமத்தையும் தனிமைப்படுத்தும் வகையில் கர்நாடக அரசு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது..!

English summary
Temple festival celebrated forgetting corona, Karnataka gov seals the village
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X