பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குலுங்கி குலுங்கி அழுது.. ஆச்சர்யம் தந்த ஆசிரியர்.. கர்நாடகாவிலும் ஒரு "பகவான்".. நெகிழ்ச்சி வீடியோ

ஆசிரியருக்கு பிரியாவிடை தந்த மாணவர்களின் வீடியோ வைரலாகிறது

Google Oneindia Tamil News

பெங்களூரு: டிரான்ஸ்பர் ஆகி செல்லும் ஆசிரியரை, அப்பள்ளி மாணவர்கள் சூழ்ந்து கொண்டு கதறி அழுத காட்சி காண்போரை மனம் உருக செய்துள்ளது.. இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது.

Recommended Video

    டிரான்ஸ்பர் ஆகி செல்லும் ஆசிரியரை, அப்பள்ளி மாணவர்கள் சூழ்ந்து கொண்டு கதறி அழுத காட்சி

    வழக்கமாக ஒரு பள்ளி ஆசிரியர் டிரான்ஸ்பர் ஆகி சென்றால், அல்லது பணிஓய்வு பெற்றால், மாணவர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து அவருக்கு கிஃப்ட் தருவார்கள்.. கேக் வெட்டுவார்கள்..

    இதே நாள்..21 வருடம்..3 வெற்றி..மறக்கமுடியாத நாள்...உருகிய சிம்ரன்..வாழ்த்தும் ரசிகர்கள்இதே நாள்..21 வருடம்..3 வெற்றி..மறக்கமுடியாத நாள்...உருகிய சிம்ரன்..வாழ்த்தும் ரசிகர்கள்

    ஒன்றாக சேர்ந்து போட்டோ எடுத்துகொள்வார்கள்... ஆனால், முதன்முறையாக எந்த ஆசிரியருக்கும் நடக்காத ஒரு செயல் தமிழகத்தில் 3 வருடங்களுக்கு முன்பு நடந்தது.

    பகவான்

    பகவான்

    ஆசிரியர் பகவானுக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் கிடைத்ததுமே, அவரின் பிரிவை ஏற்றுக் கொள்ள முடியாத அவரது மாணவர்கள், பகவானை ஸ்கூலை விட்டு அனுப்பமாட்டோம் என்று கதறி அழ ஆரம்பித்துவிட்டனர்... அவர்களை சமாதானம் செய்ய சென்ற ஆசிரியர் பகவானும் அவர்களுடனும் சேர்ந்து அழ ஆரம்பித்துவிட்டார்.. ஒரு பக்கம் மாணவர்கள் அழ, இன்னொரு பக்கம் ஆசிரியர் பகவான் அழ.. இதற்கு நடுவில் மாணவர்களின் பெற்றோர்கள் அழ என ஒரே பரபரப்பாக போய்விட்டது.. எல்லாவற்றிற்கும் மேலாக, ஆசிரியர் பகவான் பள்ளியை விட்டு செல்லக்கூடாது என்று பெற்றோர்களே போராட்டத்திலும் ஈடுபட்ட நிகழ்வு தமிழகத்தையே வியப்பில் ஆழ்த்தியது.

     ஸ்ரீபீரப்பா

    ஸ்ரீபீரப்பா

    அப்படி ஒரு சம்பவம்தான் கர்நாடகாவிலும் நடந்துள்ளது.. ஆசிரியர் பெயர் ஸ்ரீபீரப்பா.. கட்லிமட்டி பள்ளியில் வேலை பார்த்து வந்துள்ளார்.. இவருக்கு உத்தர கர்நாடகாவுக்குபணி மாறுதல் வந்துள்ளது.. இதற்காக பள்ளி மாணவர்களிடம் விடைபெற்று கிளம்பும்போது அங்கு நடந்த உருக்கமான நிகழ்வு வீடியோவாக வெளிவந்துள்ளது.. அதில், ஆசிரியருக்கு பொன்னாடைபோர்த்தி மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.. சுற்றிலும் ஆசிரியர்களும் மாணவர்களும் கூடி நிற்கின்றனர்..

    பிரிவு

    பிரிவு

    ஆசிரியர் செல்ல முயன்றபோது, மாணவர்கள் அவரை தடுத்து நிறுத்தி கட்டிப்பிடித்து கண்ணீர் வடிக்கிறார்கள்.. அவரது பிரிவை தாங்கி கொள்ளாமல் மற்ற மாணவி - மாணவர்களும் தேம்பி தேம்பி அழுகிறார்கள்.. இதையெல்லாம் பார்த்து ஆசிரியரும் குலுங்கி குலுங்கி அழுகிறார்.. பிறகு மாணவிகள் ஓடிவந்து ஆசிரியரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார்கள்.. காலில் விழுந்த அவர்களை தூக்கிவிட்டு நெகிழ்ந்து போய் நிற்கிறார் ஆசிரியர்..

    வளர்ச்சி

    வளர்ச்சி

    நடந்து கொண்டிருக்கும் நெகிழ்ச்சி சம்பவத்தை பார்த்து சுற்றியிருந்த ஆசிரியர்களும் கண்கலங்கி விக்கித்து நிற்கின்றனர்.. தன்னுடைய மாணவர்களிடம் ஆசிரியர் நெருங்கி பழகி உள்ளார் என்பதைவிட, இந்த பள்ளியின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டுள்ளார் என்றே சொல்லலாம்.. இப்பள்ளிக்காக ஸ்ரீபீரப்பாவின் முயற்சியால் வாங்கிக் குவித்த விருதுகள் ஏராளம்.. பள்ளியின் நற்பெயருக்காக தன் மாணவர்களை அவர் தயார் செய்த விதமும், ஊக்குவித்த முறையும்தான் மாணவர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.

    ஆசிரியர்

    ஆசிரியர்

    அதனால்தான் அப்பள்ளியை விட்டு செல்ல விடாமல் மாணவர்கள் அழுதுகொண்டே விடைகொடுக்க மறுக்கின்றனர்... மாணவர்கள் தம்மீது வைத்திருக்கும் அன்பால், ஆசிரியரும் கண்ணீர் வழிய நிற்கிறார்... ஒரு கட்டத்தில் மாணவர்களை விலக்கி செல்லும்போது, ஆசிரியரை கட்டியணைத்து, திரும்பவும் பள்ளிக்கே இழுக்கின்றனர்... அந்த ஆசிரியரின் அழுகையோ இன்னும் அதிகமாகிறது.. தன்னிடம் படிக்கும் மாணவர்களிடம் ஒரு ஆசிரியராக மட்டுமே நடந்துக் கொண்டிருந்தால் இந்த நிகழ்வு சாத்தியமா? என்றால் சந்தேகம்தான்.

    தோழன்

    தோழன்


    தன்னிடம் படிக்கும் அனைவரிடமும் வேற்றுமையும் காட்டாமல், ஒரு அண்ணனாகவும், குருவாகவும், தோழனாகவும், குடும்பத்தில் ஒருவராகவும் பழகிய ஆசிரியருக்கு இந்த கண்ணீர் போராட்டம் நடந்துள்ளது இன்றைய காலகட்டத்தில் ஆச்சரியமாக உள்ளது.. ஆங்காங்கே ஆசிரியர்கள் தவறு செய்கிறார்கள்.. பள்ளியிலேயே உட்கார்ந்து தண்ணி அடிக்கிறார்கள்.. தன்னிடம் படிக்கும் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டு வருகிறார்கள்... இதனால் சமீப காலமாக கைதாகியும் வருகிறார்கள்..

     இந்தியாவின் சிறப்பு

    இந்தியாவின் சிறப்பு

    மனிதர்களின் இயல்பான பலவீனங்களாக இவைகளை நாம் எடுத்து கொண்டாலும், ஆசிரியர்கள் இத்தகைய தவறுகளை செய்வதைதான் யாராலும் ஜீரணிக்க முடியவதில்லை.. மன்னிக்கவும் தயாராக இருப்பதில்லை.. அதேசமயம், ஆசிரியர்களுக்கான நன்மதிப்பை இந்த நாடு இன்னும் முழுமையாக இழந்துவிடவில்லை... கற்பிப்பதை தவமாக நினைத்து பணிபுரிபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அந்த வகையில், பகவானை போன்று, ஸ்ரீபீரப்பா போன்று, சிறந்த ஆசிரியர்கள் இந்திய தேசத்தின் பள்ளியை மேம்படுத்தி கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை..!

    English summary
    The great teacher Beerappa Kadlimatti from Uttara Karnataka getting transferred, video
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X