Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2900000000 கோடியை நன்கொடையாக செலவு செய்த பெண்! யார் இந்தத் தர்ம தேவதை?

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல கோடி ரூபாயை தர்ம காரியங்களுக்காக தனது அறக்கட்டளையின் மூலம் செலவழித்துள்ளார்.

இந்தியாவின் கோடீஸ்வரர்கள் என்று ஒரு பட்டியல் வெளியானால் அதில் ஆண்கள்தான் இருக்கின்றனர். அதேபோல இந்தியாவின் டாப் 10 தொழிலதிபர்கள் என ஒரு பட்டியல் போட்டால் அதில் ஆண்கள்தான் அதிகம் இடம்பெறுகின்றனர். இந்தியா போன்ற நாடுகளைப் பொறுத்தவரைப் பெண்களின் சாதனை என்பது இன்னும் பொது பட்டியலுக்குள் வரவில்லை. தனிப் பட்டியலில் தான் அவர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

infosys karnataka

அந்த ஒரு மரபான மனநிலை இன்னும் உடைத்து நொறுக்கப்படவில்லை. EdelGive Hurun கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் தர்ம காரியங்களில் செய்யும் மகளிர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இடம்பிடித்துள்ள பெண் ஒருவர். கடந்த இரண்டு ஆண்டுகளில் 2900000000 கோடி ரூபாயை தான, தர்ம காரியங்களுக்கு நன்கொடையாக அளித்திருக்கிறார் இவர். அதன் மூலம் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்.

என்னது 2900000000 கோடியா? யாருப்பா இவர்? எனக்கே பார்க்கவேண்டும்போது இருக்கிறதே என உங்கள் மனம் துடிக்கிறது என்றால் நீங்கள் இன்னும் மனிதாபிமானத்தோடு வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். இது ஒரு சாதனையா என உங்கள் மனம் ஒருவேளை சொன்னால் நீங்கள் முற்றும் துறந்த ஞானியாகிவிட்டதாகப் பொருள்.

அது சரி, இவர் யார்? எப்படி இவ்வளவு பணத்தைச் சம்பாதித்தார்? நன்கொடையே இத்தனை கோடி என்றால்? சொத்து மதிப்பு? முழு கதையையும் பார்த்துவிடுவோம். இந்தக் கொடை வள்ளலின் பெயர் ரோகினி நிலேகனி. 1960 ஆம் ஆண்டு பிறந்தவர். இப்போது 64 வயதான முதியவர். அர்க்கியம் அறக்கட்டளையின் உந்துசக்தி இவர்தான். இவர்தான் இந்தியாவின் அதிகப் பணத்தைத் தர்ம காரியத்திற்காகக் கொட்டிக் கொடுத்துள்ளார். 2022 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 1200000000 ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார்.

இவர் யார்? வேறு யாருமல்ல, இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனியின் மனைவிதான் இந்த ரோகினி நிலேகனி. ரோகினி நிலேகனியின் இந்தியாவில் கருணை காரியங்களுக்காக அதிக அளவில் செலவிடுவோர் பட்டியலில் இவர் இடம்பிடித்துள்ளார்.

infosys karnataka

ரோகினி நிலேகனி, நீர் மற்றும் சுகாதார நெருக்கடிகள் சார்ந்து எழும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டி அர்க்கியம் அறக்கட்டளை மூலம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதே நேரத்தில், ரோகினி நிலேகனி பிலான்ட்ரோபீஸ் நிறுவனத்திற்கு இவர் தலைமை தாங்குகிறார். இந்த ரோகினி ஒரு சாதாரண பின்னணியிலிருந்து வந்தவர். இவர் ஒரு பொறியாளர். கூடவே இல்லத்தரசியின் மகள். அவர் எளிமையான வாழ்க்கை நடத்தி வருபவர். ஆனால் இவரது உயர் சிந்தனையின் உயரம் அதிகம். ரோகினி, இன்ஃபோசிஸின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான நந்தன் நிலேகனியின் மனைவி. இவரது பங்கு ரூ. 6,79,000 கோடி.

ரோகினி இந்தப் பட்டியலில் கடந்த காலங்களில் 10வது இடத்திலிருந்தபோது, ​​ஹெசிஎல் இணை நிறுவனர் ஷிவ் நாடார் முதலிடத்திலிருந்தார். அப்போது கணவர் நிலேகனி 8வது இடத்திலிருந்தார். நந்தன் நிலேகனி இவரது சக மென்பொருள் பொறியாளர்கள் ஆறு பேர் 1981 இல் ரோகினியை திருமணம் செய்து கொண்ட உடனேயே தொழில் முனைவோர் பாய்ச்சலை மேற்கொண்டனர். ரோகினி, 1981 இல் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை ஆறுபேர் சேர்ந்து உருவாக்கிய போது அந்நிறுவனத்திற்காக தனது சேமிப்பான 10,000 ரூபாயையும் கொடுத்தார். அதிர்ஷ்டவசமாக நிறுவனம் மிகப்பெரிய உயரத்திற்குச் சென்றது.

ஒரு தர்ம தேவதையாக மட்டுமல்லாமல், ரோகினி ஒரு நல்ல எழுத்தாளர். கல்வியை மேம்பாடு, சுற்றுச்சூழலுக்கு மேம்பாடு என உலகத்தை வளமாக்க அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருபவர். தனது சொந்த சேமிப்பில் உருவான நிறுவனம் வளர்ந்த பிறகு அதிலிருந்து தனக்குக் கிடைக்கும் சுயாதீனமாகப் பங்குத் தொகையில் குறிப்பிட்ட வகையில் மக்களுக்கு உதவி வருகிறார். அதன் மூலம் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றி இருக்கிறார்.

ரோகினி எல்பின்ஸ்டோன் கல்லூரியில் பிரெஞ்சு இலக்கியம் படித்தவர். 1980இல் பம்பாய் பத்திரிகை ஒன்றில் நிருபராக பணிபுரியாற்றியவர். ஆம்! பத்திரிகை உலகின் முன்னோடி. பின்னர் அவர் தனது பத்திரிகை ஆசையைப் பெங்களூரில் உள்ள சண்டே மேகசின் எழுதுவதன் மூலம் காப்பாற்றிக் கொண்டு வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+