Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாங்களேன்.. கட்டிப்பிடிக்கலாம்.. 2 மணி நேரத்தில் 100 பேருக்கு 'Hug" பரபர பெங்களூர் கல்லூரி மாணவிகள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: யூடிப்களில் ‛Hug Me Or Slap Me' என்பதை நாம் பார்த்து இருப்போம். பலரும் தங்களின் யூடியூப் சேனலுக்காக இதனை செய்து வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். ஆனால் இதற்கு அப்பாற்பட்டு பெங்களூரில் 2 கல்லூரி மாணவிகள் ‛வாங்களேன் ஒருமுறை கட்டிப்பிடித்து கொள்ளலாம்' என அழைத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அந்த இருமாணவிகளும் டிரெண்ட் ஆகி உள்ளனர்.

நாம் அனைவரும் நடிகர் கமல்ஹாசன், பிரபு, சினேகா நடிப்பில் வெளியான வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தை பார்த்து இருப்போம். இந்த படத்தில் ‛கட்டிப்புடி வைத்தியம்' என்ற கான்செப்ட் இடம்பெற்றிருந்தது.

அதாவது யாராவது டென்சனாக இருந்தால் அவர்களை அழைத்து அன்போடு அரவணதை்து கொண்டால் டென்சன் குறையும் எனும் அடிப்படையில் இந்த காட்சிகள் அமைந்திருக்கும்.

மாணவிகளின் கட்டிப்புடி வைத்தியம்

மாணவிகளின் கட்டிப்புடி வைத்தியம்

அதேபாணியில் பொது இடத்தில் பெங்களூரில் 2 கல்லூரி மாணவிகள் இலவச கட்டிப்புடி வைத்தியம் வழங்கி வியப்பை ஏற்படுத்தி உள்ளனர். இதுதொடர்பான படங்கள் இணையதளத்தில் வெளியாகி டிரெண்ட் ஆகி உள்ளது. இந்த கல்லூரி மாணவிகள் எதற்காக இப்படி செய்தனர். இவர்களின் பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

‛FREE HUGS’ பேனர்

‛FREE HUGS’ பேனர்

பெங்களூரில் உள்ள முக்கிய தெருக்களில் சர்ச் தெருவும் உள்ளது. எம்ஜி ரோடு அருகே அமைந்துள்ள சர்ச் தெரு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மிகவும் பிரசித்திப்பெற்றது. இந்நிலையில் தான் பெங்களூருவை சேர்ந்த அபூர்வா அகர்வால் (வயது 19) மற்றும் தனிஷி பரஸ்ராம்கா (22) ஆகிய 2 கல்லூரி மாணவிகள் சர்ச் தெருவில் அங்கும் இங்குமாக ‛FREE HUGS' என எழுதி கையில் வைத்துக்கொண்டு சுற்றி வந்தனர்.

கட்டிப்புடித்த பொதுமக்கள்

கட்டிப்புடித்த பொதுமக்கள்

இதில் அபூர்வா அகர்வால் பிபிஏ படித்து வருகிறார். தனிஷி பரஸ்ராம்கா அந்த கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறார். இவர்கள் 2 பேரின் கையில் ‛FREE HUGS' என எழுதப்பட்டு இருப்பதை பார்த்தவர்கள் 2 பேரையும் அன்பாக கட்டிப்பிடித்து சென்றனர். பொது இடத்தில் 2 மாணவிகள் ‛FREE HUGS' கொடுப்பதை அந்த வழியாக சென்ற பலரும் ஆச்சரியமாக பார்த்தனர். இன்னும் ஏராளமானவர்கள் அவர்களின் நோக்கம் என்ன? என்பதை கேட்டு அதன்பிறகு கட்டிப்பிடித்து அன்பை பரிமாறி சென்றனர்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

சுமார் 2 மணிநேரத்தில் 100 பேர் கட்டிப்பிடித்தனர். இதுபற்றி தனிஷி பரஸ்ராம்கா கூறுகையில், ‛‛ சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை படித்தோம். அதில் ஒரு நாளைக்கு ஒருவர் 8 முறை கட்டிப்பிடித்தால் அது மனஅழுத்தம் குறையும் என கூறப்பட்டு இருந்தது. மேலும் அடிக்கடி அன்பாக கட்டிப்புடிப்பதால் மனதை நிலையாக வைக்கவும், ஒருநிலைப்படுத்தவும் முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

மனஅழுத்தத்தை குறைக்க...

மனஅழுத்தத்தை குறைக்க...

இன்றைய நவநாகரீக காலத்தில் ஒவ்வொருவரும் வேகமாக இயங்கி வருகின்றனர். மனஅழுத்தத்தில் ஓடி ஓடி இரவு பகலாக உழைத்து வருகின்றனர். ஒவ்வொருவரும் அன்புக்காக ஏங்கும் சூழல் உள்ளது. ஆனால் அதற்கான நேரம் இல்லை. இதனால் அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு முயற்சியாக ‛ப்ரீஹக்ஸ்' மேற்கொண்டோம்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+