Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேசிய கொடியால் தப்பிக்கிறோம்.. அரசு உதவவில்லை! எல்லாம் கதை: உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர் பேட்டி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ‛‛உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு மத்திய அரசு உதவவில்லை. உதவி செய்வதாக அமைச்சர்கள் நடிக்கிறார்கள். தைரியம் இருந்தால் கார்கிவ், சும்மி நகரில் உள்ள இந்திய மாணவர்களை மீட்டு வரட்டும் பார்க்கலாம்'' என கர்நாடக மாணவர் ஆக்ரோஷமாக கூறினார்.

ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ‛ஆபரேஷன் கங்கா' என்ற பெயரில் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்த பணியில் தனியார் விமானங்களுடன் இந்திய விமானப்படை விமானங்களும் இணைந்துள்ளன. அத்துடன் மீட்பு நடவடிக்கைக்கான ஒருங்கிணைப்பு பணியை மத்திய அமைச்சர்களான ஹர்தீப் சிங் புரி, ஜோதிர்ஆதித்ய சிந்தியா, கிரன் ரிஜூ, விகே சிங் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவர்கள் மீட்பு

மாணவர்கள் மீட்பு

உக்ரைனில் போர் நடப்பதால் அங்குள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் உக்ரைனில் இருந்து வெளியேறும் இந்திய மாணவர்கள் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா வழியாக மீட்கப்பட்டு வருகின்றனர். ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட், ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட் ஆகிய இடங்களில் இருந்து இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் நாடு திரும்பி வருகின்றனர்.

மோடி நடவடிக்கை

மோடி நடவடிக்கை

மேலும் உக்ரைனில் நிலவும் போர் சூழலை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.இந்திய மாணவர்கள் அனைவரும் விரைவாக கார்கிவ் நகரில் இருந்து வெளியேற வேண்டும் என நேற்று இந்திய தூதரகம் அறிவுறுத்தி இருந்தது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினுடன் தொலைபேசி வழியாக பேசினார். அப்போதும், இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். மேலும் கடந்த மாணவர் மீட்பு தொடர்பாக மூன்று நாட்களில் நான்கு முறை உயர்மட்ட குழுவை கூட்டி பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.

வீடியோ

வீடியோ

இது ஒருபுறம் இருந்தாலும் உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்களை மீட்பதில் இந்தியா தாமதமாக செயல்படுவதாக காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் தான் உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் வெளியேற மத்திய அரசு உதவி செய்யவில்லை. உதவுவது போன்று அமைச்சர்கள் நடிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது இதுபற்றி உக்ரைனில் இருந்து சொந்த பணத்தை செலவழித்து தாயகம் திரும்பிய கர்நாடகத்தை சேர்ந்த அனீஷ் என்ற மாணவர் குற்றச்சாட்டு கூறியுள்ளதாக கர்நாடக காங்கிரஸ் கட்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

உதஉதவவில்லை, தைரியமிருந்தால்...

உதஉதவவில்லை, தைரியமிருந்தால்...

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவின் செயலாளர் பிரசாந்த் நரசிம்மா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் விமான நிலையத்தில் நின்று மாணவர் பேசுகிறார். அவர் கூறுகையில், ‛‛‛உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற அந்தநாட்டு போலீசார் பாதுகாப்பு செய்து தருகிறார்கள். மாணவர்கள் சொந்த செலவில் உக்ரைனில் பஸ்களை பிடித்து வெளியேறுகிறார்கள். இந்திய அரசு உதவி எதுவும் செய்யவில்லை. பஸ்களில் உள்ள இந்திய தேசியக்கொடியை பார்த்து அனைவரும் எங்களை விடுவிக்கிறார்கள். இதுதவிர இந்திய அரசு எதுவும் செய்யவில்லை. அமைச்சர்கள் உதவுவது இல்லை. உதவுவது போல் நடிக்கிறார்கள். உண்மையில் தைரியம் இருந்தால் கார்கிவ், சும்மி நகரில் உள்ள மாணவர்களை மீட்டு வரட்டும் பார்க்கலாம்'' என்றார்.

மோடி விமர்சனம்

மோடி விமர்சனம்

முன்னதாக நேற்று உத்தர பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, ‛‛இந்தியாவின் சக்தி வளர்ந்து வருகிறது. இதனால் தான் உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மத்திய அரசால் மீட்க முடிந்தது. உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் முயற்சியை ஒருபோதும் மத்திய அரசு கைவிடாது. இந்திய ராணுவத்தின் வீரம், மேக் இன் இந்தியா திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பும் நபர்களால் இந்தியாவை வலிமையாக்க முடியாது'' என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை அவர் விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் காங்கிரஸ் சார்பில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பலர் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+