"இந்தியா" கூட்டணிக்காக காவிரி நீரை தாரைவார்த்த கர்நாடகா காங்கிரஸ் அரசு- மத்திய அமைச்சர் பேச்சா இது?
பெங்களூர்: "இந்தியா" கூட்டணியில் திமுக இடம்பெற்றிருப்பதாலேயே காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகா காங்கிரஸ் அரசு தாரைவார்த்துவிட்டதாக மத்திய அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிடவே கூடாது என்பதில் கர்நாடகா பாஜக பிடிவாதமாக இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு சொற்ப அளவிலான காவிரி நீரை கர்நாடகா காங்கிரஸ் அரசு திறந்துவிட்டது. இதற்கும் கர்நாடகா பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

அத்துடன் மாண்டியாவில் தமிழ்நாட்டுக்கு எதிரான போராட்டங்களை பாஜக முதலில் நடத்தியது. இதனடிப்படையில் கர்நாடகா விவசாயிகளும் தமிழ்நாட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். பாஜகவின் எதிர்ப்பின் அடிப்படையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
கர்நாடகா பாஜகவின் கடும் எதிர்ப்பால் காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் கர்நாடகா அரசு பின்வாங்கியது. இதனாலேயே அனைத்து கட்சிக் கூட்டமும் நேற்று கூட்டப்பட்டது. அத்துடன் உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக கர்நாடகா இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில் தமிழ்நாடு அரசின் மனுவை டிஸ்மிஸ் செய்யவும் கர்நாடகா வலியுறுத்தி இருக்கிறது. இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெற உள்ளது.
இதனிடையே மத்திய அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே, காவிரி பிரச்சனை தொடர்பாக கூறியதாவது: இந்தியா கூட்டணியில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக இடம்பெற்றுள்ளது. இதனாலேயே காவிரி நீரை தமிழ்நாடுட்க்கு கர்நாடகா அரசு திறந்துவிட்டு கன்னட விவசாயிகளை வஞ்சித்துவிட்டது காங்கிரஸ். கர்நாடகாவில் குடிக்கவே நீர் இல்லாத நிலையில் தமிழ்நாட்டின் குறுவை சாகுபடிக்கு காவிரி நீரை எப்படி திறந்துவிடலாம்?
காவிரியில் போதுமான நீர் இல்லை என்பதை கர்நாடகா அரசுதான், தமிழ்நாட்டுக்கு புரிய வைத்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யாமல் காவிரி நீரை திறந்துவிட்டிருக்கிறது காங்கிரஸ் அரசு. காவிரியில் கர்நாடகாவின் குடிநீர் தேவைக்காக மட்டுமே நீரை திறக்க வேண்டும். தமிழ்நாட்டின் குறுவை சாகுபடிக்கு நீரை திறந்துவிடவே கூடாது. இவ்வாறு மத்திய அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே ஆவேசமாக கூறினார்.
சந்திரயான்- 3 தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் சமூக வலைதளங்களில் பதிவிட்டதையும் கடுமையாக விமர்சித்தார் மத்திய அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே. பிரகாஷ் ராஜூக்கு இந்தியாவின் பணம் தேவை; ஆனால் இந்தியாவை தேவை
இல்லை போல எனவும் விமர்சித்தார்.
-
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications