திருமண போட்டோக்கள் நீக்கம்! ஷூட்டிங்கில் தனிமை! நடிகை சோபிதா சிவன்னா மரணத்தில் மர்மம்?
பெங்களூர்: பிரபல கன்னட சீரியல் நடிகை சோபிதா சிவன்னா மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்த நிலையில் அவரது மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன.
கர்நாடக மாநிலம் ஹசன் நகரை சேர்ந்தவர் சோபிதா சிவன்னா. இவர் ஏராளமான கன்னட சீரியல்களில் நடித்துள்ளார். இவருக்கு 30 வயதாகும் நிலையில் திருமணமான பிறகு கணவர் சுதீருடன் ஹைதராபாத்தில் தங்கினார்.

அப்படியே தெலுங்கு சினிமாக்களிலும் நடித்து வந்தார். ஹைதராபாத்தில் சோபிதா குடியேறி 2 ஆண்டுகள் ஆகின்றன. நேற்றைய தினம் அலுவலக பணிகள் முடிந்து கணவர் சுதீர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சோபிதாவின் அறை கதவை தட்டிய போது திறக்கவில்லை.
இதனால் பதறிய அவர் சிலரின் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது அங்கு சோபிதா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீஸார் வந்து அவரது உடலை ஒஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உடற்கூராய்வுக்குள்படுத்தப்பட்டு அவரது உடல் சொந்த ஊரான ஹசனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் சோபிதாவின் தற்கொலைக்கு என்ன காரணம் என தெரியவில்லை. சினிமாவிலும் அவருக்கு தொடர்ந்து வெற்றி படங்களே அமைந்த நிலையில் அவருடைய இறப்பிற்கு பொருளாதாரத்தை காரணமாக சொல்ல முடியாது என தெரிகிறது. இது கொலையா இல்லை தற்கொலையா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ரங்கி தரங்கா படத்தின் மூலம் கன்னடத்தில் சோபிதா அறிமுகமானார். யூ டர்ன், கேஜிஎப் சாப்டர் 1, கேஜிஎப் சாப்டர் 2 போன்ற படங்களிலும் நடித்துள்ளார். சோசியல் மீடியாவிலும் இவர் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வந்தார். அது போல் ரசிகர்களுடன் உரையாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.
பேஷன் டிசைனிங்கிலும் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். இந்த நிலையில் சோபிதா எப்படி இறந்தார் என்பது அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் மட்டுமே தெரியவரும். இதனிடையே சோபிதா திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு சீரியல்களில் நடித்து வருவதாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் அண்மையில் இன்ஸ்டாகிராமில் இருந்து தனது திருமண புகைப்படத்தையும் அவரது கணவர் பெயரையும் நீக்கிவிட்டாராம். அத்துடன் சீரியல் படப்பிடிப்புக்கு சென்று வந்த அவர் அண்மைக்காலமாகவே தனிமையிலேயே இருந்து வந்ததாக அவருடன் நடித்த நடிகர்கள் தெரிவித்துள்ளனர்.
அதுபோல் சோசியல் மீடியாவிலிருந்தும் அவர் விலகியிருந்ததாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் அவருக்கு கணவருடன் ஏதோ பிரச்சினை இருக்கலாம் என்று கன்னட ஊடகங்கள் சொல்கின்றன. திருமண வாழ்க்கையில் தோற்று போன விரக்தியில் சோபிதா தற்கொலை செய்து கொண்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications