For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடினமான சூழ்நிலையிலும் இயங்கும் தன்மை:பிபின் ராவத் பயணம் செய்த எம்.ஐ.17V-5 ரக ஹெலிகாப்டர் முழு தகவல்

Google Oneindia Tamil News

பிபின் ராவத் பயணம் செய்த எம்.ஐ.17V-5 ரக ஹெலிகாப்டர் பாதுகாப்பு மிக்க ஹெலிகாப்டராக பார்க்கப்படுகிறது. இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டராக இருந்தாலும் ஒவ்வொருமுறையும் நவீனபடுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கப்பட்ட ஹெலிகாப்டர். உலகின் மிகவும் பாதுகாப்பான ஹெலிகாப்டர்களில் இதும் ஒன்று.

 ஹெலிகாப்டர் விபத்து

ஹெலிகாப்டர் விபத்து

இன்று காலை முக்கிய நிகழ்ச்சிக்காக முப்படை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் என 14 பேர் கோவை சூலூரிலிருந்து வெலிங்டன் ராணுவதளத்துக்கு எம்.ஐ சீரிஸ் ஹெலிகாப்டரில் பயணம் செய்தபோது விபத்து ஏற்பட்டு பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

 முப்படை தளபதி மனைவியுடன் பலி

முப்படை தளபதி மனைவியுடன் பலி

இந்த விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருடன் பயணம் செய்த அவரது மனைவி மதுலிகா ராவத்தும் உயிரிழந்தார். ஹெலிகாப்டர் விபத்திற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் முறையான காரணம் விரிவான விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.

 Mi-17V-5 சீரிஸ் ஹெலிகாப்டர்

Mi-17V-5 சீரிஸ் ஹெலிகாப்டர்

பிபின் ராவத், அவரது மனைவி ராணுவ அதிகாரிகள் சென்ற இந்திய ராணுவ ஹெலிகாப்டர் தமிழகத்தில் விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டர் Mi-17V-5 நடுத்தர-லிஃடிங் ஹெலிகாப்டர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது இன்று உலகின் மிகவும் மேம்பட்ட மற்றும் பாதுகாப்பான பயணத்துக்கு ஏற்ற பல்வேறு அம்சங்கள் அடங்கிய ஹெலிகாப்டர்களில் ஒன்றாகும்.

Mi-சீரிஸ் ஹெலிகாப்டர்கள் இதற்கு முன்னர் 5 முறைகளுக்கு மேல் பல்வேறு காலக்கட்டங்களில் விபத்து சம்பவங்களில் சிக்கியுள்ளது என்றாலும் இத்தகைய ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பு பதிவு உலகில் உள்ள மற்ற சரக்கு ஹெலிகாப்டர்களை விட சிறப்பான ஒன்று ஆகும். இதுவரை சூலூரிலிருந்து நூற்றுக்கணக்கான முறை இந்த ஹெலிகாப்டர் பயணம் செய்துள்ளது என்பதிலிருந்து எவ்வளவு பாதுகாப்பான ஒன்று என்பதை புரிந்துக்கொள்ள முடியும்.

 Mi-17 V-5 ராணுவ ஹெலிகாப்டர்

Mi-17 V-5 ராணுவ ஹெலிகாப்டர்

Mi-17V-5 என்பது Mi-8/17 குடும்ப ஹெலிகாப்டர்களின் இராணுவப் போக்குவரத்து வகை ஹெலிகாப்டர் ஆகும், இது ரஷ்யத்தயாரிப்பு ஹெலிகாப்டர் ஆகும். Mi-17 சீரிஸ் வரிசையில் Mi-17V-5 எட்டாவதாக உருவாக்கப்பட்ட மாடல் ஆகும். தற்போது எவ்வித சீதோஷ்ண நிலையிலும் பறக்கக்கூடிய ஹெலிகாப்டர். உலகளவில் பல்துறை, நம்பகமான மற்றும் பணத்திற்கு சிறந்த ஹெலிகாப்டர் ஆகும். ரஷ்யாவின் கசானில் உள்ள ரஷ்ய ஹெலிகாப்டர்களின் துணை நிறுவனமான கசான் ஹெலிகாப்டர்களால் இந்த ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்நிறுவனம் சோவியத் யூனியன் அரசில் 1940 ஆம் ஆண்டு உருவானது. 81 வருட பாரம்பரியம் கொண்ட நிறுவனம் ஆகும்

 சரக்குப்போக்குவரத்து மற்றும் பயணத்திற்கானது

சரக்குப்போக்குவரத்து மற்றும் பயணத்திற்கானது

ராணுவ வீரர்கள், ஆயுதப் போக்குவரத்து, தீயணைப்பு பணிக்கு உதவுவது, விவிஐபிக்களின் கான்வாய் எஸ்கார்ட், ரோந்து மற்றும் தேடல் மற்றும் மீட்பு (SAR) பணிகள் என பல்வேறு வகையான இராணுவ நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுகிறது. பேரிடர் மீட்புப்பணிக்கு மிகவும் உபயோகமான ஹெலிகாப்டர் இது. முக்கியமாக பிரதமர் முதல் முக்கிய விவிஐபிக்கள் பயணம் செய்யும் ஒரே வகை ஹெலிகாப்டர் இது. இதில் 30 பேர் வரை பயணம் செய்யலாம் பாதுகாப்பானது என்பதால் விவிஐபிக்களின் பயணத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.

 இந்திய விமானப்படையில் சேர்ப்பு

இந்திய விமானப்படையில் சேர்ப்பு

Mi- சீரிஸ் ரக ஹெலிகாப்டர்கள் 1977 ஆம் ஆண்டு முதலே நமது ராணுவத்தில் உள்ளது. இந்திய விமானப்படையில் (IAF) ஹெலிகாப்டரைப் பயன்படுத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சகம் 2008 டிசம்பரில் ரஷ்ய ஹெலிகாப்டர்களுக்கு 80 ஹெலிகாப்டர்களை ஆர்டர் செய்தது. அனைத்துப்பணிகளும் முடிந்து விநியோகங்கள் 2011 இல் தொடங்கியது மற்றும் கடைசி ஹெலிகாப்டர் 2018 இல் ஒப்படைக்கப்பட்டது. நம்மிடம் இவ்வகை ஹெலிகாப்டர்கள் 150 உள்ளது என்று கூறப்படுகிறது. உலகில் 60 நாடுகள் இவ்வகை ஹெலிகாப்டர்களை பயன்படுத்துகின்றன.

Mi-17V-5 Klimov TV3-117VM அல்லது VK-2500 டர்போ-ஷாஃப்ட் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இதன் வேகம் மணிக்கு 250 கிமீ, மற்றும் 580 கிமீ வரம்பு. கூடுதலாக இரண்டு துணை எரிபொருள் தொட்டிகள் பொருத்தப்பட்டால் 1,065 கிமீ வரை பயணத்தை நீட்டிக்க முடியும். இந்த வகை ஹெலிகாப்டர் அதிகபட்சமாக 6,000 மீட்டர் உயரத்தில் பறக்க முடியும்.

 ஹெலிகாப்டரில் உள்ள வசதிகள்

ஹெலிகாப்டரில் உள்ள வசதிகள்

Mi-17 போக்குவரத்து ஹெலிகாப்டர் ஒரு பெரிய ஹால் போன்ற அறையைக் கொண்டது. பயணிகளுக்காக பக்கவாட்டில் கதவு மற்றும் விரைவான துருப்புக்கள் மற்றும் சரக்குகளை ஏற்ற பின்புறத்தில் ஒரு சரிவு போன்ற அமைப்பு உள்ளது. ஹெலிகாப்டர் அதிகபட்சமாக 13 டன் எடை கொண்டது. இதில் 36 ஆயுதம் ஏந்திய வீரர்கள் அல்லது 4,500 கிலோ எடையை சுமந்து செல்ல முடியும். இதை வெப்பமண்டல மற்றும் கடல்சார் காலநிலைகள் மற்றும் பாலைவன நிலைமைகள் உட்பட அனைத்து சூழ்நிலைகளிலும் பயன்படுத்தப்படலாம்.

 காக்பிட் மற்றும் ஏவியோனிக்ஸ்

காக்பிட் மற்றும் ஏவியோனிக்ஸ்

Mi-17V-5 ஆனது கண்ணாடி காக்பிட் அமைப்பை கொண்டது. அதிநவீன ஏவியோனிக்ஸ்களைப் பெறுகிறது, இதில் நான்கு பல்முனையில் இயங்கக்கூடிய திரைகள் (MFDகள்), இரவிலும் எளிதாக பார்க்கும் வகையில் நைட்-விஷன் கருவிகள், ஒரு ஆன்-போர்டு வானிலை ரேடார் மற்றும் ஒரு ஆடோமேடிக் பைலட் அமைப்பு ஆகியவை கொண்டுள்ளது.

 ஆயுத அமைப்புகள்

ஆயுத அமைப்புகள்

போக்குவரத்து மட்டுமல்ல, Mi-17V-5 ஆனது தாக்குதல் நேரத்தில் முழுகவசம் தரித்த ஆயுதங்கள் கொண்ட தாக்குதல் ஹெலிகாப்டராகவும் பயன்படும். இதில் Shturm-V ஏவுகணைகள், S-8 ராக்கெட்டுகள், 23mm இயந்திர துப்பாக்கி, PKT இயந்திர துப்பாக்கிகள் மற்றும் AKM துணை இயந்திர துப்பாக்கிகள் ஆகியவற்றை ஏற்றலாம். கன்னர் ஒருவர் இயந்திர துப்பாக்கியை இயக்கும் வகையில் கவச தகடுகள் பொருத்தவும் முடியும்.

Recommended Video

    Who is Bipin Rawat| வாழ்க்கை குறிப்பு
     பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய ஹெலிகாப்டர்

    பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய ஹெலிகாப்டர்

    இத்தகைய ஹெலிகாப்டர்களில் தான் நமது நாட்டின் முக்கிய தலைவர்கள், ராணுவ உயர் அதிகாரிகள் பயணிக்கின்றனர், வெள்ளம் பேரிடர் நேரங்களில், ரோந்துப்பணிகளில், போர் மூளும் சமயங்களில், அதி உயரமான மலைப்பிரதேசங்களில் சிக்கியவர்களை மீட்பது என பன்முக தன்மைக்கு இவ்வகை ஹெலிகாப்டர்கள் பயன்படுவதால் உலகின் பல்வேறு நாடுகள் இந்த நிறுவனத்தின் பலவகையான மாடல்களை வாங்கி பயன்படுத்துகின்றன.

     பாதுகாப்பற்றதா Mi-17V-5

    பாதுகாப்பற்றதா Mi-17V-5

    காருன்னு இருந்தால் சாலையில் போய்த்தான் ஆகவேண்டும், சாலையில் பயணித்தால் விபத்து நடக்கத்தான் செய்யும். ஆகவே அதை வைத்து பாதுகாப்பு அம்சங்களை மதிப்பிட முடியாது இதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதில் சாலையில் சென்ற சிவிலியன் ஒருவரும் ஹெலிகாப்டரிலிருந்த 6 விமானப்படை வீரர்களும் பலியாகினர்.

    சில வாரங்களுக்கு முன் அருணாச்சலப்பிரதேசத்தில் எம் ஐ 17 வி 5 ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. நல்வாய்ப்பாக யாரும் உயிரிழக்கவில்லை. 2018 ஆம் ஆண்டு கேதர்நாத் மலைமீது இறங்கும்போது எம் ஐ 17 வி 5 rஅக ஹெலிகாப்டர் இரும்பு காரிடாரில் பட்டு விபத்துக்குள்ளானது அதிர்ஷ்டவசமாக ஹெலிகாப்டரில் இருந்த 4 பயணிகள், 2 பைலட்கள் சிறு காயத்துடன் தப்பினர்.

    இந்திய விமானப்படையின் எம் ஐ 17 வி 5 ரக ஹெலிகாப்டர் 2017 ஆம் ஆண்டு அதிகாலையில் அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங்க் பகுதியில் விபத்துக்குள்ளானது. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய சீன எல்லையை ஒட்டி 12 கிலோமீட்டர் தொலைவில் ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்த போது திடீரென விழுந்து நொறுங்கியது

    English summary
    Brief view about MI-17V-5 helicopter that Bipin Rawat traveled
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X