EMI கடன் சுழலில் மாட்டி கொள்ளாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? சீக்ரெட்டை உடைத்த ஆனந்த் சீனிவாசன்
சென்னை: இளைஞர்கள் பலரும் EMI சுழலில் மாட்டிக் கொள்கிறார்கள். ஒரு முறை இதில் சிக்கினால் அதிலிருந்து வெளியே வருவதே பெரும் போராட்டமாக இருக்கிறது. இதற்கிடையே EMI ஏன் ஆபத்தானது.. இதில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாகப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
இந்த காலத்தில் பெரும்பாலான குடும்பங்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை EMI மூலமாகவே வாங்குகிறார்கள். ஒரே நேரத்தில் பெரிய தொகையைத் திரட்ட முடியாதவர்கள் EMI பக்கம் போகிறார்கள். எவ்வளவு விலையுயர்ந்த பொருளாக இருந்தாலும் மாதம் சிறு தொகை கொடுத்தாலே போதும் என்பதாலேயே பலரும் EMIல் பொருட்களை வாங்க விரும்புகிறார்கள்.

இஎம்ஐ
மேலும், இப்போதெல்லாம் முழு பணம் கொடுத்து வாங்குவோரைக் காட்டிலும் இஎம்ஐ மூலம் பொருட்களை வாங்குவோருக்கே சலுகைகளும் அதிகமாக இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பலரும் EMIல் பொருட்களை வாங்குகிறார்கள். இருப்பினும், சில நேரங்களில் மாதம் சிறு தொகை தான் என்பதால் ஒரே நேரத்தில் பல பொருட்களை EMIல் மாட்டிக் கொள்கிறார்கள். இதனால் அவர்கள் தங்களுக்கே தெரியாமல் ஒரு EMI சுழலில் சிக்கிக் கொள்கிறார்கள்.
ஆனந்த் சீனிவாசன்
இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன், இந்த EMI சுழல் குறித்து விளக்கியுள்ளார். மேலும், இதில் இருந்து தப்பிக்க ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் விளக்கத்தைக் கொடுத்துள்ளார். இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் சேனலில், "EMI சுழலில் இருந்து தப்பிக்க ஷார்ட்கட் எல்லாம் ஒன்றும் பெரிதாக கிடையாது. இதற்குக் காரணம் ஒன்றே ஒன்று தான்.. அதுதான் கிராட்டிபிகேஷன் (gratification- ஒரு பொருளை உடனடியாக வாங்க வேண்டும் என்ற எண்ணம்). அந்த கிராட்டிபிகேஷனை கட்டுப்படுத்த முடியாமல் போவதாலேயே EMIல் பொருட்களை வாங்குகிறார்கள்.
ஒரே தீர்வு
இது தொடர்பாகப் பிரிட்டனில் 1960களில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. மார்ஷ்மெல்லோ என்ற ஒரு இனிப்பைக் குழந்தைகளுக்குக் கொடுத்துள்ளனர். தனியாக ஒரு ரூமில் குழந்தைகளை விட்டு, அவர்களுக்குப் பிடித்த மார்ஷ்மெல்லோவை அங்கு வைத்துவிடுவார்கள். அரை மணி நேரம் அதைச் சாப்பிடாமல் வைத்திருந்தால் இரு மார்ஷ்மெல்லோ தருகிறோம் என்பார்கள். எந்த குழந்தைகளால் பொறுமையாக இருக்க முடிகிறதோ.. அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வாய்ப்பு அதிகம் என்பதைக் கண்டுபிடித்தார்கள். நீங்கள் இதை லட்டு வைத்துக் கூடச் செய்யலாம். இதை வைத்து குழந்தைகளுக்குப் பயிற்சி கொடுக்கலாம்!
ஏன் ஆபத்து
இன்னொரு உதாரணம்.. நீங்க ஒரு சிகரெட் அடிப்பதால் உங்களுக்கு கேன்சர் வந்துவிடாது. எதுவாக இருந்தாலும் ஒரு சிகரெட் பிடிப்பதால் கேன்சர் வராது. ஆனால், ஒன்று தானே என ஆரம்பித்தால்.. பிறகு இன்னும் ஒன்று.. இன்னும் ஒன்று என ஏறிக் கொண்டே போகும். நம்மிடம் கண்ட்ரோல் இருக்காது. இப்போது வரியினால் விலை அதிகமாக இருப்பதால் புகை பிடிப்பது கொஞ்சம் குறைவாக இருக்கிறது.
வரியைக் குறைத்தால் புகை பிடிப்பது அதிகரிக்கும்.. குடி பழக்கமும் கிட்டத்தட்ட அதே மாதிரி தான். எனவே, இஎம்ஐ விவகாரத்தைப் பொறுத்தவரை இங்கு கிராட்டிபிகேஷனை உங்களால் தாமதப்படுத்த முடிகிறதா என்பது தான் கேள்வி.! இன்றே எல்லாம் வேண்டும் என்பதே பிரச்சினைக்குக் காரணமாக இருக்கிறது" என்றார்.
கூடுதல் தொகை பிரச்சினை இல்லை
மேலும், இப்போதெல்லாம் பணம் கொடுத்து வாங்குவதை விட EMIல் வாங்கினால் சலுகை அதிகமாக இருக்கிறதே என்ற கேள்விக்கு அவர், "பரவாயில்லை.. அதிகபட்சம் 2% கூடுதல் தொகை கேட்பார்கள். ஒரு இஎம்ஐ தானே எனப் போய் அதில் மாட்டுவதற்குப் பதிலாக நான் கூடுதல் தொகையையே கட்டிக் கொள்வேன்" என்று அவர் தெரிவித்தார்.
அதாவது EMI என்பது மாதாமாதம் குறைவான தொகையைக் கட்டுவது போலத் தெரிந்தாலும்.. ஒரு முறை அதை வாங்க ஆரம்பித்தால்.. பல தேவையில்லாத பொருட்களை வாங்கி நாம் கடன் வலையில் சிக்குவோம் என்றும் இதனால் அந்த பக்கமே போகாமல் இருப்பது நல்லது என்கிறார் ஆனந்த் சீனிவாசன்.!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications