பெங்களூர்: ராக்கெட் வேகத்தில் உயரும் வாடகை.. இதெல்லாம் ரொம்ப அதிகம்.. ஆசியாவிலேயே டாப்!
ஆசிய-பசிபிக் பகுதியில் 2026 முதல் காலாண்டில் ஆபிஸ் வாடகை வளர்ச்சியில் இந்திய நகரங்கள் முன்னிலை வகிக்கிறது. சமீபத்தில் வெளியான Knight Frank அறிக்கையின்படி, பெங்களூரு நகரத்தில் ஆபீஸ் வாடகை வருடாந்திர அடிப்படையில் 14% உயர்வுடன் ஆசியாவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவின் டெக் நகரம் என்பதால் உலகளவில் இருக்கும் முன்னணி டெக் நிறுவனங்கள், குறிப்பாக ஜிசிசி அலுவலகங்களுக்கு பெங்களூர் தான் முதல் சாய்ஸ் ஆக உள்ளது. இதனால் அலுவலக இடத்திற்கான டிமாண்ட் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இத்தகைய சூழ்நிலையில் வாடகையும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக பெங்களூரில் தற்போது பல அலுவலகங்கள் டிராபிக் மிகுந்த பகுதிகள், சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாத பகுதிகளில் இருந்து வெளியேறி மாற்று இடத்திற்கு அல்லது நகரத்தை விட்டு வெளிப்புற பகுதிகளில் அலுவலகங்களை அமைக்க துவங்கியுள்ளது. இதனால் அதிகளவிலான குத்தகை ஒப்பந்தம் அதிக வாடகையில் செய்யப்பட்டு வருகிறது. இந்த கலவையான சூழ்நிலைக்கு மத்தியில் பெங்களூரில் வாடகை கடந்த ஆண்டை காட்டிலும் அதிகமாக உயர்ந்துள்ளது.
பெங்களூருவைத் தொடர்ந்து மும்பை 7.5% மற்றும் டெல்லி-NCR 8.2% வாடகை வளர்ச்சியைக் கண்டுள்ளன. இந்த வளர்ச்சி, இந்தியாவின் முக்கிய நகரங்களில் அலுவலக இடங்களுக்கான தொடர்ந்து அதிகரிக்கும் தேவையை பிரதிபலிக்கிறது. குறிப்பாக, உலகளாவிய நிறுவனங்களின் மையங்கள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் விரிவாக்கம் இந்த உயர்வுக்கு ஆதாரமாக உள்ளது.
ஆசிய-பசிபிக் பகுதியில் கண்காணிக்கப்பட்ட 24 நகரங்களில் 18 நகரங்களில் வாடகை உயர்வு பதிவாகியுள்ளது. மத்திய கிழக்கு பதற்றம் இருந்தபோதிலும், மொத்தமாக வாடகை 0.8% உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஆபீஸ் ரியல் எஸ்டேட் சந்தை மீண்டு வருவது தொடர்கிறது என்பதும் உறுதியாகிறது.
ஆசியாவில் மிக அதிக வாடகை கொண்ட நகமாக ஹாங்காங் SAR விளங்குகிறது. இந்தியாவில் டெல்லி-NCR தான் அதிக வாடகை கொண்ட அதாவது காஸ்ட்லிான சந்தையாக இருக்கிறது. இதன் மூலம் டெல்லி -என்சிஆர் உலகளவில் 6-வது இடத்தைப் பெற்றுள்ளது. மும்பை 8-வது இடத்திலும், பெங்களூரு 19-வது இடத்திலும் உள்ளது. (வருடாந்திர அடிப்படையில் வாடகையின் உயர்வு 14 சதவீதம்)
மார்ச் காலாண்டில் மட்டும் பெங்களூரு, மும்பை, டெல்லி-NCR ஆகிய நகரங்களில் சேர்த்து 1.88 கோடி சதுர அடி அலுவலக இடங்கள் வாடகைக்காக குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டைவிட 3% அதிகம். குறிப்பாக மும்பை 56 லட்சம் சதுர அடி குத்தகைக்கு விடப்பட்டது மூலம் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.
பெங்களூரு - ஜிசிசி வளர்ச்சிக்கு காரணம்
பெங்களூரில் முதல் காலாண்சடில் மொத்த வாடகை ஒப்பந்தங்களில் GCC நிறுவனங்கள் சுமார் 41% பங்கு உள்ளது. 11.8% காலி இடங்கள் இருந்தாலும், தேவை அதிகமுள்ளதால் வாடகை தொடர்ந்து உயரும் சூழல் உருவாகியுள்ளது.
சென்னை நிலைமை என்ன?
ஆசிய பசிபிக் அறிக்கையில் டிராக்கிங் செய்யப்படும் 24 நகரங்களில் சென்னை இடம்பெறவில்லை. ஆனால் தனியான ஆபீஸ் ரியல் எஸ்டேட் குறித்த இந்திய கினைட் பிராங்க் அறிக்கையில், சென்னை அலுவலக வாடகை கடந்த ஆண்டை காட்டிலும் 8% உயர்ந்துள்ளது. 15 லட்சம் சதுர அடி அளவிலான அலுவலக இடம் குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. 5 லட்சம் சதுர அடி புதிய அலுவலக இம் சந்தைக்கு வந்துள்ளது, பெங்களூரை ஒப்பிடுகையில் வாடகை வளர்ச்சி சற்று குறைவாகவே உள்ளது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications