For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாட்டின் நேரடி வரி வசூல் ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில் 14.1 சதவிகிதம் அதிகரிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில் 14.1 சதவிகிதம் அதிகரித்து, சுமார் 8.74 லட்சம் கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாகவும், ரீபண்டு தொகையாக 1.30 லட்சம் கோடி ரூபாய் திரும்ப செலுத்தியதாகவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

டெல்லி: 2017-18 நிதியாண்டின் டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் நேரடி வரியாக ரூ.8.74 லட்சம் கோடியை மத்திய அரசு வசூலித்துள்ளது. இது 2017-18 நிதியாண்டின் இதே காலத்தில் வசூலிக்கப்பட்ட தொகையைவிட 14.1 சதவிகிதம் கூடுதலாகும். அதேபோல, ஏப்ரல் முதல் டிசம்பர் வரையில் அரசு வழங்கிய ரீஃபண்ட் தொகையின் மதிப்பு ரூ.1.30 லட்சம் கோடியாக உள்ளது. இது சென்ற ஆண்டின் மதிப்பை விட 17 சதவிகிதம் அதிகமாகும்.

Direct tax increase by 14 perecnt to Rs 8.74 lakh crore

தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை தாக்கல் செய்யும் அனைத்து நிறுவனங்களும் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் நிறுவனத்தின் விற்று முதல் (Turnover) மற்றும் லாபத்தை உத்தேசமாக கணித்து அதற்கேற்ப முன்கூட்டியே வரியை (Advance Tax) செலுத்த வேண்டியது கட்டாயமாகும். அதுபோலவே, தனி நபர்களும் தங்களின் ஆண்டு வருமானத்தை உத்தேசமாக கணித்து அதற்கேற்ப வரியை முன்கூட்டியே செலுத்த வேண்டியது அவசியமாகும்.

இதனை ஒவ்வொரு நிதி ஆண்டிலும் நான்கு கட்டங்களாக, அதாவது முதல் தவணையாக, ஜூன் மாதமும், இரண்டாவது காலாண்டில் செப்டம்பர் மாதத்திலும், மூன்றாம் காலான்டில் டிசம்பர் மாதத்திலும், இறுதியாக நான்காவது மற்றம் இறுதி காலாண்டில் மார்ச் மாதமும் முன்கூட்டியே வரியை செலுத்துவது அவசியமாகும்.

மத்திய நிதி அமைச்சகம் நடப்பு நிதி ஆண்டுக்கான வரி வசூல் தொடர்பான அறிக்கையை திங்கள் கிழமை வெளியிட்டது. அதில் நடப்பு 2018-19ஆம் நிதி ஆண்டுக்கான நேரடி வரி வசூல் (Direct Tax) சுமார் 11.50 லட்சம் கோடி ரூபாய் வசூலாகும் என்று மத்திய நிதி அமைச்சகம் பட்ஜெட்டில் தெரிவித்திருந்தது. பட்ஜெட்டில் அறிவித்தது போலவே கடந்த ஏப்ரல்-டிசம்பர் கால கட்டத்தில் நேரடி வரியாக சுமார் சுமார் 8.74 லட்சம் கோடி ரூபாய வசூலாகி உள்ளது. இது கடந்த 2017-18 ஆம் நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் வசூலான தொகையைக் காட்டிலும் சுமார் 14.1 சதவிகிதம் அதிகம் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்கூட்டி செலுத்திய வரிகளாக (Advance Tax) ஏப்ரல்-டிசம்பர் பருவத்தில் சுமார் 3.64 லட்சம் கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. இது கடந்த நிதி ஆண்டைக்காட்டிலும் 14.5 சதவிகிதம் கூடுதலாகும். அதுபோலவே, ரீபண்ட் (Refund )தொகையாக சுமார் 1.30 லட்சம் கோடி ரூபாயை திரும்ப செலுத்தி உள்ளது. இது கடந்த 2017-18 ஆம் நிதி ஆண்டில் செலுத்தப்பட்ட ரீபண்ட் தொகையைக் காட்டிலும் சுமார் 17 சதவிகிதம் அதிகமாகும். மொத்தத்தில் ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில், திரும்ப செலுத்திய ரீபண்ட் தொகை போக, சுமார் 7.43 லட்சம் கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.

நிறுவனங்கள் செலுத்திய வரியானது (corporate tax) நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல்-டிசம்பர் பருவத்தில் சுமார் 14.8 சதவிகிதமாகும். அதுபோலவே, தனிநபர் (Personal Income tax) பிரிவில் சுமார் 17.2 சதவிகிதம் வசூலாகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்கூட்டி செலுத்திய (advance tax) வரி வருவாய் வகையில் நிறுவனங்கள் செலுத்திய வரியானது 12.5 சதவிகிதத்தையும், தனிநபர் பிரிவில் 23.8 சதவிகித வளர்ச்சியையும் கண்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிதியாண்டில் நேரடி வரியின் கீழ் ரூ.11.50 லட்சம் கோடியை வசூலிக்க அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. அதில் டிசம்பர் வரையில் மட்டும் வசூலிக்கப்பட்ட தொகை 64.7 சதவிகிதமாகும்.

English summary
The net direct tax collection mop up increased 14.1% to Rs.8.74 lakh crore in current fiscal 2018-19 April-December period. The refund amounting to Rs.1.30 lakh crore issued and the net direct tax collection in 2018-19 April-December Period Rs.7.43 lakh crore-finance mininstry said Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X