For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யுஎஸ்: வருமான வரி தாக்கல் செய்யப் போறீங்களா? வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிவுறுத்தல்!

By Shankar
Google Oneindia Tamil News

நியூயார்க்(யு.எஸ்): அமெரிக்காவில் 2016ம் ஆண்டுக்கான தனி நபர் வருமான வரி தாக்கல் செய்யும் கடைசி நாள் ஏப்ரல் 15ம் தேதி ஆகும்.

மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு ஆண்டு முழுவதும், சம்பளப் பணத்தில் வருமான வரி பிடித்தம் செய்து கொள்வார்கள்.

Wall Street Journal suggestions for US income tax filings

ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான ஆண்டுக் கணக்குக்கு ,சம்பளம், பிடித்தம் செய்யப்பட்டுள்ள தொகை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய படிவம் W2 , ஜனவரி மாத இறுதிக்குள் கிடைத்து விடும்.

உடனடியாக வருமான வரி தாக்கல் செய்யும் படிவத்தை(1040) பூர்த்தி செய்து சமர்ப்பித்து விட்டால், அதிகமாக பிடித்தம் செய்யப்பட்ட தொகை விரைவில் வங்கிக் கணக்கில் வரவு செய்யப்பட்டு விடும்.

ஆன்லைன் ஓகேவா ?

அமெரிக்க அரசு வருமான வரி தவிர, வேலை பார்க்கும் மாநிலங்களுக்கும் குறிப்பிட்ட சதவீத வருமான வரி செலுத்த வேண்டும்.

அமெரிக்கா முழுவதும் டெக்சாஸ், ஃப்ளோரிடா, வாஷிங்டன், அலாஸ்கா, நெவடா, தெற்கு டகோட்டா, வயாமிங், நியூ ஹாம்ஷயர், டென்னசி உள்ளிட்ட 9 மாநிலங்களில் வருமான வரி கிடையாது

பொதுவாக சம்பள வருமானம் மட்டும் கொண்ட தனி நபர் / குடும்பம் என்றால் சில ஆன்லைன் வெப்சைட்கள் மூலமாகவே தாக்கல் செய்து விடுவார்கள்.

இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்கள்.

ஆண்டு வருமானம் 64 ஆயிரம் டாலர்களுக்கு குறைவாக இருப்பவர்கள் ஆன்லைன் மூலமாக தாக்கல் செய்வது சிறந்ததாம்.

Wall Street Journal suggestions for US income tax filings

H&R Block, Intuit Inc, Credit Karma என்ற மூன்று தளங்களை பரிந்துரைத்துள்ளார்கள். குறிப்பிட்ட காலம் வரை சில தளங்கள் இலவசமாகவே தாக்கல் செய்ய வழிவகை செய்துள்ளன.

ஆன்லைன் வசதி என்றாலும், சில முக்கிய அம்சங்கள் விடுபட்டு விடலாம், சில தவறுகள் ஏற்பட்டு IRS பிடியில் சிக்குவதற்கும் வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்கள்.

ஆடிட்டர் வேணுமா என்ன?

இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்ய உதவி வேண்டுமென்றால், ஆடிட்டர்களை தேடுவது தானே வழக்கம். அமெரிக்காவில் வருமான வரி ஸ்பெஷலிஸ்ட் ஆக, அரசு அங்கீகாரம் பெற்றவர்கள் ஏராளம் உண்டு.

மேலே குறிப்பிட்ட விடுபடுதல்கள், தவறுகள் இல்லாமல் தாக்கல் செய்ய இவர்களின் உதவி தேவைப்படும்.

கடந்த ஆண்டில் சொந்தமாக தொழில் செய்பவர்கள், வீடு, ஷேர்மார்க்கெட் உள்ளிட்ட முதலிடுகள் செய்பவர்கள், நிறுவன பங்குதாரர்கள், ஓய்வு பெற்றவர்கள், வீடு விற்றவர்கள், விவாகரத்து ஆனவர்கள்,

பல மாநிலங்களில் வருமானம் உள்ளவர்கள், இயற்கை பேரிடரால் நஷ்டம் அடைந்தவர்கள் , அளவுக்கு அதிகமாக மருத்துவச் செலவு செய்தவர்கள்

ஆகியோர் வருமான வரி ஸ்பெஷலிஸ்ட்டுகள் உதவியுடன் தாக்கல் செய்யுங்கள் என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிவுறுத்தியுள்ளது.

இது தவிர, இந்திய வங்கிக் கணக்கிலும் ஷேர்களிலும், கடந்த ஆண்டில் ஒரு நாள் 10 ஆயிரம் டாலருக்கு மேல் இருப்பு இருந்தால், FBAR என்றழைக்கப்படும் வெளி நாட்டு வங்கி கணக்குகள் அறிக்கையும் தாக்கல் செய்யவேண்டும்.

தனி நபருக்கு வெளி நாட்டில் உள்ள சொத்துக்கள், ஆண்டு இறுதியில் 200 ஆயிரம் டாலர்கள் அல்லது ஏதாவது ஒரு நாள் 300 ஆயிரம் டாலர்கள் மதிப்பில் இருந்தால் FATCA என்ற படிவமும் தாக்கல் செய்ய வேண்டும்.

கணவன் - மனைவி இணைந்து தாக்கல் செய்தால் இந்த தொகை 400 ஆயிரம் டாலர்கள் மற்றும் 600 ஆயிரம் டாலர்கள் என நிர்ணயிக்கப் பட்டுள்ளது..

இதெல்லாம் உரிய ஸ்பெஷலிஸ்டுகளிடம் கேட்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள் சரியாக தாக்கல் செய்து கொள்வது அவசியமாகும்.

அமெரிக்காவில் சம்பாதிப்பது மட்டுமல்ல, அதற்குரிய வருமான வரி படிவங்களை சரியாக தாக்கல் செய்து, சட்டச் சிக்கல்களிலிருந்து தற்காத்துக் கொள்வதும் சிரமமான ஒன்றுதான்!

English summary
Wall Street Journal has suggested, who should take the help of professional income tax preparer and who can submit using online portals. The deadline for individual income tax filing in US is April 15
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X