Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அன்று மூதாட்டி.. இன்று 13 வயது சிறுவன்! மிரளவைக்கும் பிட்புல் நாய் தாக்குதல்! வார்னிங் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: உலகில் ஆக்ரோஷமான வகை நாய்களில் ஒன்றாகக் கருதப்படும் பிட்புல் நாய்களின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நாய்களைப் பலருக்கும் ரொம்பவே பிடிக்கும். நாய்களை தங்கள் வீடுகளில் வளர்க்கும் பலரும் அதை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பார்ப்பார்கள்.

ஆனால், சில சமயங்களில் நாய்களால் குடும்ப உறுப்பினர்களுக்கோ அல்லது அக்கம்பக்கத்தினருக்கோ ஆபத்து ஏற்படலாம்.

நாய்கள்

நாய்கள்

அனைத்து வகை நாய்களுக்கும் செல்லமாக இருக்கும் எனச் சொல்ல முடியாது. சில குறிப்பிட்ட வகை நாய்கள் இயல்பாகவே ஆவேசமான குணம் கொண்டவை. அவற்றை வீடுகளில் வளர்க்கும்போது, அதிக ஜாக்கிரதை உடன் வளர்க்க வேண்டும். இல்லையென்றால், அந்த நாய்களே ஆபத்து ஏற்படக்கூடும். இதற்கான ஆபத்து குறைவு தான் என்றாலும் கூட நாம் கவனமாக இருக்க வேண்டும்.

பஞ்சாப்

பஞ்சாப்

பஞ்சாப் மாநிலத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் நேற்றைய தினம் 13 வயது சிறுவன் ஒருவனைச் செல்ல பிராணியாக வளர்க்கப்பட்ட நாய் ஒன்று கொடூரமாகத் தாக்கியது. அந்த சிறுவனை நாய் துரத்தித் துரத்தி கொடூரமாகக் கடித்துள்ளது. இதன் காரணமாக அந்தச் ​​சிறுவனின் காது மிக மோசமாகத் தேசம் அடைந்து உள்ளது.

 கொடூர தாக்குதல்

கொடூர தாக்குதல்

இந்தக் கொடூர சம்பவம் நடந்த போது, அந்த சிறுவனின் அப்பா அருகில் தான் இருந்துள்ளார். அவரும் தனது மகனை நாயின் தாக்குதலில் இருந்து காப்பற்ற முயன்று உள்ளார். இருப்பினும், அவரையும் தாக்கிவிட்டு நாய் அச்சிறுவனைக் கொடூரமாகக் கடித்து உள்ளது. பெரும் போராட்டத்திற்குப் பின்னரே, நாயிடம் இருந்து சிறுவனை அவரது தந்தை காப்பாற்றி உள்ளார். இந்தச் சம்பவம் பஞ்சாபின் குர்தாஸ்பூரில் உள்ள கோட்லி பான் சிங் கிராமத்தில் நடந்துள்ளது.

 என்ன நடந்தது

என்ன நடந்தது

சிறுவனும் அவரது தந்தையும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, உரிமையாளருடன் வெளியே நின்ற பிட்புல் நாய் சிறுவனை நோக்கி திடீரென ஆவேசமாகக் குரைக்கத் தொடங்கியது. உரிமையாளர் கையில் இருந்து கயிறு தவறிய சமயம் பார்த்து, திடீரென அந்த பிட்புல் சிறுவனைத் தாக்கியது. அதன் பின்னர் பெரும் போராட்டத்திற்குப் பின்னரே சிறுவன் காப்பாற்றப்பட்டான்.

 காது சிதைவு

காது சிதைவு

அதைத் தொடர்ந்து நாயைக் கட்டுப்படுத்திய அதன் உரிமையாளர் வீட்டிற்கு அதை எடுத்துச் சென்றுவிட்டார். நாய் தாக்குதலில் படுகாயமடைந்த சிறுவன், சிகிச்சைக்காக படாலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. தற்போது குழந்தை சீராக இருப்பதாகவும், சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மோசமான பிட்புல் நாய் தாக்குதல் பதிவாவது இது முதல்முறை இல்லை.

 முதல்முறை இல்லை

முதல்முறை இல்லை

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான், உத்தரப் பிரதேசம் கைசர்பாக் பகுதியைச் சேர்ந்த 82 வயது முதியவர் சுசீலா திரிபாதி என்பவரை அவரது வீட்டிலேயே வளர்த்து வந்த பிட்புல் நாயைக் கடித்துக் கொன்றது. நாட்டில் சில மாநிலங்களில் சட்ட விரோதமாக நாய்களைச் சண்டைக்கு விடுகிறார்கள். இதற்காக ஆக்ரோஷமாக வளர்க்கப்படும் நாய்கள் இனப்பெருக்கம் செய்யும்போது, அதன் குட்டிகளுக்கும் அதே ஆக்ரோஷமான குணம் இருக்கும் என்பதால் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+