பஞ்சாப்பில் கோர ரயில் விபத்து.. அனுமதி இன்றி விழா நடத்திய காங்கிரஸ்.. அதிர்ச்சி பின்னணி!

பஞ்சாப் அமிர்தசரஸில் ரயில் விபத்துக்கு காங்கிரஸ் நடத்திய தசரா விழாதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: பஞ்சாப் அமிர்தசரஸில் நடத்த கோர ரயில் விபத்துக்கு காங்கிரஸ் அனுமதி இன்றி நடத்திய தசரா விழாதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அந்த விழாவில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சரின் மனைவி கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப்பில் தசரா விழா சோகத்தில் முடிந்து இருக்கிறது. பஞ்சாப் மாநிலம் அருகே உள்ள செளரா பஸார் பகுதியில் ரயில் மோதி 50கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர். அமிர்தசரஸில் ரயில் தண்டவாளத்திற்கு அருகே தசரா விழாவிற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Congress MP is one of the reasons behind Punjab Dussehra train accident

இதில் ரயில் பாதைக்கு அருகேயே வைத்து ராவண உருவத்தை கொளுத்தி இருக்கிறார்கள். அப்போது அதில் இருந்து வெடிகள் வெடித்ததில் மக்கள் பயந்து ரயில் பாதையை நோக்கி ஓடியுள்ளார். சரியாக அந்த நேரத்தில் ரயில் வந்து அங்கு இருந்த மக்கள் மீது மோதியுள்ளது.

இந்த நிலையில் இந்த விபத்து கூடுதல் தகவல்கள் கிடைத்து இருக்கிறது. அதன்படி விழாவை காங்கிரஸ் கட்சிதான் ஏற்பாடு செய்து இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி, இதற்கு அனுமதி இல்லாமல் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து சார்பாக விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவரது மனைவிதான் இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். அவர் பேசிக்கொண்டு இருக்கும் போது விபத்து நடந்துள்ளது.

இப்படி ரயில் தண்டவாளத்திற்கு அருகில் விழா நடத்த காங்கிரஸ் கட்சியினர் அனுமதி வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதில் மோசமான விஷயம் என்னவென்றால் விபத்து நடந்தது தெரியாமல் அவர் தொடர்ந்து தசரா விழா குறித்து பேசிக்கொண்டு இருந்துள்ளார். அங்கிருந்த நேரடி சாட்சியங்கள் இதுகுறித்து தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.

இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+