பஞ்சாப் தேர்தல்: அடடே! ஓரம்கட்டப்பட்ட காங். சீனியர்களையும் தேர்தல் களத்தில் இறக்கிய டெல்லி மேலிடம்!
சண்டிகர்: பஞ்சாப் சட்டசபை தேர்தல் காங்கிரஸ் மேலிடம் செயல்படுத்தி வரும் வியூகங்கள் இப்போது தேர்தல் களத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதுவரை ஓரம்கட்டப்பட்ட சீனியர் தலைவர்களை உள்ளடக்கிய தேர்தல் குழுவை அறிவித்துள்ளது காங்கிரஸ் மேலிடம்.
பஞ்சாப் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் உட்கட்சி பூசல்களால் ஆட்சி அதிகாரத்தை இழக்கும்; அம்மாநிலத்தில் தொங்கு சட்டசபைக்குதான் வாய்ப்புகள் அதிகம் என்றே கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், சிரோமணி அகாலிதளம்-பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி, பாஜக, அமரீந்தர்சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் ஆகியவை களத்தில் நிற்கின்றன. காங்கிரஸைப் பொறுத்தவரை முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங்கால் பின்னடைவு ஏற்படும் என தெரிகிறது.

பாஜக நிலவரம்
அமரீந்தர்சிங் கட்சியானது பாஜகவுடன் கை கோர்க்கிறது. பஞ்சாப் மாநிலத்தைப் பொறுத்தவரை நீண்டகாலமாக பாஜக-சிரோமணி அகாலிதள் கூட்டணியே இருந்து வந்தது. மத்திய அரசின் 3 விவசாய சட்டங்கள் விவகாரத்தில் இந்த கூட்டணி முறிந்தது. இப்போது பஞ்சாப்பில் அமரீந்தர்சிங் எனும் குதிரை பாஜகவுக்கு கிடைத்திருக்கிறது. இது எந்த அளவுக்கு அக்கட்சிக்கு கை கொடுக்கும் என்பது உறுதியாக தெரியவில்லை.

காங். கோஷ்டி பூசல்
பஞ்சாப் ஆளும் காங்கிரஸானது தொடர்ந்து கோஷ்டி பூசலில் சிக்கி தவிக்கிறது. முதல்வர் சரண்ஜித்சிங் சன்னிக்கு எதிராக மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத்சிங் சித்து தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறார். இது நிச்சயம் தேர்தலில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில் பஞ்சாப் மாநில தேர்தல் குழுவை காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.

பஞ்சாப் தேர்தல் குழு
பஞ்சாப் காங்கிரஸ் தேர்தல் குழுவின் ஒருங்கிணைப்பாளராக மூத்த காங்கிரஸ் தலைவர் அம்பிகா சோனி நியமிக்கப்பட்டுள்ளார். வேட்பாளர் தேர்வுக் குழுவின் பொறுப்பாளராக அஜய் மக்கானும் தேர்தல் பிரசார பொறுப்பாளராக மூத்த தலைவர் சுனில் ஜாகரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அமரீந்தர்சிங் பதவி விலகிய போது முதல்வர் பதவிக்கு அம்பிகா சோனி பெயர் அடிபட்டது. அவரைத் தேடி வந்த முதல்வர் பதவியை வேண்டாம் என மறுத்தார். அத்துடன் பஞ்சாப் மாநிலத்தைப் பொறுத்தவரை சீக்கியர் ஒருவர்தான் முதல்வராக இருக்க வேண்டும் என்றும் அறிவித்தவர் அம்பிகா சோனி.

சீனியர்கள் ஹேப்பி
அமரீந்தர்சிங் குடைச்சல் கொடுத்த போது பஞ்சாப் களத்துக்கு வந்தவர் அஜய் மக்கான். அப்போது முதல்வர் பதவியை ரொம்பவே எதிர்பார்த்தவர் சுனில் ஜாகர். ஆனால் சரண்ஜித்சிங் சன்னி முதல்வராக்கப்பட்டதால் சுனில் ஜாகர் கடும் அதிருப்தி அடைந்தார். கட்சியின் சீனியர்களுக்கு மதிப்பே இல்லையா? எனவும் 2012-ல் கட்சிக்கு வந்த சரண்ஜித்சிங் முதல்வர்; 2017-ல் கட்சிக்கு வந்த சித்து மாநில தலைவர்.. என்ன நடக்கிறது என குமுறினார் சுனில் ஜாகர். இப்போது அவரையும் சமாதானப்படுத்தும் வகையில் தேர்தல் குழுவில் இணைத்திருக்கிறது காங்கிரஸ் மேலிடம்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications