மத்திய பாஜக அரசின் இசட் பிளஸ் பாதுகாப்பு தேவையே இல்லை.. தூக்கி எறிந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்
சண்டிகர்: மத்திய பாஜக அரசு தமக்கு வழங்க முன்வந்த இசட் பிளஸ் பாதுகாப்பு தேவை இல்லை என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நிராகரித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியானது ஆட்சியைக் கைப்பற்றி பிரதான அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தது. பஞ்சாப் முதல்வராக 49 வயதான பகவந்த் மான் தேர்ந்தெடுக்கப்பட்டார். பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தது முதல் காலிஸ்தான் தனிநாடு கோரும் சீக்கியர் அமைப்புகள் தலையெடுக்க தொடங்கின. இதனால் பஞ்சாப் மாநிலத்தில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் அச்சம் உருவானது.

ஆனால் முதல்வர் பகவந்த் மான், காலிஸ்தான் பயங்கரவாதி அம்ரித்பால் சிங் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை தீவிரமாக வேட்டையாடி சிறையில் அடைத்தார். இதனால் காலிஸ்தான் பயங்கரவாதிகள் பகவந்த் மானுக்கு மிரட்டல் விடுத்தனர். அமெரிக்காவில் உள்ள அவரது மகளையும் காலிஸ்தான் பயங்கரவாத கும்பல் மிரட்டியதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில்தான் மத்திய அரசு, ஒரு மாநில முதல்வர் என்ற அடிப்படையில் பகவந்த் மானுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க முன்வந்தது.
மத்திய பாஜக அரசின் இசட் பிளஸ் பாதுகாப்பை நிராகரிப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் அனுப்பினார் பகவந்த் மான். அத்துடன், டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் தமக்கு பஞ்சாப் மாநில போலீசாரே பாதுகாப்பு வழங்குவர் எனவும் பகவந்த் மான் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
டெல்லி அதிகாரிகள் நியமனம், மாறுதல் விவகாரத்தில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசின் முதல்வர் கெஜ்ரிவால் இதனை கடுமையாக எதிர்த்து வருகிறார். அத்துடன் ஒவ்வொரு மாநிலமாக சென்று மாநிலங்களின் முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து ராஜ்யசபாவில் மத்திய அரசின் டெல்லி மசோதாவை தோற்கடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இந்த பயணத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பகவந்த் மானும் சென்று வருகிறார். அரவிந்த் கெஜ்ரிவாலும் பகவந்த் மானும் இன்று தமிழ்நாடு வருகை தர உள்ளனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை இரு மாநில முதல்வர்களும் சந்தித்து பேச உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications