சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பஞ்சாப்பில் ஷிரோமணி அகாலிதளத்துடன் பாஜக கூட்டணியில்லை.. அடித்துச் சொல்லும் மத்திய அமைச்சர்

By
Google Oneindia Tamil News

சண்டிகர்: பஞ்சாப் தேர்தலில் பாஜக, ஷிரோமணி அகாலி தளத்துடன் கூட்டணி அமைக்காது என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் வரும் 10ம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. இதன் முடிவுகள் மார்ச் மாதத்தில் வெளியிடப்படவுள்ளன.

117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்துக்கு வருகிற 20-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. விவசாயிகள் போராட்டம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்ததையடுத்து, இந்தியாவே பஞ்சாப் தேர்தலை உற்றுநோக்கிவருகிறது.

பிஇ பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு.. பெல் நிறுவனத்தில் கொட்டிக்கிக்கும் வேலைகள்! பிஇ பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு.. பெல் நிறுவனத்தில் கொட்டிக்கிக்கும் வேலைகள்!

பஞ்சாப்

பஞ்சாப்

பஞ்சாப் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. கடந்த தேர்தலில் மோசமாக தோற்ற பாஜக, இந்த முறை வெற்றி பெற யுத்திகளை மாற்றி வருகிறது. இந்நிலையில், பாஜக ஏற்கெனவே ஷிரோமணி கட்சியுடன் கூட்டணியில் இருந்தது. அந்தக் கூட்டணியில் இருந்து வெளியில் வந்திருக்கிறது. இந்நிலையில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இதை மோசமான திருமணம் என்று தெரிவித்திருக்கிறார்.

 ஹர்தீப் சிங் பூரி

ஹர்தீப் சிங் பூரி

பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் மணல் மாபியாக்களையும் சாராயத்தையும் ஒழிக்க நினைக்கிறோம் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில், ''பஞ்சாப் இந்தியாவின் எல்லையில் அமைந்திருக்கிறது. நாங்கள் கேப்டன் மற்றும் திண்ட்சாவுடன் வைத்த கூட்டணி அர்பணிப்பின் அடிப்படையில் அமைந்தது.

 கெஜ்ரிவால்

கெஜ்ரிவால்

பஞ்சாபில் மதுவை ஒழிப்பேன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஆனால், டெல்லியில் மதுக்கடைகளை திறந்துவைத்திருக்கிறார் கெஜ்ரிவால். அவர் சொல்வதெல்லாம் எதுவும் பஞ்சாபில் எடுபடாது. பஞ்சாப் மக்களை இதையெல்லாம் பொருட்படுத்தமாட்டார்கள்.

 அகாலிதளம்

அகாலிதளம்

சிரோமணி அகாலிதளத்துடன் பாஜக இதற்கு முன் கூட்டணியில் இருந்தது. அகாலிதளத்துடனான எங்கள் கூட்டணி கேள்விக்குறியே. அகாலிதளத்துடனான கூட்டணி மோசமான திருமணம். அவர்கள் தான் வெளியேறினார்கள், நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்," என்றார் மத்திய‌ அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி. மேலும் பாஜக-பிஎல்சி அமைக்கும் கூட்டணியில் மாபியாக்கள் அழிக்கப்படும் மற்றும் வேலைவாய்புகள் உருவாக்கப்படும் என்றார்.

English summary
Union Minister Hardeep Singh Puri has said that the BJP will not form an alliance with the Shiromani Akali Dal in the Punjab elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X