சிறைக்குள்ளேயே மனைவியுடன் "தனிமை"யில் இருக்கலாம்! பஞ்சாபில் புதிய திட்டம்.. இந்தியாவில் முதல்முறை
சண்டிகர்: பஞ்சாப் போலீசார் அங்கு சிறையில் உள்ள கைதிகளுக்கு புதிய ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளனர்.
பொதுவாக நமது நாட்டில் சிறையில் உள்ளவர்களைப் பார்க்க வேண்டும் என்றால் அதற்குப் பல கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால், மத்திய அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கைதிகளை அவர்கள் குடும்பத்தினர் தனிமையில் சந்திக்கலாம்.
குடும்பத்தினர் என்றால் அவர்களது மனைவி அல்லது கேர்ள் பிரண்ட் தனிமையில் சந்திக்க முடியும். குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒரு முறை இப்படி சிறை கைதிகள் தனிமையில் நேரத்தைச் செலவிட முடியும்.

சிறை
இப்படி சிறையில் இருக்கும் கைதிகள் மனைவி அல்லது கேர்ள் பிரண்டை தனிமையில் சந்திக்கும் முறைக்கு conjugal visits என்று அழைக்கப்படுகிறது. தங்கள் பார்டனர்களுடன் தனிமையில் இருப்பது அடிப்படை உரிமை என்று அவர்கள் கருதுகிறார்கள். இந்நிலையில், இதே திட்டத்தை இந்தியாவில் முதல்முறையாகப் பஞ்சாப் மாநிலம் அமல்படுத்த உள்ளது.

பஞ்சாப் சிறை
இந்தியாவில் முதல்முறையாக இப்படியொரு திட்டத்தைப் பஞ்சாப் சிறைத் துறை முன்னெடுத்து உள்ளது. இத்திட்டத்தின் கீழ் நல்ல நடத்தை கொண்டு இருக்கும் கைதிகள், பாதுகாப்பான அறையில் தங்கள் பாட்னர்கள் உடன் இரண்டு மணிநேரம் வரை செலவிடலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாகப் பஞ்சாபில் உள்ள கோயிண்ட்வால் சாஹிப் மத்தியச் சிறை, நபா புதிய மாவட்ட சிறை மற்றும் பதிண்டா பெண்கள் சிறை என 3 சிறைகளில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

தனிமையில் இருக்கலாம்
கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி லூசியானா மத்தியச் சிறையில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காகச் சிறைக்குள்ளேயே தனிமையில் இருக்கத் தனியாக அறைகளைக் கட்டப்பட்டு உள்ளது. இதில் கைதிகள் தங்கள் பாட்னர்களுடன் தனிமையில் இருக்கலாம். அதேவேலையில் அவர்கள் தப்பித்துப் போகாத வகையில் மிகவும் பாதுகாப்பாகவும் இந்த அறைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

முதல்முறை
கடந்த செவ்வாய்க்கிழமை மட்டும் மொத்தம் 21 கைதிகள் தங்கள் பார்டனர்கள் உடன் தனிமையில் நேரத்தைச் செலவிட்டு உள்ளனர். இத்திட்டம் தொடர்பாகக் கைதிகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் பாசிட்டிவாக உள்ளதாகவும் விரைவில் இதை மாநிலம் முழுக்க விரிவுபடுத்தத் திட்டமிட்டு உள்ளதாகவும் அம்மாநில சிறைத்துறை டிஜிபி ஹர்பிரீத் சிங் சித்து தெரிவித்து உள்ளார். இம்மாத இறுதியில் மேலும் 6 சிறைகளில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

எதற்காக
பஞ்சாபில் மொத்தம் 26 சிறைகள் உள்ள நிலையில், விரைவில் இது அனைத்து சிறைகளிலும் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்தார். சிறைத்துறை டிஜிபி ஹர்பிரீத் சிங் சித்து மேலும் கூறுகையில், "இது சிறையில் இருக்கும் சூழலை மேம்படுத்த உதவும். இதன் காரணமாகச் சிறையில் உள்ள கைதிகள் நடத்தை மேம்படும். மேலும், குடும்பத்தினர் உடன் அவர்களுக்கான உறவும் மேம்படும். இதற்காக உழைத்த சிறைத்துறை அதிகாரிகளுக்கு எனது வாழ்த்துகள்" என்று அவர் தெரிவித்தார்.

தனி ரூம்கள்
கைதிகள் பாட்னர்கள் உடன் தனிமையில் நேரத்தைச் செலவிட பாத் ரூம் உடன் கூடிய தனி அறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இவை கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து தள்ளி ஒதுக்குப்புறமாக இருக்கும். அதேநேரம் ஜெயில் வளாக்திற்குள் தான் இந்த ரூம்கள் கட்டப்பட்டு உள்ளன. இது தவிரச் சிறை கைதிகளுக்கு யோகா, விளையாட்டு உள்ளிட்ட வசதிகளையும் பஞ்சாப் அரசு மேற்கொண்டு உள்ளது. இதன் மூலம் கைதிகள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைக் குறைக்க முடியும் எனப் பஞ்சாப் போலீஸ் நம்புகிறது.

அனுமதி இல்லை.
கொடூர குற்றவாளிகள், ரவுடிகள், பயங்கரவாதிகள் மற்றும் எச்.ஐ.வி போன்ற கடுமையான தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த திட்டத்தில் பங்கேற்க அனுமதி இல்லை. விசாரணை கைதி அல்லது தண்டனை காலத்தில் இருக்கும் கைதி ஒருவர் சம்பந்தப்பட்ட சிறைக் கண்காணிப்பாளரிடம் இது தொடர்பாகக் கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். கைதியின் நடத்தை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை ஆய்வு செய்த பின்னர், இதற்கான அனுமதி அவர்களுக்கு வழங்கப்படும்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications