Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Periasamy Kumaran: இங்கிலாந்திற்கான இந்தியாவின் புதிய தூதராக பெரியசாமி குமரன் நியமனம்! யார் தெரியுமா இவர்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய வெளியுறவு சேவை (IFS) அதிகாரி பெரியசாமி குமரன், இங்கிலாந்திற்கான இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். வெளியுறவு அமைச்சகம் இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. 1992-ஆம் ஆண்டு இந்திய வெளியுறவு சேவை பிரிவைச் சேர்ந்த குமரன், சமீபத்தில் சீனாவுக்கான தூதராகப் பொறுப்பேற்ற விக்ரம் துரைசாமிக்குப் பதிலாக இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

பெரியசாமி குமரன் தற்போது வெளியுறவு அமைச்சகத்தின் கிழக்குத் துறை செயலாளராக, 2025 ஏப்ரல் 1 முதல் பணியாற்றி வருகிறார். சுமார் முப்பது ஆண்டுகள் தூதரகங்களில் பணியாற்றிய இவர், 1994 முதல் 1997 வரை கெய்ரோவில் மூன்றாம் செயலாளராகத் தனது தூதரக பணியைத் தொடங்கினார்.

Who Is Periasamy Kumaran Meet India s Incoming High Commissioner to the UK

வாஷிங்டனில் ஆலோசகர்

அதைத்தொடர்ந்து டிரிப்போலி மற்றும் புருசெல்ஸ் ஆகிய இடங்களிலும் பணியாற்றினார். 2003 முதல் 2005 வரை டெல்லியில் துணைச் செயலாளராக (மேற்கு ஐரோப்பா) பொறுப்பு வகித்தார். பின்னர் பெங்களூரில் பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரியாகவும், 2007 முதல் 2009 வரை இஸ்லாமாபாத்தில் ஆலோசகராகவும் பதவி வகித்தார்.

இதைத் தொடர்ந்து வாஷிங்டனிலும் ஆலோசகராகப் பணியாற்றினார். 2011 முதல் 2014 வரை கொழும்பில் துணை தூதராகவும், 2014 முதல் 2016 வரை டெல்லியில் தூதரகம், பாஸ்போர்ட், விசா தொடர்பான விஷயங்களுக்கு இணைச் செயலாளராகவும் செயல்பட்டார். 2016 முதல் 2020 வரை கத்தாருக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டார்.

தமிழகத்தை சேர்ந்தவர்

2020 முதல் 2023 வரை சிங்கப்பூருக்கான தூதராக இருந்தார். இந்தியா திரும்பியதும் வெளியுறவு அமைச்சகத்தில் பொருளாதார உறவுகள் மற்றும் மேம்பாட்டுப் கூட்டாண்மை நிர்வாகப் பிரிவுகளில் கூடுதல் மற்றும் சிறப்புச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.

ஐஐடி மெட்ராஸில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷனில் பி.டெக் பட்டம் பெற்ற குமரன், ஆங்கிலம், தமிழ், இந்தி, அரபு ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர். 1992 ஆம் ஆண்டு ஐஎப்.எஸ் அதிகரியான பெரியசாமி குமரன் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+