ஷாக்.! அமிர்தசரஸ் பொற்கோயில்.. கருவறைக்குள் புகுந்து மர்ம நபர் அடித்துக் கொலை.. என்ன நடந்தது?
சண்டிகர்: அமிர்தசரஸ் பொற்கோயில் கருவறைக்குள் புகுந்து இடையூறு விளைவித்ததாகக் கூறி 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கோயில் வளாகத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமிர்தசரஸ் பொற்கோயில் என்று அழைக்கப்படும் ஹர்மந்திர் சாஹிப் சீக்கிய மக்களின் புனிதத் தலங்களில் ஒன்று. இது சீக்கியர்களின் மிகப் பழமையான குருத்வாராக கருதப்படுகிறது.
சீக்கியர்களின் நான்காம் குருவான குரு ராம் தாஸ் என்பவரால் 1604ஆம் ஆண்டு இந்த கோயில் இந்தியாவின் அம்ரித்சர் நகரில் அமைக்கப்பட்டது.

அடித்துக் கொலை
சீக்கியர்களின் புனிதத்ளமான இந்தக் கோயிலில் 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் கோயில் வளாகத்திலேயே வைத்து அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவத்தை உறுதி செய்துள்ள டிசிபி ராம்பால் சிங், இது தொடர்பாக அடுத்தகட்ட விசாரணை நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

என்ன நடந்தது
பொற்கோயிலில் தினசரி மாலை வேலையில் பிரார்த்தனைகள் நடக்கும். அப்படி இன்று மாலை நடைபெற்ற பிரார்த்தனையின் போது, கோயில் கருவறையாகக் கருதப்படும் இடத்தில் புகுந்து சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப் முன் வைக்கப்பட்டிருந்த வாளை அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத்தக்க நபர் தொட முயன்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஆத்திரமடைந்த சீக்கியர்கள், அந்த நபரைப் பிடித்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் அந்த நபர் உயிரிழந்துள்ளார்.

சிசிடிவி காட்சிகள்
இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமிர்தசரஸ் துணை போலீஸ் கமிஷனர் பர்மிந்தர் சிங் பந்தல் கூறுகையில், "இன்று மாலை பிரார்த்தனையின் போது, அடையாளம் தெரியாத நபர் கருவறையாகக் கருதப்படும் இடத்தில் புகுந்துள்ளார். அந்க நபர் தலையில் மஞ்சள் துண்டு ஒன்றைக் கட்டியிருந்துள்ளார், உள்ளே இருந்தவர்கள் அவரை வெளியே அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்தவர்கள் கொடூரமாகத் தாக்கியதில் அவர் கொல்லப்பட்டார்.

யாருடன் கூட்டாளி
அவருடன் கூட்டாளி யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. இங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளோம். விரைவில் இந்தச் சம்பவம் குறித்து அனைத்து தகவல்களும் தெரிய வரும். உயிரிழந்தவரின் உடல் நாளை பிரேதப் பரிசோதனை செய்யப்படும். அவர் யார். எங்கிருந்து வந்தார், எதற்காக இதுபோன்ற செயலில் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
|
குருத்வாரா
சீக்கிய கோவில்களில் இழிவுபடுத்துவது என்பது சீக்கியர்களிடையேயும் மிகவும் உணர்ச்சிகரமான பிரச்சினையாகும். அதுபோன்ற சம்பவம் ஈடுபடுபவர்களைச் சீக்கியர்கள் தாக்கும் சம்பவங்களும் நடக்கிறது. சமீப ஆண்டுகளாக அரசியல் குருத்வாராக்களில் குழப்பத்தையும் ஏற்படுத்திய பல நிகழ்வுகள் உள்ளன.












Click it and Unblock the Notifications