சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

1 ரூபாய் தீப்பெட்டியின் விலை உயர போகிறது.. எவ்வளவுன்னு பாருங்க.. திடீர் முடிவுக்கு என்ன காரணம்?

தீப்பெட்டியின் விலை டிசம்பரில் உயர போவதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு 1 ரூபாய் தீப்பெட்டியின் விலை உயர போகிறது.. வரும் டிசம்பர் 1ந்தேதி முதல் தீப்பெட்டி விலை உயர்வினை அதிகரிக்க தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்... இதற்கான காரணத்தையும் தெளிவாக விளக்கி உள்ளனர்.

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் இந்த தீப்பெட்டிகள், நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது..

8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது! 8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது!

குடியாத்தம், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம், கோவில்பட்டி, சங்கரன் கோவில், திருவேங்கடம், விருதுநகர், சிவகாசி, உள்ளிட்ட பகுதிகளில் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்படுகிறது...

 தீப்பெட்டி

தீப்பெட்டி

2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீப்பெட்டி உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த தீப்பெட்டி ஆலைகளில் கிட்டத்தட்ட 6 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர்... இதில் 90 சதவீதம் பேர் பெண்கள்.. பலருக்கு இது குடிசை தொழிலாகவும் உள்ளது.. இந்நிலையில், தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான பாஸ்பரஸ், குளரேட், மெழுகு, அட்டை, பேப்பர் போன்றவற்றின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது.

 பெட்ரோல்

பெட்ரோல்

முக்கியமாக,ஒரு கிலோ பாஸ்பரஸ் 410 ரூபாய்க்கு விற்பனை ஆன நிலையில், தற்போது 850 ரூபாயாக உயர்ந்துவிட்டது.. அதேபோல, மெழுகு ஒரு கிலோ 62-க்கு விற்ற நிலையில், இப்போது 85 ரூபாய் ஆகிவிட்டது.. குளரேட் 82 ரூபாயாக உயர்ந்துவிட்டது.. இப்படி திடுதிப்பென்று விலை உயர்ந்ததற்கு காரணம், பெட்ரோல் டீசல் விலை உயர்வுதான்.. இதன்காரணமாகவே தீப்பெட்டி உற்பத்திக்கான செலவீனம் அதிகரித்துள்ளது என்று கூறுகிறார்கள்..

 விற்பனை

விற்பனை

தற்போது ஒரு தீப்பெட்டி ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.. முன்பெல்லாம் ஒரு தீப்பெட்டியின் விலை 10 காசு, 25 காசு என்றிருந்தநிலையில், 2007-ல் 50 காசுக்கு விற்றார்கள்.. அதன்பிறகு, ஒரு ரூபாய்க்கு வந்து விலை நின்றது.. இப்படியே 14 வருஷங்களாக, 1 ரூபாய் தீப்பெட்டியே விற்பனையில் தொடர்ந்து இருக்கிறது.. எந்த பொருள் விலை ஏறினாலும், தீப்பெட்டி மட்டும் இதே விலைக்குதான் நம் தமிழகத்தில் விற்கப்படும்.. ஆனால், ஒரு ரூபாய்க்கு தீப்பெட்டி விற்பனை செய்தால், நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்...

 2 ரூபாய்

2 ரூபாய்

இப்போது விலையை உயர்த்த போகிறார்களாம்.. அப்படியே டபுள் மடங்காக உயர்கிறது.. ஒரு ரூபாயில் இருந்து 2 ரூபாயாக உயர்த்த தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தீப்பெட்டி சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்... இந்த விலை உயர்வு நடைமுறையானது வருகிற டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை

கோரிக்கை

சிவகாசியில் நடத்தப்பட்ட அனைத்து தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டத்தில் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.. அதேசமயம், தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்கவும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவும், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
1 Rupee matchbox price will be raised from the December in TN due to Petrol Diesel price
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X