சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

40, 60 எல்லாம் இல்லை- 4 கட்சிகளுக்கு 100 தொகுதி கேட்ட பாஜக.. அதிமுகவுக்கு எதிராக செம ஸ்கெட்ச்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக கூட்டணியில் 40 அல்லது 60 தொகுதிகள் பாஜக கேட்டு அடம்பிடிப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் பாமக, தேமுதிக, புதிய தமிழகம் கட்சிகளுக்கும் சேர்த்து மொத்தமாக 100 தொகுதிகளை ஒதுக்கித்தான் ஆக வேண்டும் எனவும் அதிமுகவுக்கு பாஜக நெருக்கடி தருவதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

மகாராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலங்களில் கடந்த காலங்களிலும் சரி அண்மையிலும் சரி சிவசேனா, ஜேடியூ கட்சிகளிடம் சமமான தொகுதிகளைப் பெறுவதை பாஜக வாடிக்கையாக வைத்திருக்கிறது. அப்படி சமமான தொகுதிகளைப் பெற்றுக் கொண்டு கூட்டணி கட்சி வெல்லக் கூடிய இடங்களில் குழி பறித்து அதைவிட கூடுதல் இடங்களில் வெல்வதுதான் பாஜகவின் பார்முலா.

எகிறும் டென்ஷன்.. என்னதான் நடக்கும்.. அதிமுக அணியிலேயே நீடிக்குமா இல்லை.. ஜகா வாங்குமா பாமக?எகிறும் டென்ஷன்.. என்னதான் நடக்கும்.. அதிமுக அணியிலேயே நீடிக்குமா இல்லை.. ஜகா வாங்குமா பாமக?

பீகார் பார்முலா

பீகார் பார்முலா

உதாரணமாக 243 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட பீகாரில் ஜேடியூ 122; பாஜக 121 இடங்களில் போட்டியிட்டன. ஜேடியூவும் பாஜகவும் தங்களுக்கான பங்கீட்டில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கின. ஆனால் ஜேடியூ வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக சிராக் பாஸ்வானின் லோக்ஜனசக்தியை களமிறக்கி ஜேடியூவுக்கு எதிராக மட்டும் போட்டியிட வைத்தது. பீகாரில் பாஜகவின் இந்த பார்முலா ஒர்க் அவுட் ஆனது. பாஜக நினைத்தது போல ஜேடியூவால் 43 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. பாஜகவோ 74 இடங்களில் வென்று 2-வது இடத்துக்கு வந்தது.

அதிமுகவுக்கு நெருக்கடி

அதிமுகவுக்கு நெருக்கடி

இதே பார்முலாவைத்தான் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் செயல்படுத்த விரும்புகிறதாம் பாஜக. அதாவது அதிமுகவுக்கு 134; பாஜகவுக்கு 100 தொகுதிகள். பாஜக தமக்கான 100 தொகுதிகளை பாமக, தேமுதிக, புதிய தமிழகத்துடன் பகிர்ந்து கொள்ளுமாம். பாஜக, பாமக, தேமுதிக தலா 30 இடங்களிலும் புதிய தமிழகத்துக்கு 10 தொகுதிகளும் என ஒதுக்கப்படுமாம். இதை தாண்டிய கூட்டணி கட்சிகளுக்கு அதிமுகவின் 134 தொகுதிகளுக்கு அந்த கட்சி ஒதுக்கீடு செய்ய வேண்டுமாம். இதுதான் பாஜக முன்வைத்த பார்முலா. ஆனால் அதிமுக இதை அதிர்ச்சியுடன் நிராகரித்துவிட்டதாம்.

பாஜகவின் திட்டம்

பாஜகவின் திட்டம்

பாஜகவின் இந்த திட்டப்படி அதிமுக 134 அல்லது அதற்கு குறைவான தொகுதிகளில் போட்டியிடும் போது இயல்பாக ஆளும் அரசுக்கு எதிரான மனநிலை, டிடிவி தினகரனின் அமமுக, சிறு கட்சிகளின் பிரசாரம் போன்றவற்றால் அதிமுக கணிசமான தொகுதிகளை இழக்க நேரிடும். அதிமுக அப்படி தோற்றாலும் தங்களுக்கு அதாவது 100 தொகுதிகளைப் பெறும் தங்களுக்கு அதிமுகவை ஒரு சில இடங்கள் கூடுதலாக கிடைத்தாலே போதும். தமிழகத்தில் எதிர்க்கட்சி வரிசைக்கு போய்விடலாம் என்பதுதான் பாஜகவின் திட்டமாம். அதேபோல் ஒருவேளை அதிமுகவுக்கு சாதகமான சூழ்நிலை வந்தாலும் கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றுவிடலாம் என்பது இன்னொரு ப்ளான்.

அதிமுக பாய்ச்சல்

அதிமுக பாய்ச்சல்

அதிமுகவை உறவாடியே அழித்துவிட்டு அந்த இடத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் முனைப்புடனேயே தொகுதி பங்கீடு, முதல்வர் வேட்பாளர் விவகாரம் ஆகியவற்றில் கடுமையான நெருக்கடியை தருகிறது பாஜக. இதனால்தான் சென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரசார கூட்டத்தில் கேபி முனுசாமி, பட்டவர்த்தனமான பாஜகவின் கூட்டணி ஆட்சி கனவை விமர்சித்து பேசினார் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.

English summary
BJP pressure to AIADMK for 100 seats for the Tamilnadu Assembly Elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X