Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

11 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்! அருண் சார்ஜ் எடுத்த 14 நாட்களிலேயே நடுங்கும் சென்னை ரவுடிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற பிறகு கடந்த 14 நாட்களில் 11 பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக புதிதாகப் பொறுப்பேற்ற அருண், சென்னையில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து பிரபல ரவுடிகள் சிக்கி வருகின்றனர்.

Chennai Police Arun IPS

சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அருண், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது, குற்றங்களை தடுப்பது, நடந்த குற்றங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்வது ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கூறி இருந்தார். மேலும், ரவுடிகளுக்கு அவர்களின் மொழியில் பதில் அளிக்கப்படும் என்றும் அதிரடியாக கூறி இருந்தார்.

காவல் ஆணையர் அருண் அதிரடி ஆக்‌ஷன்: தொடர்ந்து சென்னை முழுவதும், குற்றப் பின்னணி கொண்ட 6 ஆயிரம் ரவுடிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று காவல் ஆய்வாளர்களுக்கு அதிரடி உத்தரவும் பிறப்பித்தார் ஆணையர் அருண். அதன்படி, போலீசார் குற்றப் பிண்ணனி உடைய ரவுடிகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற பிறகு சென்னை மாநகரில் கடந்த 14 நாட்களில் 11 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

11 பேர் மீது குண்டர் சட்டம்: இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில், நடப்பாண்டில் 01.01.2024 முதல் 21.07.2024 வரை சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சட்டம் ஒழுங்கு குற்றங்களில் ஈடுபட்ட 411 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 130 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 173 குற்றவாளிகள், குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 29 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 5 குற்றவாளிகள், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் 7 குற்றவாளிகள், பாலியல் தொழில் நடத்திய 16 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம்படுத்திய 5 குற்றவாளிகள் மற்றும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் 4 குற்றவாளிகள் என மொத்தம் 780 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

11 குற்றவாளிகள்: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.அருண், உத்தரவின்பேரில் கடந்த 08.07.2024 முதல் 21.07.2024 வரையிலான 14 நாட்களில் 11 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

குற்றவாளிகள் 1.கார்த்திக் கிரண், வ/31, த/பெ.சண்முகராஜ், மாங்காடு, சென்னை என்பவர் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக 14.07.2024 அன்று K-4 அண்ணாநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

2.அசோக்குமார், வ/34, த/பெ.ரவிச்சந்திரன், சாலிகிராமம், சென்னை

3.மகேஷ், வ/44, த/பெ.ஞானமுத்து, மடிப்பாக்கம், சென்னை.

4.மணிகண்டன் (எ) மணி, வ/34, த/பெ.ஏழுமலை, கே.கே.நகர், சென்னை ஆகிய மூவரும் கடந்த 11.06.2024 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக K-8 அரும்பாக்கம் காவல் நிலையத்திலும்

5.அருள், வ/38, த/பெ.இராவணன், கொசப்பேட்டை, சென்னை என்பவர் கடந்த 08.06.2024 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக P-2 ஓட்டேரி காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்து, கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

6.கிஷோர்குமார், வ/25, த/பெ.லஷ்மணன், கொருக்குப்பேட்டை, சென்னை,

7.ஜெகன் (எ) ஜெகன்னாத யாதவ், வ/24, த/பெ.ஜெயராமன், தண்டையார்பேட்டை,

8.தமிழ் (எ) தமிழ்செல்வன், வ/23, த/பெ.முருகவேல், தண்டையார்பேட்டை,

9.பாலாஜி, வ/23, த/பெ.முனியேந்திரன், தண்டையார்பேட்டை ஆகிய நால்வரும் 11.06.2024 அன்று தர்மா என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக H-6 ஆர்.கே.நகர் காவல் நிலையத்திலும்,

10.முருகன், வ/21, த/பெ.தனசேகர், காரம்பாக்கம், போரூர், சென்னை என்பவர் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கொளுத்தி வீசியதற்காக R-9 வளசரவாக்கம் காவல் நிலையத்திலும்,

11.ரமேஷ், வ/32, த/பெ.மகாலிங்கம், கொட்டிவாக்கம், சென்னை என்பவர் வீடு புகுந்து திருடிய குற்றத்திற்காக M-3 புழல் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்து, கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

கடுமையான ஆக்‌ஷன்: மேற்படி குற்றவாளிகளின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.அருண், மேற்படி குற்றவாளி கார்த்திக் கிரணை கடந்த 14.07.2024 அன்றும், அசோக்குமார், மகேஷ், மணிகண்டன் (எ) மணி, அருள் ஆகிய 4 நபர்களை கடந்த 16.07.2024 அன்றும், கிஷோர்குமார், ஜெகன், தமிழ் (எ) தமிழ்செல்வன், பாலாஜி, முருகன், ரமேஷ் ஆகிய 6 குற்றவாளிகளை கடந்த 18.07.2024 அன்றும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், மேற்படி 11 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

எனவே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டுக் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+