விளைநிலம் போய்விடுமோ என அச்சம்.. 117வது நாளாக பரந்தூர் ஏர்போர்டை எதிர்த்து போராட்டம்
சென்னை: பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சுற்றுவட்டார கிராம மக்கள் நடத்தி வரும் போராட்டம் 117 வது நாளை எட்டி இருக்கிறது.
சென்னை மீனம்பாக்கத்தில் இயக்கி வரும் சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு மத்திய விமான போக்குவரத்துத்துறை முயற்சிகள் மேற்கொண்டது.
இந்த நிலையில் விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான இடவசதிகள் இல்லாத காரணத்தால் 2 வதாக புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
சென்னை மீனம்பாக்கத்தில் இயக்கி வரும் சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு மத்திய விமான போக்குவரத்துத்துறை முயற்சிகள் மேற்கொண்டது.

2 வது விமான நிலையம்
புதிய விமான நிலையத்துக்காக தமிழ்நாடு அரசிடம் விமான போக்குவரத்துத் துறை இடங்களை பரிந்துரை செய்ய கோரியது. அதன் அடிப்படையில், சென்னையில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் தொடங்க செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நான்கு இடங்களை பரிந்துரை செய்தது தமிழ்நாடு அரசு.

4,500 ஏக்கர்
இதில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க இறுதி முடிவு செய்யப்பட்டது. 4500 ஏக்கர் பரப்பளவில் அமைய இருக்கும் இந்த விமான நிலையத்துக்காக பரந்தூர். ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 12 கிராமங்களில் விவசாய நிலங்கள், நீர் நிலைகள், வீடுகள் கையகப்படுத்தப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

கடும் எதிர்ப்பு
இந்த நிலையில் வீடுகள், விளை நிலங்களை கையகப்படுத்த அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விமான நிலையம் அமைக்க தங்கள் பகுதியை விட்டுவிட்டு வேறு பகுதிகளை அரசு தேர்ந்தெடுத்துக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
புதிய விமான நிலையத்துக்காக நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்வாய், ஏகனாபுரம் கிராமங்களை சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் தமிழ்நாடு அரசு பரந்தூர் விமான நிலைய பணிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.

117 வது நாள்
கடந்த ஆகஸ்டு மாதம் ஏகனாபுரம் கிராம மக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டியும், கருப்பு கொடியை ஏந்தியும் கிராமத்திலிருந்து ஊர்வலமாக நடந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படி பல வகைகளில் நிலம் கையகப்படுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் இவர்களின் 117 வது நாளை எட்டி உள்ளது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications