"தவெகவின் 436 வாக்குறுதியில் 125 அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டிலேயே வந்துவிட்டன”- அமைச்சர் மரிய வில்சன்
சென்னை: தவெக அளித்த 436 தேர்தல் வாக்குறுதியில் 125 வாக்குறுதிகளை இந்த பட்ஜெட்டிலேயே அறிவித்துள்ளோம் என தமிழக சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 5ஆம் தேதி தொடங்கிய நிலையில், அன்றைய தினம் நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதனைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 6 ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.

அதைத்தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. இன்று சட்டசபையில் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அந்தவகையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று சட்டசபையில் பேசுகையில், "தவெகவின் 436 தேர்தல் அறிக்கையில் கூறிய 436 வாக்குறுதிகளில் 125 அறிவிப்புகள் தவெக அரசின் முதல் பட்ஜெட்டிலேயே அறிவித்துள்ளோம்.
துறை ரீதியான மாற்றங்களை முதலமைச்சர் விஜய் கொண்டுவந்துள்ளார். முதல் காலாண்டில் கடன் வாங்கும் தொகையை தவெக அரசு சற்று குறைத்துள்ளது. நாங்கள் கடனை குறைத்துக்கொண்டே தான் வருகிறோமே தவிர அதிகரிக்கவில்லை.
2025-2026 முதல் காலாண்டில் திமுக அரசு 19,337 கோடி கடன் வாங்கியுள்ளனர். தற்போது 2026-2027 முதல் காலாண்டில் 20,881 கோடி சொல்லி இருக்கிறோம். தற்போது அதிகரித்துள்ளதாக சொல்கிறார்கள். ஆனால், ஜிஎஸ்டிக்குள் கணக்கிட்டு பார்த்தால், 0.54 வரும்.
அதே தற்போது தவெக அரசில், ஜிஎஸ்டிக்குள் கணக்கீடு செய்து பார்த்தால் 0.51 தான் வரும். முதல் காலாண்டில் கடனை குறைத்துக் கொண்டுதான் வருகிறோமே தவிர அதிகரிக்கவில்லை" எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
