சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

12500 கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகள்...5 ஊர்களில் ரெம்டெசிவர் விற்பனை - மா.சுப்ரமணியன் அதிரடி

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பதவியேற்ற நாள் முதலே முதல்வரும், அமைச்சரும் அதிரடி காட்டி வருகின்றனர். மாநிலம் முழுவதும் கூடுதலாக 12500 ஆக்சிஜன் படுக்கை வசதி வரும் 15ம் தேதிக்குள் ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் வருகிற 15ஆம் தேதிக்குள் 12,500 ஆக்சிஜன் படுக்கை வசதி அமைக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரை, கோவை, சேலம், நெல்லை, திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் விற்பனை செய்யப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. 26 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். ஒன்றரை லட்சம் பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. சென்னையில் நோயாளிகள் படுக்கை வசதிக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதிய அரசு பதவியேற்ற நாள் முதலே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் 2 வாரங்களுக்கு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

'அமைச்சராகவே இருந்தாலும், ஆக்சிஜனை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'.. டெல்லி அரசு உறுதி'அமைச்சராகவே இருந்தாலும், ஆக்சிஜனை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'.. டெல்லி அரசு உறுதி

ரெம்டெசிவர் தட்டுப்பாடு இல்லை

ரெம்டெசிவர் தட்டுப்பாடு இல்லை

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மேற்கொண்ட ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மா.சுப்ரமணியம், சிகிச்சை முறைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தேன்.கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ளோம்.ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கூடுதல் படுக்கை வசதி

கூடுதல் படுக்கை வசதி

ஸ்டான்லி மருத்துவமனையின் சூப்பர் ஷ்பெசாலிட்டி கட்டிடம், கொரோனா சிகிச்சை பிரிவாக மாற்றம் செய்யப்படும். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

மாநிலம் முழுவதும் 12,500 ஆக்சிஜன் படுக்கைகள்

மாநிலம் முழுவதும் 12,500 ஆக்சிஜன் படுக்கைகள்

தமிழகத்தில் வருகிற 15ம் தேதிக்குள் 12,500 ஆக்சிஜன் படுக்கை வசதி அமைக்கப்படும். மதுரை, கோவை , சேலம் , நெல்லை, திருச்சி, ஆகிய 5 மாவட்டங்களில் ரெம்டெசிவர் விற்பனை செய்யப்படுகிறது என கூறினார்.

விற்பனை தொடங்கியது

விற்பனை தொடங்கியது

அமைச்சர் அறிவித்த சில மணிநேரங்களில் மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை மையம் செயல்படத் தொடங்கியுள்ளது. ஒரு பாட்டில் 1568 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரெம்டெசிவர் மருந்து வாங்க வருபவர்களுக்கு மருத்துவர் பரிந்துரை கடிதம், மருந்து வாங்க வருபவரின் ஆதார் நகல் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Minister of Medical and Public Welfare M. Subramanian has said that 12,500 oxygen beds will be set up in Tamil Nadu by the 15th. Remdecivir is being sold in 5 districts namely Madurai, Coimbatore, Salem, Nellai and Trichy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X