சென்னைவாசிகள் கவனத்துக்கு.. பொங்கலுக்கு நாளை முதல் ஊர் செல்வது எப்படி? சிறப்பு பஸ்களின் முழுவிபரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாளை முதல் 16,932 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் சென்னையில் 5 பஸ் நிலையங்களை இணைக்கும் வகையில் பயணிகள் வசதிக்காக 340 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதுபற்றிய முழுவிபரம் வருமாறு:

பொங்கல் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தான் சென்னையில் தங்கி பணியாற்றி வரும் மக்கள் சொந்த ஊர் திரும்ப தயாராகி வருகின்றன.

பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

6 இடங்களில் 16,932 சிறப்பு பஸ்கள்

6 இடங்களில் 16,932 சிறப்பு பஸ்கள்

இந்நிலையில் தான் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாளை முதல் 14ம் தேதி வரை 3 நாட்களுக்கு 16,932 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் நாளை முதல் 6 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி சென்னை கோயம்பேடு, கேகேநகர், மாதவரம், தாம்பரம் மெப்ஸ், ரயில் நிலையம் மற்றும் பூந்தமல்லி ஆகிய 6 இடங்களில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

முன்பதிவு விறுவிறுப்பு

முன்பதிவு விறுவிறுப்பு

மேலும் சிறப்பு பேருந்துகளில் பயணிக்க 12 முன்பதிவு மையங்களிலும், tnstc செயலி மற்றும் www.tnstc.in என்ற இணையதளம் ஆகியவற்றின் மூலம் பயணிகள் முன்பதிவு செய்து வருகின்றனர். பயணிகளுக்கு உதவ 20 இடங்களில் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது வரை 1.50 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

340 இணைப்பு பஸ்கள்

340 இணைப்பு பஸ்கள்

இந்நிலையில் தான் சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களுக்கான சிறப்பு பஸ்சில் பயணிக்கும் வகையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. சென்னையில் வழக்கமாக 2,100 பஸ்கள் இயக்கப்படும் நிலையில் நாளை முதல் 3 நாட்கள் சென்னையில் 340 கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

5 பஸ் நிலையங்களை இணைக்க..

5 பஸ் நிலையங்களை இணைக்க..

இந்த நடவடிக்கை நிச்சயம் சென்னையில் இருந்து சிறப்பு பஸ்களில் வெளியூர் பயணிக்க விரும்புவோருக்கு உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோயம்பேடு பஸ் நிலையம், மாதவரம் புறநகர் பஸ் நிலையம், பூந்தமல்லி பஸ் நிலையம், தாம்பரம் புதிய பேருந்து நிலையம் மற்றும் கேகேநகர் பஸ் நிலையம் ஆகிய 5 பஸ் நிலையங்களில் இருந்து நாளை முதல் 14ம் தேதி வரை கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+