கவரைப்பேட்டை ரயில் விபத்து! நாசருக்கு போனை போட்ட முதல்வர் ஸ்டாலின்! நாள்ளிரவில் ஸ்பாட்டில் அமைச்சர்!
சென்னை: கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்கா நோக்கி சென்ற பாகுமதி பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூர் அருகே விபத்துக்குள்ளான நிலையில், 19 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்ததாகவும், அமைச்சர் நாசர் மற்றும் அதிகாரிகளை விபத்து நடந்த இடத்திற்குச் செல்ல உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்திலிருந்து ஆந்திர மாநிலம் மைசூர் நோக்கி மைசூர் தர்பங்கா ரயில் சென்று கொண்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதாக கூறப்படுகிறது.

சரக்கு ரயில் மீது மோதிய வேகத்தில் இரண்டு ரயில் பெட்டிகள் தரம் புரண்டதாக கூறப்படுகிறது. மேலும் ரயிலில் திடீரென தீப்பற்றி நிலையில் பயணிகள் ரயிலில் இருந்து அலறி அடித்தபடி வெளியேறினர்.
இந்த நிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்ப பணிகளில் ஈடுபட்டனர். மேலும் தகவல் மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகளும் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் சிக்னல் கோளாறு காரணமாக இரயில் விபத்து நேரிட்டதாகக் கூறப்படும் நிலையில், அங்கு மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. விபத்து நேரிட்ட ரயிலில் பயணம் செய்த பயணிகளில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்ற நிம்மதி அளிக்கும் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் காயம் அடைந்தவர்களுக்கு மட்டும் தற்போது சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
மேலும் ஆந்திர மாநிலத்தை ஒட்டி உள்ள பகுதி என்பதால் அங்கிருந்து காவல்துறையினர் தீயணைப்புத் துறையினர் பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விபத்து குறித்து தகவல் அறிந்து ரயில்வே துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்நிலையில் ரயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்ததாகவும், அமைச்சர் நாசர் மற்றும் அதிகாரிகளை விபத்து நடந்த இடத்திற்குச் செல்ல உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் இரயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
தகவல் கிடைக்கப்பெற்றவுடன், அமைச்சர் ஆவடி நாசர் அவர்களையும் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளையும் விபத்து நடந்த இடத்திற்குச் செல்ல உத்தரவிட்டேன். மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் அரசு துரிதமாகச் செயல்பட்டு வருகிறது. இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
மற்ற பயணிகளுக்குத் தேவையான உணவு, அவர்கள் ஊர் திரும்புவதற்கான பயண வசதிகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதற்கெனத் தனியே ஒரு குழு இயங்கிக் கொண்டிருக்கிறது. விபத்துக்குள்ளான இரயில் பெட்டிகளை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன்." என கூறியுள்ளார்.

இதற்கிடையே விபத்து நடந்த இடத்திற்கு அமைச்சர் நாசர் விரைந்தார். தொடர்ந்து விபத்து நடைபெற்ற பகுதியை பார்வையிட்ட அவர் மீட்பு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் .தொடர்ந்து காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, நிலையில் மற்ற பயணிகளை அழைத்துச் செல்ல சிறப்பு ரயிலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாசர்,"ரயில் விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. 19 பேருக்கு மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளது. மூன்று பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கும் நிலையில், 16 பேருக்கு சாதாரண காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் தமிழக அரசின் சார்பில் செய்ய வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் தற்போது விபத்து காரணமாக மீட்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு குடிநீர் உள்ளிட்டவை அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மாற்று ஏற்பாடு மூலம் பயணத்தை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது" என்றார்.
-
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கை: சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் தலைமை - பின்னணி என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications