"விடமாட்டேன்".. சொல்லவும் மாட்டேன்... பழனிசாமி வீட்டில் அடித்து சொன்ன ஸ்டாலின்.. எடப்பாடிக்கு தலைவலி
எடப்பாடி பழனிசாமிக்கு 2 விதமான நெருக்கடிகள் விரைவில் ஏற்படலாம் என்கிறார்கள்
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நடவடிக்கைகளை திமுக தரப்பும் விரைவில் கையில் எடுக்கும் என்று தெரிகிறது.. இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் பேசிய பேச்சு, அரசியல் கட்சிகளின் கவனத்தையும் பெற்றுவருகிறது.
டெல்லி மேலிடத்தை பொறுத்தவரை, அதிமுக விவகாரத்தில் இதுவரை தலையிடவில்லை.. நீதிமன்றத்துக்கு செல்லும் முன்பேயே, இவர்களின் பஞ்சாயத்தையும் காது கொடுத்து கேட்கவில்லை..
இருவரையும் அழைத்து பேசவில்லை.. சமாதானமும் செய்யவில்லை.. இரு தரப்புமே தங்களுக்கு வேண்டும் என்று சொல்லி வருகிறதே தவிர, யாருக்கும் வெளிப்படையாக ஆதரவும் தரவில்லை.. எதிர்ப்பும் காட்டவில்லை.. அமைதியாக நின்று ஒதுங்கி வேடிக்கை பார்த்து வருகிறது..

ஃபைலில் என்ன
ஆனால், திமுகவை பொறுத்தவரை, ஒன்றுபட்ட அதிமுகவை விரும்பவில்லை.. இவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்தால், அதன்மூலம் வாக்குகள் பிரியும் என்று கலக்கம் அதிகமாகவே இருக்கிறது.. குறிப்பாக, சசிகலா + ஓபிஎஸ் + டிடிவி தினகரன் எல்லாரும் ஒன்று சேர்ந்துவிட்டால், திமுகவில் இருக்கும் முக்குலத்தோர் வாக்கு வங்கி அங்கு செல்ல நிறைய வாய்ப்புள்ளது.. எனவே, இந்த முறை 50 சதவீத வாக்குவங்கியை பெற்றுவிடும் முயற்சியில் திமுக இறங்கியிருப்பதாக தெரிகிறது.. இதற்காக ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை அறிக்கையை, கையில் எடுக்கவும் திமுக முயலலாம் என்று என்கிறார்கள்.

டபுள் கணக்கு
இந்த அறிக்கையை, அரசியல் பிரச்சனையாக எழுப்பி, அதிமுகவுக்குள் கலகம் ஏற்படுத்தி, அதன்மூலம் ஆட்டம் காண வைக்கக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கணித்து சொல்கிறார்கள். இப்போதுதான் கொங்கு மண்டல செல்வாக்கையே திமுக ஓரளவு எட்டிவரும் நிலையில், கொங்குவையும் எடப்பாடியிடம் விட்டுவிடக்கூடாது, அதேபோல தென்மண்டலங்களையும் எடப்பாடியிடம் விட்டுவிடக்கூடாது என்று இரு கணக்குகளை போட்டு வருகிறதாம்.. இதற்காக எடப்பாடிக்கு பல வழிகளில் நெருக்கடிகளையும் மாநில அரசு ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளதாம்.

கறை + கலகம்
ஏற்கனவே, கொடநாடு விவகாரம் உள்ளது.. அடுத்து நெடுஞ்சாலை ஊழல் வழக்கு, ஸ்டாலினின் கையில் தான் உள்ளது.. அடுத்து, தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை அறிக்கை என பல பிரச்சனைகள் எடப்பாடியை சூழ்ந்துள்ளன.. இவைகளில் கேஸ், விசாரணை, ஊழல் புகார்கள் போன்றவற்றை சட்டரீதியாகவே அணுக வேண்டும் என்பதில் உறுதியாக முதல்வர் தரப்பு உள்ளதால், அவை முறைப்படி சென்று கொண்டிருப்பதாக தெரிகிறது.. கொடநாடு + தூத்துக்குடி விவகாரங்களை மட்டுமே ஸ்டாலின் முன்னிலைப்படுத்தக்கூடும் என்கிறார்கள்.. சமீபகாலமாக அவரது பேச்சும், அதை மையப்படுத்தியே வருவதாக கூறப்படுகிறது.. இன்றும்கூட, அதை தான் பேசியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..

சொல்ல மாட்டேன்
கோவையில் பொங்கலூர் பழனிச்சாமியின் இல்லத் திருமண விழாவில் பேசிய ஸ்டாலின், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் மிகவும் சஸ்பென்ஸ் ஆகவே இருப்பதாக நாம் சொல்லவில்லை, அவரது கட்சியினரே சொல்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு, அந்த அறிக்கையை என்னிடத்தில் ஆறுமுகசாமி கொடுத்தார்... அந்த அறிக்கையில் பல பிரச்சினைகள் இருக்கிறது. அதை நான் இப்போது சொல்ல மாட்டேன்... சட்டமன்றத்தில் நாங்கள் வெளிப்படையாக வைக்கிறோம்.. எங்களுக்குள் வைத்து நாங்கள் முடிவு எடுக்கப் போவதில்லை. சட்டமன்றத்தில் அறிவித்து வெளிப்படையாக வைத்து அதற்கு உரிய நடவடிக்கையை சட்டமன்றத்தின் மூலமாகவே நிறைவேற்றி காட்டுவோம்.

சஸ்பென்ஸ்
அடுத்து தூத்துக்குடி சம்பவம்... இந்த சம்பவம் குறித்து கேட்டபோது அப்படியா என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி. அதன் பிறகு டிவி பார்த்து தெரிந்துகொண்டேன் என்று கூறியவர். அந்த அறிக்கையும் தற்போது என்னிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சட்டமன்றத்தில் வைக்கப்படும்" என்று கூறியுள்ளார் ஸ்டாலின்..! இன்று முதல்வர் பேசிய பேச்சுக்கள் முழுக்க முழுக்க எடப்பாடியை மையமாக வைத்தே பேசப்பட்டுள்ளதால், இந்த நெருக்கடிகளை எடப்பாடி எப்படி எதிர்கொள்ள போகிறார் என்பத மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.. பார்ப்போம்..!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications