Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

+2 பொதுத்தேர்வு..கை கால்களில் கட்டுப்போட்ட நிலையிலும் தேர்வு எழுதிய மாணவி..வேப்பிலையோடு வந்த மாணவர்

பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கிய நிலையில் மொழிப்பாடத்தாள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. தமிழ் உள்ளிட்ட மொழித்தேர்வில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கை கால்கள் முறிந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், அம்மை பாதிக்கப்பட்ட நிலையிலும் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வந்தனர்.

நேற்று தொடங்கிய 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் 3ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதுவதால் 3225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் நாளான இன்று மொழி பாடங்களுக்கான தேர்வு நடந்தது.

+2 Public Examination: The student wrote the exam even with her hands and feet tied near Madurai

மொழி தேர்வு மிக எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். ஒரு மார்க் கேள்விகள் மட்டும் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் கூறினர். இதனிடையே இன்று நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் உள்ளிட்ட மொழித்தேர்வில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 8 லட்சத்து 51 ஆயிரம் பேரில் முதல் நாளில் 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலருக்கு காய்ச்சல், அம்மை போன்ற நோய்களும் தாக்கியுள்ளதால் தேர்வு எழுத மாணவர்கள் வரவில்லை என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே கை கால்கள் முறிந்த நிலையிலும் மாணவி ஒருவர் பிளஸ் 2 தேர்வு எழுத வந்திருந்தார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஓ.ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், தொழிலாளி. இவரது மனைவி தேவி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் உமாமகேஸ்வரி,17. திருமங்கலம் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாடியில் காய போட்டிருந்த துணியை எடுக்க உமாமகேஸ்வரி சென்றபோது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவரது 2 கால்கள், இடது கை, குறுக்கெலும்பு உடைந்தது. இதையடுத்து உமாமகேஸ்வரி கடந்த 2 மாதங்களாக கை, கால்களில் கட்டுபோடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வை முன்னிட்டு சிகிச்சையில் இருக்கும்போதே தேர்வுக்கு தயாரானார். ஆசிரியைகள் மற்றும் தோழிகளிடம் பாடத்தில் உள்ள சந்தேகங்களை கேட்டு படித்து வந்தார். அரசு பொது தேர்வை எழுதும் ஆர்வத்தில் இருந்த உமா மகேஸ்வரிக்கு பள்ளி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்க முன்வந்தது. அதன்படி இன்று தேர்வு தொடங்கிய நிலையில் உமாமகேஸ்வரி வீட்டில் இருந்து வேனில் தேர்வு மையத்திற்கு அழைத்து வரப்பட்டார். உதவியாளர்கள் அவரை தேர்வு அறைக்கு தூக்கிக் கொண்டு சென்றனர்.

அங்கு உமாமகேஸ்வரி தேர்வு எழுதுவதற்காக பிரத்யேக இடவசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது. தமிழ் மொழிப்பாட தேர்வை அவர் ஆர்வமுடன் எழுதினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் கர்ணன், சமூக ஆர்வலர்கள் காளீஸ்வரன், இளங்கோ ஆகியோர் செய்திருந்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய மாணவி உமாமகேஸ்வரி, கீழே விழுந்ததில் கை, கால்களில் முறிவு ஏற்பட்ட நிலையிலும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு எழுத கடந்த சில வாரங்களாக தயாராகினேன். தேர்வு எழுத எனது பெற்றோரும், பள்ளி நிர்வாகமும் முழு ஒத்துழைப்பு வழங்கியது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவம் படிப்பேன் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

அதே போல ராமநாதபுரத்தில் அம்மை நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர், உடலையும் முகத்தையும் போர்வையால் மூடியபடி கையில் வேப்பிலையுடன் வந்து தேர்வு எழுத வந்தார். தனியார் பள்ளியில் படிக்கும் மாணவருக்கு கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக அம்மை தொற்று ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், அந்த மாணவர் தனது தாயுடன் பள்ளிக்கு நேற்றைய தினம் தேர்வு எழுத வந்தார். அம்மை தொற்றையும் பொருட்படுத்தாமல் கையில் வேப்பிலையுடன் அந்த மாணவர் தேர்வு மையத்திற்கு வந்து தேர்வு எழுதினார்.

இந்த நிலையில் இன்றைய தினம் பிளஸ் 1 பொதுத்தேர்வு செவ்வாய்கிழமை தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ் தமிழகம், புதுச்சேரியில் 3,224 மையங்களில் 7.93 லட்சம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதுகின்றனர். நாடு முழுவதும் எச்3என்2 வைரஸ், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால், மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் மாணவர்கள் எளிதில் சோர்வடையக்கூடும். எனவே, காலை உணவை தவிர்க்காமல், எளிய வகை உணவை சாப்பிட்டு தேர்வுக்கு செல்வதை பெற்றோர் உறுதிசெய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+