சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இருக்குற தலைவலி போதாதுன்னு.. எடப்பாடிக்கு "குடைச்சல்" தரும் 2 தலைகள்.. யாரா இருக்கும்.. ஒரே குழப்பம்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் இருக்கும் இரண்டு முக்கியமான அரசியல் தலைகள் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவிக்கின்றனர். எடப்பாடிக்கு இந்த மோதல் புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக உள்ளேயும், வெளியேயும் ஏகப்பட்ட மோதல்கள், வழக்குகள் நடந்து கொண்டு இருக்கின்றன. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவிற்கு எதிராக ஒரு பக்கம் ஓபிஎஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.

இன்னொரு பக்கம் தேர்தல் ஆணையத்தில் பொதுக்குழுவிற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் அதிமுகவில் இனி மாற்றங்களை செய்ய கூடாது என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

அதிமுக அலுவலக சாவியை எடப்பாடிக்கு கொடுத்தது தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

மதுரையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்! எடப்பாடி பழனிசாமியை அழைத்து வர ஆர்.பி.உதயகுமார் ஆர்வம்! மதுரையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்! எடப்பாடி பழனிசாமியை அழைத்து வர ஆர்.பி.உதயகுமார் ஆர்வம்!

அதிமுக

அதிமுக

அதேபோல் எடப்பாடி பொதுச்செயலாளர் கிடையாது. தான்தான் பொதுச்செயலாளர் என்று சசிகலா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டெண்டர் வழக்கில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உள்ளது. அவருக்கு எதிராக இன்னொரு டெண்டர் முறைகேட்டு புகாரை அறப்போர் இயக்கம் கொடுத்துள்ளது. இது போக எஸ் பி வேலுமணி நண்பர் சந்திரசேகர், எடப்பாடிக்கு நெருக்கமான செய்யாதுரை, மாஜி விஜயபாஸ்கர், காமராஜ் என்று பல ரெய்டுகளிலும் சிக்கி உள்ளனர்.

 ரெய்டு

ரெய்டு

அதிமுக உள்ளே, வெளியே இவ்வளவு பிரச்சனைகள் நிலவும் நிலையில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக உள்ளே வேறு ஒரு பிரச்சனை உருவாகி உள்ளது. அதன்படி அதிமுகவின் இரண்டு மூத்த தலைவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரண்டு பேருமே மாஜி அமைச்சர்கள். இரண்டு பேருமே தென்னக அமைச்சர்கள். ஒரே ஜாதி குழுவை சேர்ந்தவர்கள்தான். ஒருவர் மட்டுமே இப்போது கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். இரண்டு பேருமே எடப்பாடி டீம்தான்.

என்ன மோதல்

என்ன மோதல்

ஆனால் அதில் ஒருவர் மட்டும் சாதி பாசம் காரணமாக ஓபிஎஸ் -சசிகலா ஆகியோருக்கு சாதகமாக அவ்வப்போது பேசுவார். இந்த நிலையில்தான் சமீபத்தில் எடப்பாடியை சந்தித்த அவர்.. ஓபிஎஸ்ஸை முற்றாக ஒதுக்குவது சரியில்லை. அவர் வந்தால் நமக்குத்தான் பலம். அவரை ஒதுக்கிவிட்டால் தென் தமிழ்நாட்டில் அதிமுக படுத்திவிடும். அவரை சமாதானம் செய்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசி இருக்கிறாராம். இவர் சமீபத்தில் மீடியா முன்பு இதை பற்றி பேசியதும் குறிப்பிடத்தக்கது.

மாஜி கோபம்

மாஜி கோபம்

இதை கேட்ட அந்த இன்னொரு தென்னக நிர்வாகி.. ஓபிஎஸ் தேவை இல்லை. அவர் சமாதானம் செய்தும் ஏற்றுக்கொள்ளவில்லை. தென் தமிழ்நாட்டில் அதிமுகவை வளர்க்க எனக்கு தெரியும். எனக்கும் ஜாதி பின்புலம் இருக்கிறது என்று எடப்பாடியிடம் சொன்னதாக தெரிகிறது. அதாவது அதிமுகவில் தென் தமிழ்நாட்டில் பெரிய தலைகளாக இருக்கும் இரண்டு மாஜிக்களும் ஓபிஎஸ் விவகாரத்தில் வேறு வேறு நிலைப்பாடுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக பேசிய மாஜியை எடப்பாடி கண்டுகொள்ளவே இல்லை என்றும் தெரிகிறது.

Recommended Video

    ADMK R.B.Udhayakumar | கொட்டும் மழையில் பேசிய ஆர்.பி.உதயகுமார்
     மோதல்

    மோதல்

    ஒருவர் ஓபிஎஸ்ஸை மன்னித்து கட்சியில் சேர்க்க வேண்டும் என்று சொல்வதும்.. இன்னொருவர் சேர்க்க கூடாது என்று சொல்வதும் என்று மாறி மாறி இரண்டு தலைகளும் எடப்பாடியிடம் பேசி இருக்கிறார்களாம் . அதோடு கடந்த சில நாட்களாக இந்த பேச்சுக்கள் அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இரண்டு பேரிடமும் ஓபிஎஸ் விவகாரம் பற்றி பேச என்னிடம் வர வேண்டாம் என்று நாசுக்காக எடப்பாடி நோ சொல்லி இருக்கிறார் என்கிறார்கள். தென்னக மாஜிக்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் இந்த மோதல் வரும் நாட்களில் பெரிதாகலாம் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

    English summary
    2 Southern AIADMK leader fight over O Panneerselvam exclusion with Edappadi Palanisamy. அதிமுகவில் இருக்கும் இரண்டு முக்கியமான அரசியல் தலைகள் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவிக்கின்றனர்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X