அக்டோபர் மாதம் இயல்பை விட 29% அதிக மழை... கோவையில் 113% அதிகமாக கொட்டித்தீர்த்தது
அக்டோபர் மாதத்தில் இயல்பை விட 29 சதவிகிதம் அதிக மழை பெய்துள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகம் புதுச்சேரியில் அக்டோபர் மாதத்தில் 23 செமீ அளவிற்கு மழை பெய்துள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இது இயல்பை விட 29 சதவிகிதம் அதிகம் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத்துக்கான இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். கடந்த 20 ஆண்டுகளை பொறுத்தவரையில் அக்டோபர் மாதம் பெய்த மழையின் அளவை பொறுத்தவரையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த மழை 6வது இடத்தில் உள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் வரை நீடித்தது. வடகிழக்குப் பருவமழை அக்டோபர் இறுதியில் தொடங்கியது. பெரும்பாலும் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை நீடிக்கும். இந்த ஆண்டு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் மாதத்தில் 23 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 29 சதவீதம் அதிகம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளை பொறுத்தவரையில், 6வது முறையாக அக்டோபர் மாதத்தில் அதிக மழை பெய்திருக்கிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதத்தில் 18 மாவட்டங்களில் இயல்பைவிட சற்று அதிகமாகவும், 7 மாவட்டங்களில் மிக அதிக மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் இயல்பைவிட 113 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன், குமரிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. நான்கு இடங்களில் மிக கனமழையும், 10 இடங்களில் கனமழையும், பெய்துள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 20 செமீ மழை பெய்துள்ளது.
அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுவையில், பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் கனமழை பெய்யும்.
குமரிக்கடல் பகுதியில் இன்றும், 3, 4 தேதிகளில் தென் கிழக்கு அரபிக் கடல் கேரள கடற்கரை பகுதி, லட்சத் தீவு பகுதிகளில் பலத்த காற்று, மணிக்கு 50 கிமீ வேகம் முதல் 60 கிமீ வேகத்தில் வீசும். அதனால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் பாலச்சந்திரன் கூறினார்.
அக்டோபர் மாத மழையை பொறுத்தவரையில் தமிழகம், புதுவையில் பெய்த மழையின் அளவு 23 செமீ, இயல்பான அளவு 18 செமீ. இது இயல்பைவிட 21 சதவிகிதம் அதிகம். கடந்த 20 ஆண்டுகளை பொறுத்தவரையில் அக்டோபர் மாதம் பெய்த மழையின் அளவை பொறுத்தவரையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த மழை 6வது இடத்தில் உள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
-
நைட் முழுக்க கொட்ட போகுது மழை.. சென்னை உட்பட 26 மாவட்டங்களில் குளுகுளு கிளைமேட்! வானிலை மையம் அலர்ட் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications