நான் கடைசியா பேசுறேன்.. மும்மூர்த்திகளை மேடை ஏற்றும் விஜய்.. சாமர்த்தியம்தான்.. அசத்திட்டாரே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் மூன்று முக்கியமான தலைகளை மேடை ஏற்ற விஜய் முடிவு செய்துள்ளாராம். அதன்படி சிறப்பு ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி, கட்சியில் புதிதாக இணைந்த ஆதவ் அர்ஜுனா ஆகியோர் ஒன்றாக மேடையில் ஏற உள்ளதாக கூறப்படுகிறது.

தவெக ஆண்டு விழா நிகழ்ச்சியை நாளை நடத்த ஏற்பாடு செய்து உள்ளனர். இந்த தவெக நிகழ்ச்சியில் முதல்முறையாக கலந்துகொள்கிறார் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Edappadi Palaniswami aadhav arjuna

சமீபத்தில் பிரசாந்த் கிஷோர் உடன் நடந்த சந்திப்பில் நடிகர் விஜயிடம் அவர் முக்கியமான ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படுகிறது. .. விஜயை சந்தித்த பிரசாந்த் கிஷோர்.. தமிழ்நாட்டில் திமுக அதிமுகவின் வாக்கு வங்கி சேர்த்து மொத்தமாக 60-70% உள்ளது. ஆனால் விஜய் இதை 60%க்கும் கீழ் கொண்டு வருவார். விஜயின் கட்சிக்கு மட்டுமே அதிமுக - திமுகவின் கூட்டு வாக்கு வங்கியை உடைக்கும் சக்தி உள்ளது என்று பிகே கூறி உள்ளாராம்.

இந்த சந்திப்பு மூலம் கட்சிக்கு 3 முக்கியமான தலைகள் ஆலோசனை வழங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கட்சியை நிர்மாணிப்பது தொடர்பான ஆலோசனைகளை மட்டும் பிரசாந்த் கிஷோர் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டாவது தலை

இன்னொரு த.வெ.க.வின் தேர்தல் வியூகம் அமைக்கும் பணிகளை முன்னெடுக்கிறது ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனம். இதற்கான ஒப்பந்தத்தில் த.வெ.க. தலைவர் விஜய்யும், வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனத் தலைவர் ஆதவ் அர்ஜுனாவுக்குமிடையே நேற்று அக்ரிமெண்ட் கையெழுத்தாகியுள்ளது. ஏற்கனவே, த.வெ.க.வின் தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டு வந்த ஜான் ஆரோக்கியசாமி, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலையில் இந்த அக்ரிமெண்ட்டில் சைன் பண்ணியிருக்கிறார் விஜய்.

த.வெ.க.வின் தேர்தல் வியூகப்பணிகளை ஆதவ் அர்ஜுனா கவனிப்பார் என்பதால், ஜான் ஆரோக்கியசாமிக்கான பொசிசன் எது என்பது தெரியாத சூழல் இருந்தது. ஒரே உறையில் 2 கத்திகள் இருக்க முடியாது என்பதால், த.வெ.க.வுடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தில் இருந்து ஜான் விலகி விடுவார் என்கிற பேச்சு அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆனால், ஆதவ் அர்ஜுனாவும் ஜானும் இணைந்து பணியாற்ற வேண்டும் என விஜய் விரும்புகிறாராம். இதனால் விஜய்க்கு பர்சனல் அரசியல் ஆலோசனை, பர்சனலாக விஜய்க்கு அரசியல் ரீதியாக எப்படி பேச வேண்டும்.. எப்படி நடக்க வேண்டும் என்பது பற்றிய ஆலோசனைகளை ஜான் ஆரோக்கியசாமி வழங்குவார் என்று கூறப்படுகிறது.

மும்மூர்த்திகள்:

அதாவது கட்சியை நிர்மாணிக்க, அடிப்படையை உருவாக்க பிரசாந்த் கிஷோர்.. த.வெ.க.வின் தேர்தல் வியூகப்பணிகளை கவனிக்க ஆதவ் அர்ஜுனா.. விஜய்க்கு பர்சனல் அரசியல் ஆலோசனை வழங்க ஜான் ஆரோக்கியசாமி ஆகிய மும்மூர்த்திகள் இருப்பார்கள்.

இந்த நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் இந்த மூன்று பேரையும் மேடை ஏற்ற விஜய் முடிவு செய்துள்ளாராம். அதன்படி சிறப்பு ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி, கட்சியில் புதிதாக இணைந்த ஆதவ் அர்ஜுனா ஆகியோர் ஒன்றாக மேடையில் ஏற உள்ளார்களாம்.

இவர்கள் 3 பேரும் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் பேசுவார்கள். நிர்வாகிகளிடம் பேசுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் இவர்கள் 3 பேரும் பேசிய பின்பே நான் கடைசியாக பேசுவேன் என்று விஜய் கூறி உள்ளாராம். தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு இவர்கள் 3 பேரும் பயிற்சி வழங்குவார்கள் என்று கூறப்படுகிறது.

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+