சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மக்களே உஷார்.. பில்லி சூனியம் எடுப்பதாகக் கூறி.. ஒரே குடும்பத்திடம் இருந்து ரூ 80 லட்சம் மோசடி

Google Oneindia Tamil News

சென்னை: தாம்பரத்தில் பில்லி சூனியம் எடுப்பதாகக் கூறி 80 லட்சம் ரூபாய் ஏமாற்றி மோசடி செய்த 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் பகுதியில் பில்லி சூனியம் எடுப்பதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக நான்கு பேரைக் கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிங்கம் பட பாணியில்.. 52 மணி நேரமாக தொடரும் சைலேந்திரபாபுவின் ஸ்டார்மிங் ஆபரேஷன்- எப்படி நடக்கிறது? சிங்கம் பட பாணியில்.. 52 மணி நேரமாக தொடரும் சைலேந்திரபாபுவின் ஸ்டார்மிங் ஆபரேஷன்- எப்படி நடக்கிறது?

சென்னை

சென்னை

சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அந்தோணியம்மாள் (41), கற்பகம் (35), கற்பகத்தின் தங்கை அனிதா (29). இவர்கள் மூவரில் அந்தோணியம்மாள் மற்றும் கற்பகம் ஆகிய இருவரும் அவர்களது கணவர்களை பிரிந்து தனியாக வசித்து வருகின்றனர். இதில் கற்பகத்தின் தங்கை அனிதாவிற்கு குடும்ப பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவரும் தனியாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

பில்லி சூனியம்

பில்லி சூனியம்

இந்நிலையில் மேற்குத் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த பாத்திமா (40). அவரது தம்பி அபு ஹசன் (35), தங்கை ரஹமது பீவி நிஷா (29), அபு ஹசனின் நண்பர் ராஜேந்திரன் (41) ஆகியோர் அந்தோணியம்மாள், கற்பகம் மற்றும் அனிதா ஆகியோருக்கு யாரோ பில்லி சூனியம் வைத்திருப்பதாகவும் அதனால்தான் கணவர்களை பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

80 லட்ச ரூபாய்

80 லட்ச ரூபாய்

குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட இதுவே காரணம் என்று கூறிய அவர்கள், சூனியத்தை மந்திரம் செய்து எடுத்துவிட்டால் மீண்டும் கணவர்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று தெரிவித்துள்ளனர். பில்லி சூனியம் தான் எல்லா குடும்பப் பிரச்சினைகளுக்கும் காரணம் எனக் கூறிய அவர்கள், அவர்களிடம் தொடர்ந்து பல லட்ச ரூபாய் பணம் பறித்துள்ளனர். இப்படியே அந்தோணி அம்மாளிடம் 30 லட்சம் ரூபாய், கற்பகத்திடம் 30 லட்சம் ரூபாய் , அனிதாவிடம் ரூபாய் 20 லட்சம் என மொத்தம் 80 லட்சம் ரூபாய் ஏமாற்றிப் பெற்றுள்ளனர்.

சொகுசு பங்களா

சொகுசு பங்களா

இந்த பணத்தைக் கொண்டு இரும்புலியூர், சந்திரன் நகர், பாத்திமா தெருவில் இடம் வாங்கி, சொகுசு பங்களா ஒன்று கட்டி அதில் தற்போது பாத்திரமா குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்கள்.
பல மாதங்களாக பாத்திமாவும் அவர்களது கூட்டாளிகளும் பணத்தைப் பெற்றாலும் அந்தோனியம்மாள் குடும்பத்தில் இருந்த பிரச்சினை சரியாகவில்லை. இதனால் சந்தேகமடைந்து விசாரித்த போது தான், தங்கள் பணத்தைக் கொண்டு சொகுசு பங்களா கட்டியுள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர்.

கைது

கைது

இதன் பின்னரே தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளனர். இதையடுத்து அந்தோணியம்மாள்,கற்பகம் மற்றும் அனிதா இந்த சம்பவம் குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து நான்கு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களைத் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக அடுத்தகட்ட விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

English summary
pilli suniyam news in Chennai. Chennai latest crime news.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X