தமிழகத்தில் இன்று 483பேருக்கு கொரோனா... சென்னையிலும் குறையும் பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று 483பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.சென்னையில் 142 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 46-வது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் பாதிப்பு பதிவாகி உள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் இன்று 483பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,44,177 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 46-வது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் பாதிப்பு பதிவாகி உள்ளது. கொரோனாவுக்கு மேலும் 6 பேர் உயிரிழந்தனர்.

சென்னையில் 142 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் 90வது நாளாக 500-க்கும் கீழ் பாதிப்பு பதிவாகி உள்ளது. தொற்றில் இருந்து மேலும் 486 பேர் குணமடைந்தனர். தமிழகத்தில் மேலும் 55,128 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 1,63,41,762 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.
மேலும் 55,290 மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 1,65, 55,151 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.4,285 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.