நவம்பர் 8க்கு பிறகு தமிழகத்தில் உண்மையான தீபாவளி.. 5 தொகுதி இடைத்தேர்தல்.. அரசியல் சரவெடி ஆரம்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்து 6 மாதங்களாகியும் தமிழக அரசியலின் பரபரப்பு ஓயவில்லை. 50 ஆண்டு கால அரசியலில் எதிரும், புதிருமாக இருந்த திமுக மற்றும் அதிமுக இணைந்து தவெகவை மாறி மாறி விமர்சனம் செய்கிறார்கள். நாடே தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்துக்கான ஏற்பாட்டில் உள்ளது. அரசியல் கட்சிகளுக்கு இந்த தீபாவளி முடிந்த பிறகே, உண்மையான தீபாவளி தொடங்கவுள்ளது. விரைவில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும், அதன் பிறகு உள்ளாட்சி தேர்தலும் நடைபெறவுள்ளதாம்.

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 50 ஆண்டுகள் மாறி மாறி ஆட்சியில் இருந்த திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியை பிடித்தது. கட்சி ஆரம்பித்த இரண்டு வருடங்களில் விஜய் முதலமைச்சராக பதவியேற்றார். தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தனிப்பெரும் கட்சியாக வந்தாலும், ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை தவெகவுக்கு கிடைக்கவில்லை.

Diwali Bi Election

5 தொகுதி இடைத்தேர்தல்

பிறகு காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்தது. காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற்றனர். மதிமுகவும் தவெக கூட்டணியில் இணைந்துள்ளது. தேர்தலில் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றார். விதிகள்படி ஒரு தொகுதியில் மட்டுமே தொடர முடியும். அதனால் திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார். திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ரதலில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அதிருப்தியாகினர். எடப்பாடி பழனிசாமி மீதான கோபத்தில் தவெகவில் இணைந்து வருகிறார்கள். மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். முதல்கட்டமாக கடந்த மாதம் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

உள்ளாட்சி தேர்தல்

இதில் தவெக வெற்றி பெற்றது. சட்டமன்றத்தில் தவெகவின் பலம் 109 ஆக உயர்ந்துள்ளது. திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியை தொடர இந்த தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் தவெக உள்ளது. தவெகவுக்கு கடுமையான போட்டி கொடுக்க திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக சீமான் அறிவித்துள்ளார். கிராமப்புற உள்ளாட்சி பிரநிதிகளுக்கான பதவிக்காலம் முடிந்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. இதேபோல நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியும் விரைவில் நிறைவடைய போகிறது. மாவட்டளவிலான உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பதவிக்காலம் முடிந்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்தும் பணியை, மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

தீபாவளி முடிஞ்சதும் கொண்டாட்டம்

தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் தமிழகத்தில் மீண்டும் இடைத்தேர்தல் பரபரப்பு தொற்றி கொள்ளும் என தகவல் வெளியாகியுள்ளது. 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு நவம்பர் இரண்டாம் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளது. டிசம்பரில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளனர். அதேபோல உள்ளாட்சி தேர்தலை 2027 மார்ச் மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+