Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை ஏர்போர்ட்டில் 5 அடுக்கு பாதுகாப்பு..ஊறுகாய், ஜாம்-க்கு தடை..பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் 74-வது குடியரசு தினம் வரும் 26 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். காற்றில் பரவக்கூடிய வாயு பொருட்கள், திரவ பொருட்கள், பிசுபிசுப்பு தன்மை கொண்ட பொருட்களை பயணிகள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் குடியரசு தினம் வரும் 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லி உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டை பகுதியிலும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல், நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் பல மடங்கு அதிகரிக்கப்படுள்ளது.

பயங்கரவாத அச்சுறுத்தல்

பயங்கரவாத அச்சுறுத்தல்

குடியரசு தின விழா கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் நாச வேலைகளில் ஈடுபடும் அச்சுறுத்தல் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் இந்த பாதுகாப்பு நடைமுறைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

சென்னை செண்டிரல், எழும்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் பிரதான கேட் பகுதியில் நிறுத்தப்பட்டு தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா்கள் மூலம் பரிசோதனை செய்த பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

24 மணி நேரமும் கண்காணிப்பு

24 மணி நேரமும் கண்காணிப்பு

அதேபோல், விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலைய கார் பார்க்கிங் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நீண்ட நேரம் நிற்கும் கார்களை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டு விசாரணை நடத்துகின்றனர். கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. பயணிகளும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். பார்வையாளர்கள் வருகையும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

ஊறுகாய், அல்வா, ஜாம் ஆகியவற்றுக்கு தடை

ஊறுகாய், அல்வா, ஜாம் ஆகியவற்றுக்கு தடை

இதனிடையே பயணிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேபோல், காற்றில் பரவக்கூடிய வாயு பொருட்கள், திரவ பொருட்கள், பிசுபிசுப்பு தன்மை கொண்ட பொருட்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள், திரவ பொருட்கள் ஆகியவற்றை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 30 ஆம் தேதி வரை

ஜனவரி 30 ஆம் தேதி வரை

அதேபோல விமானங்களில் சரக்கு பார்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. பார்சல்கள் பலகட்ட சோதனைகளுக்கு பிறகே அனுமதி அளிக்கப்படுகிறது. தீவிர பாதுகாப்பு சோதனை நடத்தப்படுவதால் உள்நாட்டு பயணிகள் 1.5 மணி நேரம் முன்னதாகவும் பன்னாட்டு பயணிகள் 3.5 மணி நேரத்திற்கு முன்பாகவும் வர வேண்டும் என விமான நிலையை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். வரும் ஜனவரி 30 ஆம் தேதி வரை இந்த பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும். ஜனவரி 24, 25, 26 ஆகிய தேதிகளில் உச்சக்கட்ட அதாவது 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+