• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

550 சவரன் + சபலம்.. அழகியிடம் சொக்கி விழுந்த "புள்ளி".. குறுக்கே காதலன் வேற.. ஒரேடியா கப்பலேறிய மானம்

மாடல் அழகி ஸ்வாதிக்கு தொழிலதிபர் 550 சவரன் நகை பரிசாக கொடுத்தாராம்
Google Oneindia Tamil News

சென்னை: அழகியின் அழகில் மயங்கி விழுந்த தொழிலதிபர் சேகர், கள்ளக்காதல் பரிசாக கொடுத்த பொருட்களை கண்டு போலீசாரே மிரண்டு போய்விட்டனர்.. அதெல்லாம் என்னன்னு பாருங்க..!

Recommended Video

  மாடல் நடிகைக்காக தாயின் நகையை தூக்கி கொடுத்த பைனான்சியர்!

  சென்னையை அடுத்த பூந்தமல்லியை சேர்ந்தவர் சேகர்.. 47 வயதாகிறது.. இவர் ஒரு தொழில் அதிபர்... பூந்தமல்லி பஸ் ஸ்டாண்டில் ஒரு ஸ்வீட் கடை வைத்து நடத்தி வருகிறார்.

  இதைதவிர, பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார்... இவருக்கு ஒரு மாடல் அழகி மீது சபலம் வந்துள்ளது.. அந்த அழகியின் பெயர் சுவாதி.. 22 வயதாகிறது.

  'ஜொல்’லால் ’ஜுவல்’லை விட்ட சேகர்! ஆசை காட்டி 550 பவுனை அமுக்கிய ஸ்வாதி! ஸ்டார் பாரில் குடித்தே காலி!'ஜொல்’லால் ’ஜுவல்’லை விட்ட சேகர்! ஆசை காட்டி 550 பவுனை அமுக்கிய ஸ்வாதி! ஸ்டார் பாரில் குடித்தே காலி!

  சபலம்

  சபலம்

  சபலம் உச்சக்கட்டத்துக்கு போய்விட்டதால், அந்த பெண்ணுக்கு எதையாவது கிப்ட் தர ஆசைப்பட்டார் தொழிலதிபர் சேகர்.. அதற்காக சொந்த வீட்டிலேயே திருடிவிட்டார்.. தன்னுடைய அம்மா, மனைவி, மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து மொத்தம் 550 பவுன் நகையை ஆட்டைய போட்டுள்ளார்.. இந்த நகைகளை எல்லாம் மாடல் அழகி சுவாதியின் காலடியில் வைத்துள்ளார்.. அதுமட்டுமல்ல, காஸ்ட்லி கார் தந்துள்ளார்.. அதுமட்டுமல்ல, ரூ.30 லட்சம் பணம் தந்துள்ளார்.. அதுமட்டுமல்ல, ரூ.10 லட்சத்துக்கு பைக் வாங்கி தந்துள்ளார்.. இவ்வளவும் ஸ்வாதிக்கு தந்த "கள்ளக்காதல் பரிசு".

   டவுட் வந்த அம்மா

  டவுட் வந்த அம்மா

  வீட்டில் நகைகள் ஒவ்வொன்றாக காணாமல் போவது சந்தேகத்தை ஏற்படுத்தியதையடுத்து, கடைசியில் சேகரின் அம்மா கண்டுபிடித்துவிட்டார்.. மகன்தான் எல்லாவற்றையும் திருடியது என்பதை கண்டுபிடித்து, பூந்தமல்லி போலீசில் புகார் தந்தார்.. இந்த புகாரின்பேரில் போலீசார் சேகர், சுவாதி இருவரையும் கைது செய்து ஜெயிலிலும் அடைத்தனர்.. பிறகு சுவாதியிடம் விசாரணை நடந்தது.. ஆனால், லாபம் அடைந்த சுவாதி, வழக்கம்போல் அனைத்தையும் மறுத்தார். தொழில் அதிபர் எந்த நகையும் தனக்கு தரவில்லை என்று பிடிவாதமாக சொன்னார்.

   ஜஸ்ட் 2 நாள்

  ஜஸ்ட் 2 நாள்

  இதனால் போலீசார் வேறுவழியின்றி, சேகரிடம் இருந்து சுவாதி பறித்த நகைகளை மீட்க 2 பேரையுமே போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர்... அதன்படி சுவாதியை 5 நாட்களும், சேகரை 3 நாட்களும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டும் அனுமதி தந்தது.. 2 பேரிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.. இப்போது சுவாதியால் தப்பிக்க முடியவில்லை.. ஒன்றுவிடாமல் நடந்ததையெல்லாம் வாக்குமூலமாக சொல்ல ஆரம்பித்தார்.

   ஜொலிஜொலிப்பு

  ஜொலிஜொலிப்பு

  "என் அழகில் சேகர் மயங்கிவிட்டார்.. அவரது வீட்டில் இருந்து நகைகளை எடுத்து வந்து எனக்கு அணிவித்து அழகு பார்ப்பார்... பிறகு, அந்த நகைகளை எனக்கே கொடுத்து விடுவார்... சேகர் வாங்கி கொடுத்த நகைகள், காஸ்ட்லி பைக், பணம் இது எதுவுமே என்னிடம் இல்லை.. எனக்கு ஒரு காதலன் இருக்கிறான்.. அவன் பெயர் ஜெரீன்.. அவனிடம் அனைத்தையும் தந்துவிட்டேன்" என்று வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

   ஜெரீன் எங்கே

  ஜெரீன் எங்கே

  இப்போது போலீசார், புது கேரக்டரான அந்த ஜெரீன் வீட்டிற்கு சென்றனர்.. வளசரவாக்கத்தில் அவர் வீடு உள்ளது.. அந்த வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனையும் மேற்கொண்டனர். சேகர் வீட்டில், சுவாதிக்கு ஆசையாக சேகர் வாங்கி கொடுத்த ரூ.10 லட்சம் பைக் உட்பட 2 வாகனங்கள் இருந்துள்ளன.. அந்த வாகனங்கள் உட்பட 100 பவுன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.. ஆனால், போலீசார் தன்வீட்டிற்கு வரப்போவது முன்கூட்டியே அறிந்த ஜெரீன் எஸ்கேப் ஆகிவிட்டார்.. இப்போது ஜெரீன் குறித்து போலீசார் விசாரணை ஆரம்பமானது. அந்த விசாரணையில் அதற்குமேல் பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.

   பிளேபாய் + லவ்

  பிளேபாய் + லவ்

  இந்த ஜெரீன் ஒரு பிளேபாய் என்கிறார்கள்.. வசதியான வீட்டுப்பெண்களை குறி வைத்து அவர்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி, நெருங்கி பழகி பணம் பறிப்பவர்... அதிலும், வெளிநாடுகளில் வேலை செய்பவர்களின் மனைவி, குடும்ப பிரச்சினையில் சிக்கி தவிக்கும் வசதியான வீட்டுப்பெண்கள், கணவரை பிரிந்து வாழும் வசதியான பெண்கள் என இவர்களை மட்டுமே குறி வைத்து அவர்களிடம் நெருங்கி பழகுவார்.. அந்த பெண்களிடம் ஆதரவு வார்த்தைகளை சொல்லி, கலர் கலராக வசனங்களை பேசி தன் வலையில் விழ வைப்பார்..

  எஸ்கேப்

  எஸ்கேப்

  இதில் இளம்வயது பெண்கள் என்றால், அதிலும் அழகான பெண்கள் சிக்கினால், அவர்களை சினிமாவில் நடிக்க வைப்பதாக சொல்லி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திவிடுவாராம்.. மேலும் அந்த பெண்களை மிரட்டியும் நகை, பணத்தை பறித்து வந்துள்ளார்... இப்போது சுவாதி கொடுத்த நகை, பணம் இன்னும் ஏராளம்.. அவையெல்லாம் எங்கே என்று தெரியவில்லை.. தலைமறைவாக ஜெரீன் இருப்பதால், அவர் சிக்கினால்தான், அவையெல்லாம் எங்கே இருக்கின்றன என்று தெரியவரும்..

   ஓவர்.. ஓவர்

  ஓவர்.. ஓவர்

  அவர் சிக்கினால்தான் இதுபோல் வேறு யாரையெல்லாம் ஏமாற்றி நகை, பணம் பறித்துள்ளார் என்பதும் தெரியவரும் என்கிறார்கள் போலீசார்.. இதனிடையே, ஜெயிலில் உள்ள சேகரிடம் 3 நாட்களும், சுவாதியிடம் 5 நாட்களும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கி இருந்த நிலையில், 2 நாட்களிலேயே 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி முடித்துவிட்டனர்... இப்போது மறுபடியும் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மறுபடியும் ஜெயிலில் அடைத்துவிட்டனர்.

   கோல்ட் பிஸ்கட்

  கோல்ட் பிஸ்கட்

  சேகரிடம், சுவாதி தந்தது கிட்டத்தட்ட 550 சவரன் இருக்குமாம்.. இப்போதைக்கு 100 பவுன் மட்டும்தான் சிக்கி உள்ளது.. மீதம் 450 பவுன் நகையையும் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்... இதில் இன்னொரு விஷயமும் சிக்கி உள்ளது.. நகைகளுடன், தங்க கட்டிகளையும் சேகர், சுவாதியிடம் தந்தாராம்.. அதனால், தங்கக்கட்டிகளை மீட்பதிலும் சிரமம் ஏற்பட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.. ஒருபக்கம் விசாரணை, மறுபக்கம் ஜெரீனுக்கு வலைவீச்சு என போலீசார் மும்முரமாகி உள்ளனர்..

  English summary
  550 sovereigns: BIG presentation by Businessman and how did model girl arrest in chennai, what happened மாடல் அழகி ஸ்வாதிக்கு தொழிலதிபர் 550 சவரன் நகை பரிசாக கொடுத்தாராம்
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X