ஒடிசா ரயில் விபத்து! சென்னை உள்ளிட்ட நகரங்களிலிருந்து இயக்கப்படும் 57 ரயில்கள் ரத்து.. முழு விவரம்
சென்னை: மேற்கு வங்கத்திலிருந்த தமிழகம் நோக்கி வந்துகொண்டிருந்த ரயில் உட்பட மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஒடிசா வழியாக செல்லும் சுமார் 57 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேற்குவங்கத்தின் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படும் 12841 எனும் எண் கொண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ், வழக்கம் போல நேற்று மதியம் 3.20 மணியளவில் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டிருக்கிறது. சான்ட்ராக்சி, காரக்பூர், பல்சோர் என எல்லா ரயில் நிலையத்திலும் நின்று சென்ற இந்த வண்டி பத்ராக் ஸ்டேஷனை உரிய நேரத்தில் அடையவில்லை.

பத்ராக் ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுவடைந்திருக்கிறது. ஆனால் ரயிலுக்கு என்ன ஆனது என்கிற விவரம் யாருக்கும் தெரியவில்லை. ரயில் தாமதம் குறித்து ட்ராக் செய்யும் போது வண்டி நீண்ட நேரம் பஹானாகா எனும் கிராமத்திலேயே நின்றுக்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, ரயில் லோகோ பைலட்டை தொடர்பு கொள்ள அதிகாரிகள் முயன்றுள்ளனர். ஆனால் முடியவில்லை.
அதேபோல பெங்களூர் யஷ்வந்த்பூரிலிருந்து ஹவுரா நோக்கி வந்துக்கொண்டிருந்த மற்றொரு ரயிலும், குறித்த நேரத்தில், குறிப்பிட்ட இலக்கை அடையவில்லை. எனவே, இவர்களையும் தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர். ஆனால் முடியவில்லை. இதனையடுத்து சந்தேகம் வலுவடைந்துள்ளது. பின்னர் தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது. இதில்தான் விபத்து நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. மொத்தமாக 17 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன.
விபத்து குறித்து முதற்கட்டமாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, ஹவுரா ரயில் முதலில் தடம் புரண்டதாகவும், அதன் பெட்டிகள் பக்கத்து தண்டவாளத்தில் விழுந்திருந்த நிலையில், அதில் வந்த யஷ்வந்த்பூர் ரயில் வேகமாக மோதியதாகவும் சொல்லப்படுகிறது. மட்டுமல்லாது இந்த இரண்டு ரயில்கள் மீது மற்றொரு சரக்கு ரயிலும் மோதியுள்ளதால் விபத்து கோர விபத்தாக மாறியுள்ளது.

ஆக மூன்று ரயில்களும் அடுத்தடுத்த ரயில் நிலையத்தை குறித்த நேரத்தில் அடையாததால் அங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. மட்டுமல்லாது விபத்து நடத்த இடம் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதி என்பதால் விபத்து குறித்து வெளியாட்கள் ஒரு சிலருக்கே தகவல்கள் தெரிந்துள்ளன. இதனையடுத்து, மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. ஏராளமான மீட்புப்படையினர் மற்றும், விமானப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட பொதுமக்களும் இதில் இறங்கினர்.
இந்நிலையில் தற்போது வரை சுமார் 280 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 900க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தை தொடர்ந்து ஒடிசா மாநிலத்தில் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.
இந்த விபத்து காரணமாக ஒடிசா வழியாக செல்லும் 57 ரயில்கள் ரத்து செய்ப்பட்டுள்ளன. அதேபோல 35 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலிருந்து 10 ரயில்கள் மேற்கு வங்கத்திற்கு ஒடிசா வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் கோரமண்டல், ஹவுரா மெயில், வாரத்தில் அனைத்து நாட்களிலும், எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்-சந்த்ரகாச்சி ஜேஎன் எக்ஸ்பிரஸ், ஹவுரா ஸ்பெஷல், கன்னியாகுமரி ஹவுரா எக்ஸ்பிரஸ், புதுச்சேரி சந்த்ரகாச்சி ஜேஎன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில் சனிக்கிழமை நாட்களில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல தமிழ்நாட்டிலிருந்து அசாம் வரை இயக்கப்படும் கவுஹாத்தி ரயில், விழுப்புரத்திலிருந்து மேற்கு வங்கத்தின் புருலியா வரை இயக்கப்படும் புருலியா சூப்பர் பாஸ்ட் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் பெங்களூரிலிருந்து ஹவுரா வரை இயக்கப்படும் SMVT பெங்களூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் தூரந்தோ ரயில், மும்பையிலிருந்து ஹவுரா வரை இயக்கப்படும் ஹௌரா வாராந்திர SF எக்ஸ்பிரஸ், பெங்களூரிலிருந்து அசாம் வரை இயக்கப்படும் காமாக்கியா எக்ஸ்பிரஸ், பெங்களூரிலிருந்து பாகல்பூர் வரை இயக்கப்படும் அங்கா எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரத்திலிருந்து ஷாலிமார் வரை இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் விபத்து நடந்த பகுதியின் வழியாக பயணிக்க இருப்பதால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்துக்கு பொறுப்பேற்று வைஷ்னவ் பதவி விலக வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications