விநாயகர் சதுர்த்தி! பிள்ளையாரை அழகு பார்த்த பள்ளிக்கரணை கோகிலாவுக்கு வந்த வினை! கொஞ்ச நேரத்துல ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீட்டில் வைத்து வழிப்பட்ட பிள்ளையார் சிலைக்கு அணிவிக்கப்பட்ட 7 சவரன் தங்க நகையை மறந்து ஏரியில் கரைத்த நிலையில் இளைஞர்கள் துரிதமாகத் தேடிக் கண்டுபிடித்த செயினை பள்ளிக்கரணை குற்றப்பிரிவு ஆய்வாளர், உரியவரிடம் ஒப்படைத்தார்.

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் கோகிலா (65). இவர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனது வீட்டில் சிறிய அளவிலான விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்துள்ளார்.

vinayagar chathurthi Chennai

வழிபாட்டின் போது விநாயகர் சிலைக்குத் தனது 7 சவரன் தங்க நெக்லஸை அணிவித்து, பூமாலை போட்டுப் பூஜை செய்துள்ளார். பூஜை நிறைவடைந்ததும், வீட்டின் அருகே பள்ளிக்கரணை பிரதான சாலையில் வைக்கப்பட்டிருந்த பெரிய பிள்ளையார் சிலையின் அருகில் அந்தச் சிறிய சிலையையும் வைத்துவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.

பிள்ளையார் சிலைக்கு அணிவிக்கப்பட்ட நகையுடன் சிலை கரைக்க ஏரியில் வீசப்பட்ட செய்தியைக் கண்ட கோகிலாவுக்கு, தான் சிலைக்கு அணிவித்த 7 சவரன் நெக்லஸ் நினைவுக்கு வந்துள்ளது.

பதறியடித்துக் கொண்டு சென்று பார்த்தபோது, அங்கிருந்த சிலையையும் நகையையும் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து பள்ளிக்கரணை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஆய்வாளர் நடராஜிடம் கோகிலா புகாரளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பெரிய விநாயகர் சிலை வைத்திருந்த பலராமன் என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சிறிய விநாயகர் சிலைகள் அனைத்தும் அருகிலுள்ள பள்ளிக்கரணை ஏரியில் கரைக்கப்பட்டுவிட்டது தெரியவந்தது.

உடனடியாக காவல்துறையினர் அங்குள்ள உள்ளூர் இளைஞர்களின் உதவியுடன் பள்ளிக்கரணை ஏரியில் இறங்கித் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் முயற்சியால் ஏரியின் சேற்றில் புதைந்து இருந்த 7 சவரன் தங்க நெக்லஸ் பத்திரமாக மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட நகையை காவல் நிலையத்தில் வைத்து உரியவரான கோகிலாவிடம் ஆய்வாளர் நடராஜ் ஒப்படைத்தனர்.

காணாமல் போனதாகக் கருதிய தனது நகையைத் திரும்பப் பெற்ற கோகிலா காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தார். துரிதமாகவும் செயல்பட்டு ஏரியில் இறங்கி நகையைக் கண்டுபிடித்துக் கொடுத்த இளைஞர்களின் சிறப்பான சேவையை பாராட்டி பள்ளிக்கரணை குற்றப்பிரிவு ஆய்வாளர் மற்றும் அப்பகுதி மக்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இதே போல் கடந்த ஆண்டுகளில் மகாராஷ்டிர மாநிலத்தில் விநாயகர் விஜர்சன ஊர்வலத்தையொட்டி நீர் நிலையில் கரைக்கப்பட்ட நகைக்காக ஏரி நீர் பெருமளவில் வெளியேற்றப்பட்டு, நகை கிடைத்ததும் மீண்டும் நிரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+